தீரன் அதிகாரம் ஒன்று - திரை விமர்சனம்

ஆசிரியர் - Editor II
தீரன் அதிகாரம் ஒன்று - திரை விமர்சனம்

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி நடிக்க, "டிரீம் வாரியர் பிக்சர்ஸ்" பேனரில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்து வழங்க, "சதுரங்க வேட்டை" வித்தியாச வெற்றிப்பட இயக்குனர் H.வினோத்தின் எழுத்து, இயக்கத்தில் வந்திக்கும் விறு விறு ரியல் போலீஸ் ஸ்டோரிதான் "தீரன் அதிகாரம் ஒன்று".

தமிழ் சினிமாவில் இதற்கு முன், எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன.... என்றாலும், அதில், பெரும்பாலானவை, ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, அல்லது, தன் குடும்பத்தினரைக் கொன்றவனை பழி வாங்கத் துடிக்கும் போலீஸ் நாயகரைத் தடுக்கும் அரசியல்வாதி.... இவர்களை ஒரு மாதிரி போராடி ஒரு வழியாக அடக்கி ஒடுக்கும் போலீஸ் ஹீரோ.... எனும், கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் கூடிய கதைகளாகத்தான் இருக்கும்.

ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, இந்த 'தீரன்அதிகாரம் ஒன்று' படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.

'சதுரங்க வேட்டை' படத்தில் ஒரு ஏமாற்றுக்காரனை நாயகனாக வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் H.வினோத், இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் தியாகத்தை நாமும் 'ராயல் சல்யூட்' அடித்து பாராட்டும்படி படம் பிடித்திருக்கிறார்.

கதைப்படி, மிகவும் நியாயமான நேர்மையான இளம் டிஎஸ்பி தீரன் திருமகன் - கார்த்தி அவர் போலீஸ் டிரெயினிங் முடித்து, கண்டவுடன் காதல் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண் ப்ரியா - ரகுல் ப்ரீத் சிங்கை, தன் மனம் விரும்பியபடியே கைப் பிடித்த கொஞ்ச நாட்களிலேயே.

தன்னுடைய நேர்மை மற்றும் கடமை உணர்வால் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களுக்கும் தூக்கி அடிக்கப்படுகிறார். ஒரு வழியாக ஒரு கட்டத்தில் அவர் அங்கு சுத்தி, இங்கு சுத்தி, திருவள்ளூர் மாவட்டபொன்னேரி சரக டிஎஸ்பி-யாக நியமிக்கப்படுகிறார். 

அப்போது நெடுஞ்சாலைக்கு அருகில் தனியாக இருக்கும் பெரிய வீடுகளில் அடிக்கடி நடக்கும் அரக்கத்தனமாக கொலை, கொள்ளைகளைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறார். அத்தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏவை அவரது வீட்டில் கொள்ளையடிக்க புகுந்தபோது அந்தக் கொள்ளை கும்பல், கொடூரமாக தாக்கி கொலை செய்த பிறகுதான் அரசு தரப்பில் விசாரணையை தீவிரப்படுத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து வட இந்தியாவில் பதுங்கியிருக்கும் அந்த கொள்ளைக் கூட்டத்தைக் தேடிப்பிடிக்க, தன் தலைமையில் தனி போலீஸ் படையுடன் கார்த்தி களம் இறங்குகிறார்.

அச்சமயத்தில், அந்த விசாரணைக்கான தேடுதல் வேட்டைக்கு கார்த்தியின் டீமில் இருக்கும் இன்ஸ்பெக்டரான போஸ் வெங்கட், வட இந்தியாவுக்கும், கார்த்தி லோக்கலில் தீவிர தேடுதல் வேட்டைக்கும் சென்றிருக்கும் நேரத்தில் போஸ் வெங்கட் குடும்பத்தார், அந்தக் கொள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ ஒடிய கார்த்தியின்மனைவி ரகுல் ப்ரீத் சிங்கும் பலமாகத் தாக்கப்படுகிறார்.

இதன் பின் வெகுண்டெழும் டிஎஸ்பி தீரன் திருமகன் - கார்த்தி, கொள்ளையர்களை அவர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக வாழும் வட இந்தியா சென்று கூண்டோடு பிடித்தாரா? கொடூர தண்டனைதந்தாரா.? என்பதுதான் "தீரன் அதிகாரம் ஒன்று". படத்தின் திக் திக் திருப்பங்கள் நிரம்பிய வித்தியாச விறு விறு கதையும், களமும்!

