550

ஓய்வு நாளில்கூட ஓய்வற்ற பெண்கள்

ஆசிரியர் - Editor

ஞாயிற்றுக்கிழமைகள் வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஓய்வு நாட்கள் என்று கூறப்பட்டாலும், அன்று வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்து பெண்கள் அலுத்துப்போக வேண்டியதாகிவிடுகிறது.ஞாயிற்றுக்கிழமைகள் வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஓய்வு நாட்கள் என்று கூறப்பட்டாலும், அன்று வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்து பெண்கள் அலுத்துப்போக வேண்டியதாகிவிடுகிறது. கடந்த ஆண்டு அப்படி அலுப்பை தந்திருந்தாலும், புத்தாண்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் மகிழ்ச்சியாக செலவிட வாய்ப்பிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை, பெண்கள் ஆவலோடு காத்திருக்கும் நாள். வார தொடக்கத்தில் ஒன்றிரண்டு நாட்கள் கடந்ததுமே ‘ஞாயிற்றுக் கிழமை எப்போது வரும்?’ என்ற மகிழ்ச்சியான எண்ண ஓட்டம் உருவாகிவிடுகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும், ஒவ்வொரு மணி நேரத்திலும் சிறிது சிறிதாக அந்த மகிழ்ச்சி குறைந்துகொண்டே போகிறது. ஏன்என்றால், பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை, கணவருக்கு அலுவலக விடுமுறை, ஆனால் பெண்களுக்கோ அன்று தான் இரட்டிப்பு வேலை.

நிறைய பெண்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் சற்று அதிக நேரம் தூங்க விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலும் அப்படி தூங்கமுடிவதில்லை. ஏன்என்றால், வாரம் முழுவதும் விடுபட்ட வேலைகளை அன்று செய்து முடிக்கவேண்டியிருக்கும். அதிலும் நிறைய ஆண்கள் அன்று ‘சமையலில் ஏதாவது ஸ்பெஷல் இருக்க வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள்.

அவர்களின் விருப்பத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திப்போட நினைத்தாலும், சில வீடுகளில் விருந்தினர்களின் வருகை அதற்கு இடம் கொடுக்காமல் செய்து விடும். வீட்டிற்கு வருபவர்களுக்கு விதவிதமாக சமைத்து பரிமாற வேண்டியிருப்பதால் வேலைப்பளு அதிகமாகிவிடும். கூடவே வீட்டையும் சுத்தமும், அலங்காரமும் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

விருந்தினர்களை உபசரித்து, அவர்கள் திரும்பிச்செல்லும் வரை மற்ற வேலைகள் எல்லாம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கும். பின்னர் துரிதமாக செயல்பட்டு அந்த வேலைகளையெல்லாம் முடிக்க வேண்டியதாகிவிடும். மறுநாள் முதல்- வாரத்தின் இறுதி நாள் வரை பிள்ளைகள், கணவன் உடுத்தும் துணிகளை இஸ்திரி போட்டு வைக்க வேண்டியிருக்கும். இப்படி பெண்களுக்கு எவ்வளவோ வேலைகள் அடுக்கடுக்காக வரிசை கட்டி நிற்கும்.

சாதாரண குடும்பத் தலைவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு பாரமான நாள் என்றால், வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு அது இரட்டிப்பு பாரமான நாள். இதைப்பற்றியெல்லாம் பெரும்பாலான ஆண்கள் சிந்திப்பதில்லை. வாரம் முழுவதும் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில், நாளுக்கு நாள் வீட்டு அத்தியாவசிய பொருட்கள் செலவாகிக்கொண்டே இருக்கும். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் என்னென்ன பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும் என்று நீள பட்டியல் போட வேண்டியிருக்கும். அவைகளை எல்லாம் வாங்க ஷாப்பிங் செல்லவேண்டியதிருக்கும்.

நிறைய பெண்கள் மகனுக்கு திருமணம் செய்துவைத்து மருமகள் வந்துவிட்டால் தங்களுக்கு வீட்டு வேலை குறைந்துவிடும் என்று நினைப்பார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் மருமகளாக இருந்தால் அவளுக்கும் சேர்த்து மாமியார் வேலை செய்ய வேண்டியிருக்கும். வயதான மாமியாராக இருந்தால் சில வேலைகளை செய்வதற்கு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலைக்கு செல்லும் மருமகள் என்றால் அவள் அன்று மட்டும் ஓய்வு தேவை என்பாள். அதனால் சில மாமியார்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சுமையாகி விடுகிறது.

மாமியாராக இருந்தாலும், மரு மகளாக இருந்தாலும் பெண் ஓய்வில்லாமல் வேலை செய்தால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிக மாகிவிடும். அது நாளடைவில் அவர்கள் உடலையும், மனதையும் பாதிப்புக்குள்ளாக செய்து விடும். எந்த நேரமும், ‘அடுத்து என்ன வேலை செய்வது?’ என்ற ஒரே சிந்தனையில் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வேறு மாற்று சிந்தனைகள் தோன்றுவதே இல்லை. இந்த நிலை நீடித்தால் அவர்கள் மனதும், உடலும் வேகமாக தளர்ந்துவிடும்.

