தின பலன் : 11 அக்டோபர் 2017

ஆசிரியர் - Editor II

ராசி குணங்கள் மேஷம்

மேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

ராசி குணங்கள் ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்-. குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசி குணங்கள் மிதுனம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் கடகம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள் சிம்மம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசி குணங்கள் கன்னி

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ராசி குணங்கள் துலாம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் விருச்சிகம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள் தனுசு

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள் மகரம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் கும்பம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மீனம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

மதுபோதையில் சென்ற ஆசிரியர் கைது

​பொலிஸாரின் அனுமதியை மீறி சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று சோதனையிட்டபோது, குறித்த நபர் ஆசிரியரெனலும் அவர் மதுபோதையில் மோட்டார் மேலும் படிக்க...

16th, Oct 2017, 03:54 PM
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

​அரிசிக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக வணிகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 03:26 PM
பொரள்ளை - மருதானை முன்னுரிமை ஒழுங்கை நவம்பர் முதல்

 Video​பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் "முன்னுரிமை ஒழுங்கை"முறையை நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 03:25 PM
பெகோ இயந்திரம் மோதி ஒருவர் பலி

​வெல்லவ - சீரன்கொட பகுதியில் பெகோ இயந்திரத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 02:56 PM
புதிய வகை போதைபொருளுடன் இளைஞர் கைது

​திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் (25) ஒருவர் புதிய வகை போதைப் பொருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 02:54 PM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

 Photoஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:25 AM
பொண்ணுங்க கிட்ட பசங்க எதிர்ப்பாக்குற அழகு என்னன்னு தெரியுமா…!

 Photo​இயல்பாகவே, ஆண்கள் பெண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும், பெண்கள் ஆண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும் தான் இருக்க ஆசைப்படுவார்கள். பொதுவாகவே பெண்களிடம் ஆண்கள் ஹாலிவுட் அளவில் பளபளப்பான, வழுவழுப்பான அழகை எல்லாம் எதிர்பார்பதில்லை. மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:14 AM
மேலும் செய்திகள்…
மிகப்பெரிய கோப்புக்களை பாதுகாப்பாக அனுப்ப இதோ ஒரு அட்டகாசமான வசதி

 Videoமின்னஞ்சல் உட்பட ஏனைய சமூக வலைத்தள அப்பிளிக்கேஷன் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட கொள்ளளவுடைய கோப்புக்களை மாத்திரமே அனுப்ப முடியும்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:13 PM
எதிர்காலத்தில் பேஸ்புக்தான் உலகம்

 Videoஇணைய உருவாக்கத்தினால் உலகமே உள்ளங் கையில் என்று ஆகிவிட்டது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:08 PM
90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் புதிய திட்டம்

 Photo​ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக வோடபோன் நிறுவனத்தின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:53 AM
குறைந்த விலையில் Civic Type R

 Photoஹொண்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் Civic Type R எனும் கவர்ச்சிகரமான காரை அறிமுகம் செய்திருந்தது.மேலும் படிக்க...

14th, Oct 2017, 01:14 PM
மேலும் செய்திகள்…
மெர்சலுக்கு 12A சென்சார் சான்றிதழ்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி ரிலீசாக வெளிவர உள்ளது. படம் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் வெற்றிகரமாக வெளிவர உள்ளது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:34 PM
தீபாவளிக்கு ரசிகர்களை மெர்சலாக்க போகும் ஓவியா

 Photoகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்து சென்றவர் ஓவியா. இவர் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:31 PM
மணிரத்தினம் படத்தில் ஆரவ்

 Photoபிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ் தன்னை மிக சிறந்த நடிகர்கஞ் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:23 PM
மேலும் செய்திகள்…