சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட நாள் இன்று

ஆசிரியர் - Editor II

தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்தவர் 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' என அழைக்கப்பட்ட வீரப்பன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்திய வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 18.

1952-ம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி பிறந்த வீரப்பன் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வரலாற்று விநோதம்தான்.

1972-ம் ஆண்டு சந்தன மரக் கடத்தலுக்காக முதன் முதலில் வீரப்பன் கைது செய்யப்படுகிறார். வீரப்பனை நாடறிய செய்தது தமிழக போலீஸ் அதிகாரி சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கொலை செய்த சம்பவம்.

அதேபோல் 1991-ல் சீனிவாஸ், ஹரிகிருஷ்ணா என அடுத்தடுத்த வனத்துறை அதிகாரிகள் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர்.

தமிழக, கர்நாடகா அதிரடிப்படைகள்

இதன்பின்னர் வீரப்பனை கைது செய்ய அதிரடிப்படையை அமைத்தது தமிழக அரசு. கர்நாடகா அரசும் வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையை உருவாக்கியது.

அதிரடிப்படை அட்டூழியம்

இரு மாநில அதிரடிப்படைகளும் கூட்டாக பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தேடுதல் வேட்டையை நடத்தின.

இந்த தேடுதல் நடவடிக்கையில் அப்பாவி மலைவாழ் மக்கள் பலரும் நாசமாக்கப்பட்டனர். தமிழக வனத்துறையின் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகிப் போன வாச்சத்தி பலாத்கார சம்பவமும் இந்த கால கட்டத்தில்தான் நிகழ்ந்தது.

வீரப்பன் கேசட்

ஆனால் வீரப்பன் சிக்கவே இல்லை. சந்தன மரக் கடத்தல், யானை தந்தம் கடத்தல் ஆகிய சட்டவிரோதங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரப்பன் ஆட் கடத்தல் எனும் அடுத்த படியையும் தொட்டார்.

தமக்கு வேண்டியது கிடைக்க அப்போது கடத்தப்பட்ட உறவினர்களுக்கு கேசட் மூலமாக நிபந்தனைகளை அனுப்புவது வீரப்பன் பாணி. தமக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பிணைக் கைதியை பாதுகாப்பாக அனுப்புவதும் வீரப்பன் பாணி.

தமிழ்த் தேசிய இயக்கங்கள்

தமிழகம், கர்நாடகா அரசுகளால் எட்ட முடியாத வீரப்பனை நக்கீரன் பத்திரிகை நேரில் சந்தித்தது. நக்கீரன் ஆசிரியர் கோபால், வீரப்பனை சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகள் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பெரும் பரபரப்பை கிளப்பின. ஒரு கட்டத்தில் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு வீரப்பன் அடைக்கலமும் கொடுத்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்

அப்போதுதான் கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினார். தமிழ்த் தேசிய கோரிக்கைகளுக்காக ராஜ்குமாரை கடத்தியதாகவும் அறிவித்தார் வீரப்பன். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ராஜ்குமார் கடத்தல் சம்பவம்.

ராஜ்குமாரை விடுவிக்க கோரிக்கைகள்

108 நாட்கள் ராஜ்குமாரை தம் வசம் பிணைக் கைதியாக வைத்திருந்தார் வீரப்பன். முதலில் நக்கீரன் ஆசிரியர் கோபால், பின்னர் பழ. நெடுமாறன் தலைமையிலான குழு, கொளத்தூர் மணியின் முயற்சிகள் என ராஜ்குமாரை மீட்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமது சில கோரிக்கைகள் நிறைவேறிய நிலையில் ராஜ்குமாரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார் வீரப்பன்.

வீரப்பன் சுட்டுக் கொலை

பின்னர் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதியன்று வீரப்பனும் அவரது கூட்டாளிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் அறிவித்தார். வீரப்பன் சகாப்தம் முடித்துவைக்கப்பட்டதற்காக அதிரடிப்படையினருக்கு தமிழக அரசு பரிசுகளை அள்ளித் தந்து மகிழ்ச்சியடைந்தது.

- One India

வவுனியாவில் வீதியில் மது அருந்திய இளைஞர்கள் கைது

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நால்வரை நேற்று நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:42 PM
காணிப் பிரச்சினையில் ஏற்பட்ட கைகலப்பு: ஒருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் காணிச்சண்டை காரணமாக நபர் ஒருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியவரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:34 PM
வவுனியா ஏ9 வீதியில் 1100 மரக்கன்றுகள்

தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனப்பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஏ9 வீதியில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:27 PM
ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

​2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:19 PM
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர்வெட்டு; விபரம் இதோ

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:18 PM
ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

​2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:19 PM
10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் தீமூட்டி எரிப்பு

 Photo​யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் நேற்று (23) தீமூட்டி அழிக்கப்பட்டது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 12:19 PM
வரலாற்றில் இன்று : 24.11.2017

 Photo​நவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

24th, Nov 2017, 10:38 AM
ரணில் - மோடி சந்திப்பு

 Photo​இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.மேலும் படிக்க...

23rd, Nov 2017, 03:25 PM
மேலும் செய்திகள்…
யாழ்ப்பாணத்தில் சுனாமியா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 Photoயாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 02:07 PM
இன்று பிற்பகல் மழை பெய்யலாம்!

 Photo​இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர், மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
வீண்விரயமாகும் நீரின் அளவை குறைக்க புதிய சாதனம் உருவாக்கம்

 Photoஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் வருகையின் பின்னர் மனித வாழ்வில் அனேகமான விடயங்கள் மிகவும் இலகுபடுத்தப்பட்டுவருகின்றனமேலும் படிக்க...

23rd, Nov 2017, 04:12 PM
கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்கக்கூடிய டயர்கள்: நாசாவின் அதிரடி

 Photoவிண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படும் விண்கலங்கள் வேற்றுக் கிரகங்களின் கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.மேலும் படிக்க...

23rd, Nov 2017, 04:10 PM
ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை அடுத்து மைக்ரோசொப்ட்டின் அதிரடி நடவடிக்கை

 Photoமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் அப்பிளிக்கேஷனை சீனாவின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:04 PM
புதிய நிறத்தில் விற்பனையாகும் சியோமி Mi A1 - Lankasri News

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான Mi A1-ன் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:02 PM
மேலும் செய்திகள்…
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஜூலி-2 படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:40 PM
இன்று மாலை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:39 PM
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன்

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:38 PM
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே அனைவரும் அறியும் வகையில் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு ரைசா, மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:37 PM
மேலும் செய்திகள்…