பொலிசார் துரத்தியதால் நிகழ்ந்த விபத்து

ஆசிரியர் - Editor II
பொலிசார் துரத்தியதால் நிகழ்ந்த விபத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 அகதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மூன்று சகோதர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி சுவிஸில் குடியேறியுள்ளனர்.

சுவிஸில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள மூவரும் ஆர்கவ் மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நண்பர் ஒருவரின் திருமண விருந்து நிகழ்ச்சிக்காக மூவரும் சொகுசு கார் ஒன்றில் இரவு 9 மணியளவில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது, சகோதர்கள் சென்ற கார் மீது சந்தேகம் அடைந்த பொலிசார் அதனை துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொலிசாரிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டியபோது Densburen என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் சகோதர்கள் பயணித்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது. மூவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர், பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து உயிருக்கு போராடிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் வியாழக்கிழமை காலையும் மற்றும் மூன்றாவது நபர் அதே நாள் மாலையும் உயிரிழந்துள்ளனர்.

சகோதர்களை இழந்த அவர்களது நண்பர்கள் தற்போது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இரண்டு கார்கள் மோதி மூவர் பலியாகியுள்ளது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…