டி.எஸ்.பி.தீரன் திருமகன் என்ற பெயருக் கேற்றபடி தீரமாகசெயல்படும் டிஎஸ்பியாக கார்த்தி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய அதிகாரத்துடன் நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

ரகுல் ப்ரீத்துடனான ஆரம்ப காதல் காட்சிகளில் எக்கச்சக்க ரொமான்ஸ் காட்டும் கார்த்தி, பின்னர் டி.எஸ்.பி ஆனதும், தன்னிடம் கொட்டி கிடக்கும் அந்த வேகம், மற்றும் துடிப்பால் ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். காக்கி சட்டைப் போட்ட கார்த்திக்கு சிறுத்தைக்குப் பின் மற்றுமொரு ஹிட் இந்தப் படம். என்றால் மிகையல்ல.!

ப்ரியா எனும் கார்த்தியின் காதல் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், பலமுறை பனிரெண்டாம் வகுப்பு பெயிலான ஒரு பெண் எப்படிப்பட்ட மன நிலையில் இருப்பார் என்பதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் அம்மணி. வாவ்! கார்த்தியுடனான காதல் காட்சிகளில் அம்மணி காட்டியிருக்கும் நெருக்கம், ரசிகனுக்கு செம கிறக்கம்.

படத்தில் வில்லனாக வரும் அபிமன்யு சிங், கொடூர வட இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் இப்படித்தான் இருப்பாரோ என நம்மை பயமுறுந்துகிறார். கார்த்தியின் தனிப்படையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மனோபாலா, சத்யன், வர்கீஸ் மேத்யூ, ரோஹித் பதக், நாரா ஸ்ரீனிவாஸ், சுரேந்தர் தாக்கூர், பிரயா ஸ்மன், கிஷோர் கன்டம், ஜமில் கான், ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்சன், கல்யாணி நட்ராஜன், சோனியா, பிரவிணா, அபிராமி உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

அதிலும், "கடக் கடக் கங்கணா....", ஹிந்தி குத்துப் பாடலுக்கு ஆடும் ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்சன், செம்மையோ செம. வாவ்!

கதை முழுதாக வைத்ததற்குப் பதிலாக திலீப் சுப்பராயனின் ஆக்ஷ்ன் இயக்கம், அதிரடி இயக்கம். என்பதும் T.சிவனான்டேஸ்வரனின் படத்தொகுப்பில்.,இடைவேளை வரை காட்சிகள் நகர்வதே தெரியவில்லை.

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்காதல் காட்சிகள், கொள்ளையர்களின் அட்டகாசம், கார்த்தியின் தேடுதல் ஆரம்பம் என மொத்தப் படமும் விறுவிறுப்பாக நகர்வதும்... படத்திற்கு பெரும் பலம்!

சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு, படத்திற்கு மேலும் திக்.திக்.பக்,பக்... சேர்த்திருக்கிறது. பலே, பலே.

ஜிப்ரான் இசையில் பின்னணி இசை படத்தின் வேகத்தை பரபரப்புடன் நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. "லாலி, லாலி...", ''செவத்த புள்ள... புள்ள...'', "கடக் கடக் கங்கணா....", "ஒசாத்தியே" உள்ளிட்ட பாடல்கள் சுபராகம்.

"சதுரங்க வேட்டை" இயக்குனர் H.வினோத்தின் எழுத்து, இயக்கத்தில், "ஒரு பிரண்டு 2அண்ணன், 4தம்பி, லவ்வுன்னு வந்துட்டா நூறு மாமாக்களுக்கு சமம்.", "நாம கெட்டவங்க கிட்டேயிருந்து நல்லவங்களை காப்பாத்தறத விட்டுட்டு.... நல்லவங்க கிட்டேயிருந்து கெட்ட வங்களை காப்பாத்துற வேலையில்ல பார்க்குறோம்..." என்பது உள்ளிட்ட ஜாலியான, கேலியான இப்படத்திற்கும், கதைக்கும் நியாயம் சேர்க்கும் வசனங்களும், ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிஜ வழக்கின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

என்பதும், இப்படத்தின்கடைசியில் இப்படி வேலை செய்த அதிகாரிகளுக்கு எந்த விருதும், பதவி உயர்வும் வழங்கப்படவில்லை... என்ற அதிர்ச்சியான தகவலும் ரசிகனை யோசிக்க வைப்பதே இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்!
.
நியாயமான, நேர்மையான இளம் அதிகாரிகளின் கடமை உணர்வில், ஆளும் வர்க்கத்தினரும், அதிகார வர்க்கத்தினரும் குறுக்கிடாமல், குளறுபடி செய்யாமல் இருந்தாலே இந்தியாவில் எப்பேற்பட்ட குற்ற செயல்களையும் கண்டுபிடித்து உரிய தண்டனை தர முடியும் எனும் கருத்தோடு வந்திருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு, அதிகாரம் இரண்டும் உடனடியாக ஆரம்பமாகலாம்.... எனும் அளவிற்கு தீரன் அதிகாரம் ஒன்று தீர்க்கமாக வெற்றி பெறும் எனலாம்!

