தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி என்ன செய்தார்கள்? : அங்கஜன் இராமநாதன்

ஆசிரியர் - Editor II

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை ஜனாதிபதி சட்டத்தரணி யாக்குங்கள் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை கேட்கும் இரா.சம்மந்தன் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருக்கும் நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச இயலாது என தெரிவிக்கின்றார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி என்ன செய்தார்கள்?

தமிழ் மக்களின் உரிமையை தமிழ்தேசிய கூட்டமைப்பு வெறும் பேச்சிலும் ,பேப்பரிலும் வைத்திருந்து மக்களுக்கு என்ன பயன்? என சிறீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்க்காக பலர் முன்வந்திருக்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் நாங்கள் போகும் பாதை மிக சரியானதாக உள்ளமையே. எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உண்மையாகவும், எதார்த்தமாகவும் மக்களுக்கு என்ன செய்ய இயலுமோ அவற்றை மட்டுமே கூறியிருக்கின்றோம். சமகாலத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும், தமிழ் தலைவர்களின் எதிர்பார்ப்புக்களுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றது.

கிராமிய மட்டத்தில் வறுமை, வேலையின்மை, நடத்தை பிறழ்வுகள், என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் தொடர் பாக பேசுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. குறிப்பாக வேலையற்ற இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக பேசுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின்

தலைவர் இரா.சம்மந்தனிடம் கேட்டபோது பேச முடியாது, நாங்கள் உரிமைகளை மட்டுமே பேசுவோம் என்றார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை ஜனாதிபதி சட்டத்தரணியாக்குங்கள் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை கேட்கிறார்கள். மேலும் கடந்தகாலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சகல பிரதேச சபைகளையும் கைப்பற்றியிருந்தது.

ஆனால் என்ன மாற்றம் இங்கே நிகழ்ந்தது? ஆக மொத்தத்தில் தமிழ் மக்கள் அன்றாடம் உரிமைகளை இழந்து கொண்டிருக்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உரிமைகளை வாய் பேச்சிலும், பேப்பரிலும் வைத்திருந்து என்ன பயன்? எனவே மக்கள் பின்நோக்கி பார்த்து சில தீர்மானங்களை எடுக்கவேண்டும். மேலும் இப்போது கூட்டமைப்பு, முன்னணி, விடுதலை கூட்டமைப்பு என பல கட்சிகளாக நின்று தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

ஆனால் ஒரு காலத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தவர்கள். கூட்டு களவாணிகள். இப்போது சண்டையிட்டு கொள்வது மக்களுக்காக அல்ல தங்களுக்காகவே. இதனைவிட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஆணை கொடுங்கள் என கேட்கிறார்கள். எனவே மக்கள் இவர்கள் விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும். மேலும் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளையை செய்தவர்களும் இப்போது வந்து நிற்கிறார்கள். அவர்களையும் மக்கள் கவனிக்கவேண்டும். நாங்கள் மக்களுக்கான அனைத்தையும் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.

செய்தியாளர் : த.வினோயித்

Tamilan24

மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:54 PM
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:31 PM
100 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது கல்முனையில் சம்பவம்

​100 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கல்முனை வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் பஸ் நேரப் பதிவாளர், கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 01:19 PM
துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்தவர் உயிரிழப்பு

பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:40 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
ரஞ்சித் சொய்சா அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; உபாலி சந்திரசேன நியமனம்

 Photoஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறக்குவானை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்சா அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:33 PM
மதுபானம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது

 Photo​மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:14 PM
அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய மைத்திரியின் மகன்

 Photoஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன நேற்றையதினம் தனது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:29 AM
இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் பேராபத்து

 Photoஇலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம் தெரியவந்துள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:25 AM
எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டது : அங்கஜன் இராமநாதன்

 Photoஅளவெட்டி பிரதேசத்தில் அமோக ஆதரவுடன் கை கோர்த்திருக்கும் பிரதேச மக்கள். தொடர்ச்சியாக தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் படிக்க...

18th, Jan 2018, 09:15 AM
மேலும் செய்திகள்…
இலங்கையில் அதிசய கோழி முட்டை!

ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது. மேலும் படிக்க...

14th, Jan 2018, 01:15 PM
பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகள்

தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க...

14th, Jan 2018, 12:31 PM
மேலும் செய்திகள்…
வாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில்லை

 Photoநெட்டே உபயோகிக்காமல் தகவல் பரிமாறிகொள்ளும் வகையில் டோட்டல் எனும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஹைக் மெசெஞ்சர் நிறுவனம்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:30 AM
பாரிய நிலநடுக்கத்திற்கும் நிலவிற்கும் தொடர்பு இருக்கின்றதா? வெளியானது புதிய தகவல்

பூமியின் துணைக் கிரகமான நிலவின் அசைவிற்கும் பூமியில் ஏற்படும் பாரிய நிலநடுக்கங்களிற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலமாக ஆய்வுகள்மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:29 AM
பூமியை தாக்கவிருக்கும் அபாயகரமான விண்கல்

 Photoசுமார் ஒரு கிலோமீற்றர் அகலம் கொண்ட அபாயகரமான விண்கல் ஒன்று இன்னும் இரண்டு வார காலத்தில் பூமியை நெருங்கும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 10:28 AM
புதிதாக துவங்குகிறோம்: புத்தாண்டில் சூளுரைத்த ஏஞ்சலா மேத்யூஸ்

2017-ன் அனுபவங்களை பின்னால் ஒதுக்கி வைத்து விட்டு 2018-ஐ புதிதாக துவங்க வேண்டும் என இலங்கை வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அணித்தலைவர் மேத்யூஸ் பேசியுள்ளார்.மேலும் படிக்க...

17th, Jan 2018, 02:07 PM
மேலும் செய்திகள்…
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் " காளி "

விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'காளி'.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:10 PM
பிரபாஸுடன் காதல் உண்மை தானா?

​தமி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா, இவர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த பாகுபலிமேலும் படிக்க...

18th, Jan 2018, 12:08 PM
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றி படங்களால் கிடுகிடுவென வளர்ந்து வருகிறார்.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:03 PM
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா?

தல அஜித் வீரம், வேதாளம் , விவேகம், விஸ்வாசம் என நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.மேலும் படிக்க...

18th, Jan 2018, 12:02 PM
மேலும் செய்திகள்…