240240240240

அன்று இயக்கத்தில் வலிக்கவில்லை இன்று இயங்காத சமூகத்தால் வலிக்கிறது

ஆசிரியர் - Tamilan

தமிழ் உரிமைக்கான ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு ஏழு வருடங்களாகியும் அதனுடைய எச்சங்கள் இன்றும் மக்களால் பல்வேறு வடிவங்களில் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச்செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது. அந்த வடிவம் ஒன்றும் எமது முன்னாள் போராளிகள். அவர்கள் ஊடாக அவர்களின் விழுப்புண்கள் மூலம் ஆறாத சுவடுகளை சுமந்தவர்களாக சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒருவர்தான் மட்டு – மகிழடித்தீவு நேதாஸ் என்று அழைக்கப்பட்ட ஜீவராசா.

இன்று எமது பிரதேசங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காக போராட்டங்களில் ஈடுபட்டு போராட்டத்திலே அங்கவீனமுற்றவர்களாக்கப்பட்டு சமூகத்தினரால் மனதினை வேதனைப்படுத்தும் படியான புனைபெயர்களினால் அழைக்கப்பட்டு வருகின்றனர். இயக்கத்திலே இருக்கும் போது அங்கவீனமானதையுற்று கவலையடையாத இவர்கள் சுயதொழில் ஒன்றை தனது அங்கவீனத்தால் செய்யமுடியாமல் தவிக்கின்றனர்.

மகிழடித்தீவு ஜீவராசா 1995ம் ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு செயற்பட்டார். தான் இணைந்து ஒருவருடத்திலே மூன்று தாக்குதல்களில் பங்கபற்றியிருந்தார். அதில் மிகவும் முக்கியமான கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் மார்தட்டிய புளுக்குனாவ சமராகும். இதில் வரலாற்றில் முதலாவதாக ஆட்லறி இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அவர் 1996ம் ஆண்டு சித்தாண்டி சந்தனமடு பகுதியில் வைத்து இராணுவத்தினரின் தாக்குதலில் கையில் காயப்பட்டு பின்னர் கையினை முற்றாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் ஜீவராசா கையினை இழந்து விட்டார் என்று சோர்ந்து போகவில்லை. ஆனால் இன்று அதனையிட்டு மிகவும் மனவேதனையடைவதாக தெரிவித்தார். அதன்பின்னர் மட்டு வனவள பொறுப்பாளராக நியமித்தார்கள். தொடர்ந்தும் யுத்த நிறுத்த காலப்பகுதியில் அரசியற்துறையில் மட்டு.புளியந்தீவு கோட்டத்திற்கு அரசியற் துணைப்பொறுப்பாளராக நியமனம் பெற்று அங்கு சிலகாலம் சேவை புரிந்ததன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத் துறை பொறுப்பாளராக நியமித்தனர். இத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பல வேலைத்திட்டங்களை படுவான்கரையில் செய்துள்ளார். மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வன்னிக்கு சென்று அங்குள்ள அரசியற்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்து தேவையான அனைத்து வளங்களையும் தருவதாக கூறிய சந்தர்பத்தில் தான் கருணாஅம்மானின் பிளவு ஏற்பட்டது. அதன்காரணமாக ஜீவராசாவினை (நேதாஸ்) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விளையாட்டு துறைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் களமுனைகளில் போராளிகளுக்கான அரண் அமைத்தல் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டு செயற்பட்டார் நேதாஸ். இந்த சந்தர்ப்பத்தில் தான் இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதன்போதும் மிகப்பெரிய விழுப்புண் அடைந்தார். அதனுடன் மருந்தினைக் கட்டிக்கொண்டு தனது மனைவி பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் வெளியேறினார். பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து ஒரு வருடம் புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி இன்று நிம்மதியற்ற வாழ்கையினை வாழ்ந்து வருகின்றார்.

2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினில் இருக்கும் போது பழுகாமம் பரிமளாதேவியினை திருமணம் செய்து இன்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். புனர்வாழ்வில் இருந்த விடுதலையாகி வந்து இதுவரைக்கும் அரசாங்கத்தினால் ஐந்தரை இலட்சம் பெறுமதியான இந்தியாவின் வீட்டுதிட்டம் மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது. வேறெந்த உதவிகளும் வழங்கப்படவில்லை.