ஆக மொத்தத்தில், "தீரன் அதிகாரம் ஒன்று' - படத்தின் வெற்றி., 'தீர்மானிக்கப்பட்ட ஒன்று!"

இளைஞர் ஒருவர் கழுத்தை வெட்டி தற்கொலை

​வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:55 PM
பிறந்த உடனேயே குழந்தையை மண்ணில் புதைத்த மூன்று பிள்ளைகளின் தாய்

​குழந்தை ஒன்றை பிறந்த உடனேயே குழிதோண்டி புதைத்த தாய் ஒருவர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:52 PM
கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது

கொஸ்லந்த, உனகந்த பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை நடத்திய சோதனையின் போது சட்டவிரோமாக பயிர்செய்கை செய்யப்பட்ட கஞ்சா தோட்டத்தின்மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:19 PM
கண்டிக்கு விஜயம் செய்துள்ள மத்திய மாகாண ஆளுநர்

கண்டி இன வன்முறைகாரணமாக பாதிக்கப்பட்ட சமய நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களை பல்வேறு இனத்தவர்களும் அமைப்புக்களும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து புனரமைத்து வருகின்றன.மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:45 PM
ஜெனீவாவில் தமிழ் , சிங்கள தரப்பினருக்கு இடையில் கடும் வாதம்

 Video​ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பக்க அமர்வொன்றில் தமிழ் தரப்பினருக்கும்மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:40 PM
ஜெனீவாவில் தமிழ் , சிங்கள தரப்பினருக்கு இடையில் கடும் வாதம்

 Video​ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற பக்க அமர்வொன்றில் தமிழ் தரப்பினருக்கும்மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:40 PM
சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

 Photoயாழ்ப்பாணம் கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 12:13 PM
வாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்

 Photo​ஜாஎல பகுதியில் உள்ள தொழிற்சலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:49 AM
விபத்துக்கு உள்ளான BMW i8 : காரின் உரிமையாளர் விளக்கமறியலில்

 Photo​தியவண்ணா ஓயாவில் விபத்துக்கு உள்ளாகியிருந்த BMW i8 ரக சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:47 AM
மேலும் செய்திகள்…
அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய மகள் : ஏன் தெரியுமா ?

 Photo  Videoஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் மேலும் படிக்க...

19th, Mar 2018, 10:31 AM
போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது

 Photo​போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க...

18th, Mar 2018, 12:44 PM
ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922

​பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:33 AM
வெயிலுக்கு இதமான புதினா லஸ்ஸி

​கோடைக்காலத்தில் குடிக்க இதமானது லஸ்ஸி. இன்று புதினா சேர்த்து குளுகுளு லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:10 AM
மேலும் செய்திகள்…
மேகத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்: மக்களிடம் கோரிக்கை விடுத்த நாசா

 Photoஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:45 AM
மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:41 AM
தானியங்கி கார் பரிசோதனையில் பறிபோனது பெண்ணின் உயிர்

 Photoகூகுள் உட்பட பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தானியங்கி கார் வடிவமைப்பில் முனைப்புக் காட்டி வந்தன.மேலும் படிக்க...

20th, Mar 2018, 11:40 AM
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்கள்

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி பாரிய விண்கற்கள் வருகின்றமை சம காலத்தில் அடிக்கடி நிகழ்கின்றது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:05 PM
மேலும் செய்திகள்…
சிறுநீரக செயலிழப்புக்கு இவைதான் காரணம்

இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன,மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:43 PM
இந்த அறிகுறிகள் தெரிந்தால் திடீர் மரணம் நிகழும்

ஒருவர் திடீர் என்று மரணம் அடைவதற்கு இந்த அறிகுறிகள் கூட காரணமாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தெரிந்தால் உடனே வைத்தியரை நாடவும்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:14 PM
சளி பிடுத்திருக்கா அத வெளியேற்றணுமா? இத செய்யுங்க

 Photo​தற்போது மார்கழி மாதம் என்பதால் பனி அதிகமாக பொழியும். இந்த பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:10 PM
ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா

கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:20 PM
மேலும் செய்திகள்…
இடுப்பில் புலி டாட்டூ வரைந்துகொண்ட நடிகை

​முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 02:07 PM
ரூ 200 கோடி பட்ஜெட் படத்தில் நடிகை நயன்தாரா

​நயன்தாரா தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது.மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:27 PM
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்

 Photo​பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். மேலும் படிக்க...

20th, Mar 2018, 01:09 PM
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய விஸ்வாசம் படம்

​தல அஜித் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.மேலும் படிக்க...

20th, Mar 2018, 12:58 PM
மேலும் செய்திகள்…