கொள்ளையை தடுத்த வயதான தம்பதி படுகொலை: நீதிமன்றம் கடும் தண்டனை?

கனடா நாட்டில் கொள்ளையை தடுத்த வயதான தம்பதி இருவரை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள குற்றத்தின் மீதான இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Peers நகரில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.
எட்மோண்டன் நகரில் வசித்து வந்த 70 வயதான Lyle McCann மற்றும் Marie McCann என்ற தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு பிரித்தானிய கொலம்பியா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது, இதே நகரில் வசித்து வந்த Travis Vader என்ற நபர் போதை மருந்து எடுத்துக்கொண்ட பிறகு இருவரையும் வழிமறித்துள்ளார்.
மேலும், இருவரிடம் கொள்ளையடிக்க முயன்றபோது இருவரும் அதை தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த நபர் தம்பதி இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு சடலங்களை மறைத்துள்ளார்.
சுற்றுலா சென்ற வயதான தம்பதி இருவர் காணாமல் போனதாக பொலிசார் நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளனர்.
பின்னர், கொலை செய்யப்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் கொலையாளி கைது செய்யப்பட்டார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில் இருவரையும் கொலை செய்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், கொலையாளிகளின் சார்பில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளதை தொடர்ந்து கொலையாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.