இலங்கைப் பணிப்பெண்களின் துயரம்

ஆசிரியர் - Editor II
இலங்கைப் பணிப்பெண்களின் துயரம்

இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் செல்வது படிப்படியாக மிகுந்த ஆபத்துக்குரியதாக மாறி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்த இலங்கைப் பெண்கள் பரிதாபத்துக்குரியவர்களாக நாடு திரும்பிய ஏராளமான செய்திகளை ஊடகங்களில் நாம் பார்த்து விட்டோம்.

உடலுக்குள் ஆணிகளைச் செலுத்துதல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் உடலில் சூடு வைத்தல், மின்னழுத்தியால் சுடுதல், கூரிய ஆயுதங்களால் உடல் காயங்களை உண்டாக்குதல், பாலியல் ரீதியான இம்சைகள்... இவ்வாறாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இவற்றை ஆதாரங்களுடன் நாம் அறிந்திருக்கின்றோம்.

இலங்கைப் பணிப்பெண்களில் கூடுதலானோர் சித்திரவதைகளை அனுபவித்த நாடு சவூதி அரேபியா. இலங்கைப் பணிப்பெண்கள் மாத்திரமன்றி உலகின் வேறுபல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விதம் இம்சைகளை அனுபவித்திருக்கின்றனர்.

பலர் சித்திரவதைகளால் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் குலைஉயிருமாக நாடு திரும்பியுள்ளனர். மேலும் பலர் அத்தனை கொடுமைகளையும் தாங்கியபடி அங்கேயே தொடர்ந்தும் தொழில் புரிந்து வருகின்றனர்.

காரணம் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்காகச் செலவிட்ட பணத்தை எவ்வாறாவது உழைத்து மீள எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம். வறியவர்களான அப்பெண்கள் பலரிடமும் வட்டிக்குக் கடன் வாங்கியே, பெரும் கனவுகளைச் சுமந்த வண்ணம் மத்திய கிழக்குக்குப் புறப்பட்டிருந்தனர்.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதாயின் சித்திரவதைகளைத் தாங்கியபடி அங்கேயே தொடர்ந்தும் தொழில் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி கிடையாது.

அதேசமயம், சித்திரவதைகள் தாளாத நிலையில் இலங்கைக்குத் திரும்புவதற்கு விரும்புகின்ற பணிப்பெண்களில் பலரும் இங்கு வருவதற்கு முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அங்குள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையிலும் அநேக பெண்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் பலர் சித்திரவதைகளை மாத்திரம் அனுபவிக்கவில்லை. ஏற்கனவே உறுதியளித்தபடி சம்பளம் வழங்கப்படுவதில்லையென்ற முறைப்பாடுகளும் பரவலாகக் கூறப்படுகின்றன.

திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரும் இவ்வாறு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக இப்போது தகவல் கிடைத்திருக்கின்றது.அப்பெண் மின்னழுத்தியால் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரங்களை அவரது மகன் வைத்திருக்கின்றார்.

இது தொடர்பாக அப்பெண்ணின் மகன் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார். தனது தாயாரை எவ்வாறாவது மீட்டுத் தர வேண்டுமென்பது அப்பெண்ணின் மகன் முன்வைக்கின்ற வேண்டுகோள்.

அப்பெண்ணின் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் இரு தினங்களுக்கு முன்னர் அதுபற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன.அப்பெண் மத்திய கிழக்குக்கு தொழிலுக்காகச் சென்று இரு வருடங்களும் நான்கு மாதங்களும் கடந்துவிட்ட போதிலும், அவருக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையென்ற முறைப்பாட்டையும் இங்கு வாழும் அப்பெண்ணின் மகன் முன்வைத்துள்ளார்.

இது விடயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும், வெளிநாட்டு அமைச்சும் தலையிட்டு அப்பெண்ணை மீட்டெடுக்க அவசர முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். இல்லையேல் அப்பெண்ணுக்கு மேலும் ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும்.

இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகத் தொழிலுக்குச் செல்வதென்பதில் எமது அரசாங்கத்துக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் பணிப்பெண்களாக எமது பெண்கள் மத்திய கிழக்குக்குச் செல்வதனால் ஏற்படுகின்ற சமூகப் பாதிப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளன.

ஆனாலும் இப்பிரச்சினையானது வறிய குடும்பங்களின் தொழில்வாய்ப்புடன் தொடர்புடையதென்பதால் இவ்விடயத்தில் அரசினால் தலையிட முடியாதிருக்கின்றது. வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பின் மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணி அதிகம் கிடைக்கின்றது.

அதுமாத்திரமன்றி, இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்குக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்துக் கொள்ளவும் அரசு விரும்பப் போவதில்லை.ஆனாலும் இவ்விடயத்தில் எமது சமூகம் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.

