சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தாயகத்தில் கல்வி உதவித்திட்டங்கள்

ஆசிரியர் - Editor II

செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தினர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் உதவி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கண்பார்வை குறைந்த 12 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவரும் ஆன்மீகவாதியுமான முருகசிரோன்மணி வேலுப்பிள்ளை கணேசகுமார் நேரில் பிரசன்னமாகி இவ்வுதவிகளை வழங்கினார்.

வலிவடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் ச.சஜீபன் ஏற்பாட்டில் முதலாவது நிகழ்வு ஒட்டுசுட்டான் ஒலுமடு கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

பெற்றோரை இழந்த பாடசாலை செல்லும் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வேலுப்பிள்ளை கணேசகுமார் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுமக்களும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு மையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கண்பார்வை குறைந்த 12 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வேலுப்பிள்ளை கணேசகுமார் வழங்கினார்.

மையத்தின் தவிசாளர் திரு.இ.சாந்தசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொத்துவில் மெதடிஸ்த்த தமிழ்க்கலவன் மகாவித்தியாலயம், விபுலாநந்த வித்தியாலயம், இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கணேசகுமாருடன் தமிழக கஸ்ரிபாய் குருகுலத்தின் தலைவர் வேதாரணியம் வேதரட்ணம், பாம்பன்சுவாமி ஆச்சிரமத்தலைவர் துரைக்கண்ணு தயாளன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பொத்துவில் சிவமானிட ஒன்றிய அமைப்பாளர் பா.கந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஏத்தம் பாடசாலை அதிபர் சோபியா தர்மதாஸ, கிராமசேவையாளரகளான் இ.குணசீலன், திருமதி நிரஞ்சனி சமந்த பிரசாத், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜீவா தாவீதுராஜா, கிராம முன்னேற்றச்சங்கத்தலைவர் க.கஜேந்திரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்திடாக விதவைகள் மறுவாழ்வு உதவி கல்வி உதவி, வாழ்வாதார உதவி என பல்வேறு திட்டங்கள் நீண்டகாலமாக செயற்படுத்தி வந்தபோதும் முதற்தடவையாக ஆலயத்தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் இம்முறை தான் நேரடியாகச் சென்ற உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


மதுபோதையில் சென்ற ஆசிரியர் கைது

​பொலிஸாரின் அனுமதியை மீறி சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று சோதனையிட்டபோது, குறித்த நபர் ஆசிரியரெனலும் அவர் மதுபோதையில் மோட்டார் மேலும் படிக்க...

16th, Oct 2017, 03:54 PM
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

​அரிசிக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக வணிகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 03:26 PM
பொரள்ளை - மருதானை முன்னுரிமை ஒழுங்கை நவம்பர் முதல்

 Video​பொரள்ளை மற்றும் மருதானை நகர்ப் பகுதியில் "முன்னுரிமை ஒழுங்கை"முறையை நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 03:25 PM
பெகோ இயந்திரம் மோதி ஒருவர் பலி

​வெல்லவ - சீரன்கொட பகுதியில் பெகோ இயந்திரத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 02:56 PM
புதிய வகை போதைபொருளுடன் இளைஞர் கைது

​திருகோணமலை மூதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் (25) ஒருவர் புதிய வகை போதைப் பொருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 02:54 PM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

 Photoஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:25 AM
பொண்ணுங்க கிட்ட பசங்க எதிர்ப்பாக்குற அழகு என்னன்னு தெரியுமா…!

 Photo​இயல்பாகவே, ஆண்கள் பெண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும், பெண்கள் ஆண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும் தான் இருக்க ஆசைப்படுவார்கள். பொதுவாகவே பெண்களிடம் ஆண்கள் ஹாலிவுட் அளவில் பளபளப்பான, வழுவழுப்பான அழகை எல்லாம் எதிர்பார்பதில்லை. மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:14 AM
மேலும் செய்திகள்…
மிகப்பெரிய கோப்புக்களை பாதுகாப்பாக அனுப்ப இதோ ஒரு அட்டகாசமான வசதி

 Videoமின்னஞ்சல் உட்பட ஏனைய சமூக வலைத்தள அப்பிளிக்கேஷன் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட கொள்ளளவுடைய கோப்புக்களை மாத்திரமே அனுப்ப முடியும்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:13 PM
எதிர்காலத்தில் பேஸ்புக்தான் உலகம்

 Videoஇணைய உருவாக்கத்தினால் உலகமே உள்ளங் கையில் என்று ஆகிவிட்டது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:08 PM
90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் புதிய திட்டம்

 Photo​ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக வோடபோன் நிறுவனத்தின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:53 AM
குறைந்த விலையில் Civic Type R

 Photoஹொண்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் Civic Type R எனும் கவர்ச்சிகரமான காரை அறிமுகம் செய்திருந்தது.மேலும் படிக்க...

14th, Oct 2017, 01:14 PM
மேலும் செய்திகள்…
மெர்சலுக்கு 12A சென்சார் சான்றிதழ்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி ரிலீசாக வெளிவர உள்ளது. படம் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் வெற்றிகரமாக வெளிவர உள்ளது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:34 PM
தீபாவளிக்கு ரசிகர்களை மெர்சலாக்க போகும் ஓவியா

 Photoகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்து சென்றவர் ஓவியா. இவர் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:31 PM
மணிரத்தினம் படத்தில் ஆரவ்

 Photoபிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ் தன்னை மிக சிறந்த நடிகர்கஞ் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:23 PM
மேலும் செய்திகள்…