ரசிகர்கள் எதிர்பார்த்ததை செய்ய போகும் ஓவியா

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறியும் நடிகையானார் ஓவியா, திரையுலக வரலாற்றிலேயே இவருக்கு தான் முதல் முதலாக ஆர்மி அமைப்பும் உருவானது.
இதனையடுத்து இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு ரசிகர்களுடன் ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் உரையாடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
நீண்ட நாட்களாக ரசிகர்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்காத ஓவியா முதல் முறையாக ரசிகர்களுடன் வரும் டிசம்பர் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு ட்விட்டரில் உரையாட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.