240240240240

கணவரை குறை கூறி மனைவி மனம் நிறையாது..

ஆசிரியர் - Editor II

திருமண வாழ்க்கையை சிதைக்கும் சின்னச் சின்ன விஷயங்களை சரி செய்து கொண்டால் வாழ்க்கை வளமாகும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கணவரை குறை கூறி மனைவி மனம் நிறையாது..

ஆயிரம் ஆசைகள், கனவுகளுடன் திருமண பந்தத்தில் இணையலாம். ஆனால், ஆனந்தமாகச் செல்லும் வாழ்க்கைக் கப்பலை, சின்ன விஷயம் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஓட்டைகள் அப்படியே கவிழ்த்துப் போட்டுவிடும். மனதை கொல்லும் ஒற்றை வார்த்தையால் உறவை முறித்துக் கொண்டவர்கள் உண்டு. கொழுத்திப் போடும் நட்பு வட்டாரம், விட்டொழிக்க முடியாத வேண்டாப் பழக்கம், சந்தேக நடத்தை, நாடக வாழ்க்கை என எத்தனையோ விஷயங்கள் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது.

வாழ்க்கைப் பந்தத்தை சிக்கலுக்குள்ளாக்கும் அத்தகைய பிரச்சினைகள் உங்களிடம் இருக்கிறதா? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்....

நண்பர்கள்:

நட்பு, வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு பின் நட்பிற்கு எல்லை வகுக்க வேண்டும். நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் குடும்ப நலன் கருதி அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ‘நான் எப்போதும்போல நட்பைத் தொடர்கிறேன்’ என்று கூறிக் கொண்டு நள்ளிரவு வரை அரட்டையடித்துவிட்டுத் திரும்புவது, ‘எனக்கு நட்பே முக்கியம்’ என்று மனைவியிடம் ‘பஞ்ச்’ வசனம் பேசுவது போன்றவை குடும்ப வாழ்க்கையில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

‘நானும் நட்பு பாராட்டுகிறேன்’ என்று மனைவியும் கிளம்பிச் சென்று நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்பினால், எந்தக் கணவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே ஆண்களின் நட்பு வட்டமும், குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தப்பட வேண்டியதுதான். அம்மா, அப்பா, குடும்ப உறவு என அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வந்திருக்கும் மனைவிக்காக, ஆண்களும் நட்பை கொஞ்சம் தூரத்தில் வைத்திருப்பது ஒன்றும் தவறில்லை. திருமணத்திற்குப் பின் நட்பின் வட்டம் சுருங்குவதை நண்பர்கள் யாரும் தவறாக நினைத்துவிட மாட்டார்கள். பக்குவமாகப் புரிந்து கொண்ட நட்பு வட்டம் வளரவே செய்யும். பக்குவமற்ற நட்பை முறிக்காவிட்டால், திருமண உறவுதான் முறியும்.

சமூக வலைத்தளம்:

ஆண்- பெண் பேதமில்லாமல் சமூக வலைத்தளங்களில் மூழ்கி போகிறவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் புகுந்துவிட்டால் சுற்றி இருக்கும் உலகத்தை மறந்து போகிறவர்கள் அனேகம். திருமணத்திற்குப் பிறகும் இப்படி சமூக வலைத்தளத்தில் அடிமையாக இருப்பது பிரச்சினையை வளர்க்கும். சமூக வலைத்தளத்தில் உள்ள நட்பு வட்டாரம், தேவையற்ற மெசேஜ்கள் நிறைய குடும்பங்களில் சந்தோஷத்தை கெடுத்துள்ளது. என்னதான் பயனுள்ளதாக இருந்தாலும், குடும்பத்தைக் கடந்த முக்கியமான கடமைகள் எதுவும் சமூகவலைத்தளத்தில் இல்லை என்பதை உணருங்கள். சமூக வலைத்தளத்திற்கு கொடுக்கும் மரியாதையை, ஒதுக்கும் நேரத்தை எதிர்கால திட்டமிடலுக்கு ஒதுக்குங்கள். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த, உறவுகளை புரிந்து கொள்ள அந்த நேரத்தை பயன்படுத்துங்கள்.

வெறுப்பு :

வெறுப்பு எவ்வளவோ உறவுகளை கருவறுத்துள்ளது. கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் வெறுப்புடன் அணுகக்கூடாது. துணையின் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வெறுப்பின் கணையை வீசக்கூடாது. வெறுப்பு எப்போதும் பொறுப்பை மறக்கச் செய்துவிடுகிறது, பொறுமையையும் இழக்கச் செய்துவிடுகிறது. எனவே வெறுப்பின்றி பிரச்சினையை கையாண்டு தீர்வினைத் தேடவேண்டும். பிரச்சினையான நேரத்தில் பேசுவதை ஒத்திப்போட்டுவிட்டு, சிறிது ஓய்வுக்குப் பின் பேசினால் இருவர் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, சுமுக முடிவு கிடைக்கும். வெறுப்பை வெறுக்க கணவனும், மனைவியும் கற்றுக்கொள்ளவேண்டும்.