எமது பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவிப்பது ஒருபுறம் இருக்கட்டும்...வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்குச் சென்ற பெண்களின் குடும்பங்களில் இடம்பெறுகின்ற சீரழிவுகளையும் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கின்றது.

அப்பெண்களின் குழந்தைகள் உரிய பராமரிப்புக் கிடைக்காததால் சீரழிந்து போவது, கணவன்மார் தீயவழிகளை நாடுவது என்றெல்லாம் சமூக சீரழிவுகளே அதிகம்!

மத்திய கிழக்கில் பணிப்பெண் தொழில்வாய்ப்பு என்பது இலங்கையின் இன்றைய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

இது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு சமூக ஆர்வலர்களுக்கு உள்ளது.

இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வாருங்கள் : யாழில் ஜனாதிபதி

 Photoஇனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:25 PM
பாடசாலையில் இருந்து பதக்கத்துடன் வீட்டுக்கு சென்றுமாணவன் உயிரிழப்பு

பாடசாலையில் இருந்து பதக்கத்துடன் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த மாணவன் வழியில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:52 PM
ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ள இலங்கையின் உயர்மட்டக் குழு

​ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:41 PM
யாழ். பற்றிக்ஸ் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

 Photoஇன்று அதாவது 19.03.2018 திங்கட்கிழமை யாழ் . புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் ஜனாதிபதி பிரதம விருந்தினராகமேலும் படிக்க...

19th, Mar 2018, 03:27 PM
இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற வாருங்கள் : யாழில் ஜனாதிபதி

 Photoஇனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:25 PM
ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ள இலங்கையின் உயர்மட்டக் குழு

​ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:41 PM
யாழ் . புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப கூடத்தினை திறந்துவைத்த ஜனாதிபதி

 Photoயாழ். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:34 PM
விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரை கைதுசெய்ய உத்தரவு

 Photoநாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:09 PM
மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டம்

​தேசிய மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மேலும் படிக்க...

19th, Mar 2018, 12:18 PM
மேலும் செய்திகள்…
அரசியல் கைதியான தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய மகள் : ஏன் தெரியுமா ?

 Photo  Videoஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் மேலும் படிக்க...

19th, Mar 2018, 10:31 AM
போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது

 Photo​போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் படிக்க...

18th, Mar 2018, 12:44 PM
ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922

​பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:33 AM
வெயிலுக்கு இதமான புதினா லஸ்ஸி

​கோடைக்காலத்தில் குடிக்க இதமானது லஸ்ஸி. இன்று புதினா சேர்த்து குளுகுளு லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மேலும் படிக்க...

18th, Mar 2018, 11:10 AM
மேலும் செய்திகள்…
விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்கள்

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி பாரிய விண்கற்கள் வருகின்றமை சம காலத்தில் அடிக்கடி நிகழ்கின்றது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:05 PM
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வழிமுறையை மாற்ற டிராய் முடிவு

​மொபைல் போன் பயன்படுத்துவோர் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு மாற மேற்கொள்ளும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி வழிமுறையை மாற்ற டிராய் முடிவு செய்துள்ளது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:18 PM
வாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்

​வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளுக்கான க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது. மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:14 PM
ஜியோ டி.டி.ஹெச். குறித்த முக்கிய அறிவிப்பு

​ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் டி.டி.ஹெச். மற்றும் இண்டர்நெட் துறைகளில் கால்பதிக்கலாம் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகின. மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:12 PM
மேலும் செய்திகள்…
ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா

கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:20 PM
'ரத்தக்கட்டு ஏற்பட்டு அதனால் ஏற்படும் காயங்களை அலட்சியப்படுத்த வேண்டாம்

​'சாதாரணக் காயம்தானே என்று அலச்சியதால் நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக் காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:17 PM
கள்ளின் மருத்துவப் பயன்கள் தெரியுமா ?

 Photo​தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். மேலும் படிக்க...

19th, Mar 2018, 04:15 PM
இரத்தம் பற்றி சுவாரசியங்கள்

​நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் இரத்தம் பற்றிய சுவாரசியங்களை இங்கே விரிவாக பார்ப்போம் மேலும் படிக்க...

18th, Mar 2018, 02:10 PM
மேலும் செய்திகள்…
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:37 PM
ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா

​தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.மேலும் படிக்க...

19th, Mar 2018, 03:33 PM
செம்பா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா ?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலின் மூலம் செம்பாவாக மிகவும் பிரபலமானவர் ஆலியா. இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:31 PM
மலேசியாவில் தலையா ? தளபதியா ?

 Photoதமிழ் சினிமாவில் சாதனை நாயகர்களாக வலம் வருபவர்கள் தல தளபதி என பெயர் பெற்ற அஜித்தும் விஜயும். இவர்கள் இருவருமே மாறி மாறி புதிய சாதனை படைப்பதும் அதனை முறியடிப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.மேலும் படிக்க...

19th, Mar 2018, 02:26 PM
மேலும் செய்திகள்…