இந்த விடயங்கள் தொடர்பாக ஜீவராசாவிடம் வினவியபொழுது “ நாங்கள் விடுதலையாகி வந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் இந்த வீட்டினைத்தவிர எங்களுக்கு எந்தவிதமான அரசாங்க உதவிகளோ, நிறுவனங்களின் உதவிகளோ எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சின்ன பெட்டிக்கடையத்தான் வைச்சிக்கொண்டுதான் அன்றாட வாழ்க்கை போய்க்கொண்டிருக்கின்றது. இப்ப இந்தக்கடையிலயும் சமான் எடுக்க காசு இல்ல. நாங்க நம்பி வாக்குப்போட்ட கூட்டமைப்பும் திரும்பியும் பாக்குதில்ல. அங்கவீனமாவர்களுக்கான கொடுப்பனவும் 3000 ரூபாவும் இல்ல. இதையும் கூட பெற்றுத்தாறதுக்கு யாரும் முன்வாறங்கயில்ல. அண்ணனுடன் இருக்கும் போது வலிக்கவில்லை, இப்போது அனைத்தும் வலிக்கின்றது. அவருடன் இருக்கும் போது சந்தோசமாக வாழ்ந்தோம் ஆனால் இப்ப நிம்மதி இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கம். என மனவேதனையுடன் தெரிவித்தார்.

இவ்வாறெல்லாம் இருக்கும் பொழுது தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்களையும், விதவைகளாக்கப்பட்டவர்களையும் யாருமே கண்ணெடுத்துப் பார்க்காத நிலையில் வாழ்ந்து வருகின்றவர்கள் பலர். இவர்கள் அரசியல் வாதிகளிடம் மற்றும் பரோபகாரிகளிடமும், புலம்பெயர்ந்த தமிழரிடமும் தங்களின் அன்றாட வாழ்க்கையினை வாழ்வதற்கான சுயதொழிலைசெ;ய்வதற்கான வளத்தினை பெற்றுத்தாருங்கள் என்பதாகும். ஒருசிலருக்கு இவ்வாறான உதவிகள் கிடைத்துள்ள போதிலும் ஜீவாசா போன்ற இன்னும் பலர் எமது சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “ இயக்கத்தில் இருக்கும் போது எனக்கு வலிக்கவில்லை ஆனால் தற்போது இந்த சமூகத்தில் வாழுகின்ற போது வலிக்கின்றது. காரணம் எனது மகள் தற்போது தரம் 04இல் கல்வி கற்று வருகின்றார். ஏனைய தகப்பன்மார் தங்களுடைய பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுக்கும் போது என்னால் அவ்வாறு முடியவில்லை, ஆனால் இயக்கத்தில் இருக்கும் போது ஏதோ ஒரு வழியில் நாங்கள் பெற்றுக்கொள்வோம் அண்ணனின் தயவால் சந்தோசமாக வாழ்ந்தோம் இன்று அவ்வாறு முடியவில்லை. அதேபோன்று நான் அங்கவீனமானவன் என்பதை இந்தச் சமூகம் என்னை சுட்டிக்காட்டுகின்றது. இதனால் எனது பிஞ்சுகள் மனவேதனையடைகின்றது. நான் மரத்தில் ஏறியோ அல்லது விபத்தினாலோ எனது கையினை இழக்கவில்லை. தமிழன் தன்மானத்தோடு தரணியில் தலைநிமிர்;ந்து வாழவேண்டும் என்பதற்காகவே நானும் என்னைப்போன்ற அங்கவீனமான சக முன்னாள் போராளிகளும் அங்கவீனமானவர்களாக்கப்பட்டோம். இந்த தமிழ் சமூகத்திற்கு தயவான வேண்டுகோள் “ எங்களை அவ்வாறு இனியும் சுட்டிக்காட்ட வேண்டாம்.” என மிகவும் மனவேதனையுடன் தெரிவித்தார்.

தமிழ் சமூகமே எமது மண்ணுக்காகவும், தமிழ் உரிமைக்காகவும் போராடியவன் தான் ஒவ்வொரு போராளியும். நாங்கள் தற்போது ஓரளவேனும் தமிழன் என்கின்ற உணர்வோடு வாழ்கின்றோமானால் அதற்கு காரணம் ஒவ்வொரு போராளியும் மாவீரனும் சிந்திய குருதி என்பதை மறந்து விடாதீர்கள்.

பழகாமத்தில் வாழ்ந்து வரும் ஜீவராசா போரினில் தனது ஒருகையினை இழந்துள்ளதுடன், அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வாழவைக்க வேண்டும் என்பதற்காக சிறிய பெட்டிக் கடையொன்றை வைத்து அன்றாட வாழ்க்கையினை நடாத்தி வருகின்றார். ஆனாலும் தற்போது அந்த பெட்டிக்கடையையும் கைவிடும் நிலையில் உள்ளார். காரணம் கடையில் சமான்கள் இல்லாத நிலையிலும், கடைச்சமான்கள் பெறும் கடைக்கு கடன் கொடுக்க வேண்டிய நிலையிலும் உள்ளார். ஆகவே தமிழ் அரசியல்வாதிகள், தனவந்தர்கள், பரோபகாரிகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளே இந்த ஜீவராசாவிற்கு உதவிகளினை செய்து அவரத வாழக்கையில் ஒளியேற்றுமாறு கேட்டுநிற்கின்றார்.

ஜீவராசாவின் தொலைபேசி இலக்கம் – 0094778448746

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…