பொய் சொல்லுதல்:

தேவையற்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பொய் சொல்வது சிலரது வழக்கம். பொய் சொல்வதை சாமர்த்தியமாகவும் நினைத்துக் கொள்வார்கள். பொய்யின் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் உணர்வதில்லை. பொய் பேசுவது தெரிந்து போனால் பின்னர் அவர் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அவர் மீது நம்பிக்கை வருவதில்லை. உண்மையைப் பேசும்போதும் புலி வருகிறது கதையாக எடுபடாமல் போய்விடும். பொய்யினால் வாழ்க்கை பொய்யாகிப்போனால் அப்போது வருத்தப்பட வேண்டியிருக்கும். மெய்போல பொய்பேசும் தவறான பழக்கத்தை கைவிடுவது வாழ்க்கையை வளமாக்கும்.

அலட்சியப்படுத்துவது:

துணையின் பேச்சை காதிலேயே வாங்காமல் அலட்சியப்படுத்துவது எரிச்சலை உண்டுபண்ணும். விரிசலுக்கு வழிவகுக்கும். மனைவி மிக முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று குறுக்கிட்டு ‘ஆமா.. நீ என்ன சொன்னாய்?’ என்று கேட்பது அலட்சியத்தின் வெளிப்பாடுதான். இது மனைவியை எரிச்சல்படுத்தும். இந்த அலட்சியம் எவ்வளவு மரியாதை குறைச்சலான விஷயம் என்பதை உணர வேண்டும். ‘என்ன பேசினாலும் நான் காது கொடுத்தே கேட்கமாட்டேன்’ என்பது போன்ற இந்த அலட்சியப் போக்கு, பேசுபவருக்கு மனதில் ஆறாத காயத்தை உருவாக்கிவிடும். ஆனந்த வாழ்வுக்கு உலை வைத்துவிடும்.

பொய்யான வாக்குறுதி:

வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். முடியாவிட்டால் வாக்குறுதி தராமல் இருப்பதே நல்லது. திருமண பந்தத்தில் வாக்குறுதிகள் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும். அதை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் மனஸ்தாபம் ஏற்படும். வாக்குறுதி தரும்போது இருக்கும் மனநிலை, பின்னர் சூழ்நிலையால் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை வரலாம். எனவே கூடுமானவரை வாக்குறுதிகளை தவிர்க்கலாம். அல்லது எப்பாடுபட்டேனும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒப்பீடு:

துணையை எப்போதுமே ‘அவர் களைப் பார், இவர்களைப் பார்’ என்று யாரோடும் ஒப்பீடு செய்யாதீர்கள். பொருளாதார விஷயத்தில் கணவரை மற்றவருடன் ஒப்பிடுவதும், அழகு, திறமையில் மனைவியை மட்டம்தட்டி மற்றவர்களுடன் ஒப்பிடுவதும் அனேக குடும்பங்களில் பிரச்சினைகளை பெரிதாக்கி இருக்கிறது. ஒப்பீடு மிக ஆபத்தானது. மற்றவரை ஆழ்ந்து கவனித்து தனது துணையுடன் ஒப்பிடுவது, சந்தேகத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கும். இது பிரிவினைக்கே வழிவகுக்கும். ஒருவர் மற்றவரின் திறமையையும், தகுதியையும் வளர்க்க தோள்கொடுப்பதே துணைவரின் கடமை என்பதை இருவரும் உணர வேண்டும்.

வேண்டாத வார்த்தைகள்:

வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துபோகும். அதற்காக ஆறாத வடுவை உருவாக்கும் வேண்டாத வார்த்தைகளை பேச வேண்டாம். பதிலுக்குப் பதில் பழிச் சொற்களை உதிர்க்க வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் திருமண வாழ்க்கையை தொடர்பு படுத்தி, கேவலப்படுத்தி பேச வேண்டாம். நிம்மதியைக் கெடுக்கும் வார்த்தைகள் எத்தனையோ பேரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி இருக்கிறது. கோர்ட்டு படியேற வைத்திருக்கிறது. உயிரையும் பறித்திருக்கிறது. எனவே பேசும் வார்த்தையில் கவனம் வையுங்கள். பேசக் கூடாத வார்த்தைகளை பிரயோகப்படுத்த வேண்டாம்.

சொல்லிக்காட்ட வேண்டாம்

நடந்து முடிந்த விஷயத்தைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டாம். ஒரு முறை நடந்த தவறை மீண்டும் மீண்டும் குத்திக் காட்டி பேச வேண்டாம். கணவரை குறைகூறி மனைவி மனம் நிறையப் போவதில்லை. வாழ்வின் நிலையும் உயரப்போவதில்லை. எதையும் திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு பிரச்சினைக்கு தீர்வே இல்லாமல் இழுத்துக்கொண்டே போக வேண்டாம்.

திருமண வாழ்க்கையை சிதைக்கும் சின்னச் சின்ன விஷயங்களை சரி செய்து கொண்டால் வாழ்க்கை வளமாகும்.

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…