பெரும்பாலான வீடுகளில் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு டென்ஷன் ஆவதற்கும், அதனால் பிரச்சினைகள் என்று தோன்றுவதற்கும் அவர்களுடைய இறுக்கமான மனநிலைதான் காரணம். மனஇறுக்கம் தொடர்ந்தால், எதையும் நிதானமாக சிந்தித்து முடிவு செய்யும் திறன் குறைந்து போய்விடும். எப்போதும் ஒருவித பரபரப்பு, பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். அதன் தாக்கமாக சிந்திக்கும் ஆற்றல் குறைந்து போய்விடும். பல்வேறு விதமான ஆரோக்கிய குறைபாடுகளுக்கு இந்த ஓய்வற்ற சூழலே காரணமாகும். ஓய்வெடுக்காமல் தொடர்ந்து உழைக்கும் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பதில் சீரற்ற நிலை உருவாகி, உடலும்- மனதும் பாதிக் கப்படுகிறது.

ஒரு குடும்பத்தை பெண்கள் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றால், அவர்களின் மன நலனும், உடல் நலனும் சிறப்பாக இருக்கவேண்டும். அப்படி சிறப்பாக அமையவேண்டும் என்றால், ‘பெண்களின் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு’ பற்றி குடும்பத்தினர் சிந்தித்தே ஆகவேண்டும்.

சரி.. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இந்த புத்தாண்டில் இருந்து பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளை மகிழ்ச்சியாக செலவிட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்!

* விருந்தினர் யாராவது ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கு வர விரும்பினால் அவர்களிடம், ‘போன் செய்துவிட்டு வாருங்கள்’ என்று கூறுங்கள். அதன் மூலம் அவர்களை வரவேற்கவும், உபசரிக்கவும் உங்களால் நேரம் ஒதுக்கிக்கொள்ள முடியும்.

* சமையல், துணிதுவைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து வேலைகளையும் பெண்களே தனியாக செய்யும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. எல்லோரும் பகிர்ந்து செய்ய வேண்டும். உதாரணத்துக்கு சமையலில் மனைவிக்கு உதவுவதை கணவர் கவுரவ குறைச்சலாக நினைக்கிறார் என்றால், முதலில் குழந்தைகளை சமையல் அறையை நோக்கி இழுங்கள். நீங்கள் குழந்தைகளோடு சேர்ந்து ஜாலியாக லூட்டி அடித்து சமைக்கவும், ருசிபார்க்கவும் ஆரம்பித்துவிட்டால், கணவரும் வேறு வழியின்றி வந்து ஒட்டிக்கொள்ள வேண்டியதாகிவிடும். கணவரோடு, குழந்தைகளோடு சேர்ந்து சமைப்பது சுமை அல்ல,ஒரு ஜாலியான பொழுது போக்கு என்ற கோணத்திற்கு சமையலை கொண்டு சென்றுவிட்டால், பெண்களின் பாதி சுமை குறைந்துவிடும்.

* பேப்பர், புத்தகங்கள் அடுக்கிவைப்பது, செடிக்கு தண்ணீர் விடுவது, துணி மடிப்பது, பிரிட்ஜில் காய்கறிகளை அடுக்கிவைப்பது போன்ற வேலைகளை குழந்தைகளிடம் ஒப்படைத்துவிடுங்கள். இதனால் வீட்டில் குழந்தைகளின் தேவையற்ற அரட்டைகள் குறையும். டி.வி. பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பிரச்சினைக்குரிய பொழுதுபோக்குகளும் கட்டுப் படும்.

* அதிகமான வேலைகள் இருந்தாலும் மாலையில் இரண்டு மணி நேரமாவது குடும்பத்தோடு வெளியே சென்று பேசி, சிரித்து விளையாடி மனதையும், உடலையும் இலகுவாக்கிவிட்டு வாருங்கள்.

* இந்த புத்தாண்டில் இருந்து எல்லா வேலைகளையும் ஞாயிற்றுக்கிழமை பார்த்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கி சேர்த்துவைக்காதீர்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஓரளவு வேலைகளை முடித்துக்கொண்டே இருங்கள்.

* குடும்பத்தில் இருக்கும் கணவரும், குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாயை நினைத்துப்பாருங்கள். ‘தாயும் நம்மைபோன்ற உடல் கொண்ட ஒரு ஜீவன்தான், அதற்கும் ஓய்வு தேவை’ என்பதை உணர்ந்து வீடுகளில் வேலைகளை பகிர்ந்து அன்பை பெருக்குங்கள். 

இலங்கைச் செய்திகள்

இலஞ்சம் : வசமாக சிக்கிக் கொண்ட PHI

​பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

21st, Jan 2017, 11:40 AM
மீண்டும் போராட்டக் களத்தில் ராகவா லாரன்ஸ்

​கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...

21st, Jan 2017, 11:31 AM
அரிசியின் விலை அதிகரிப்பு

​அரிசியை 76 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.மேலும் படிக்க...

21st, Jan 2017, 11:30 AM
உன் அந்தரங்கத்தை வெளியிடுவேன் : அதிரடியாக கைதான நபர்

​மோசடியான முறையில் பெண் திருமண பதிவாளரிடம் பண மோசடி செய்த நபர் ஒருவரை ஹக்மன பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க...

21st, Jan 2017, 11:28 AM
ஊடகவியலாளர்களுக்கு விழிர்ப்புணர்வு செயலமர்வு

​ஊடகவியலாளர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கு எதிராக ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு கொழும்பில் நடைபெறவுள்ளது.மேலும் படிக்க...

21st, Jan 2017, 11:02 AM
பின்லேடன் எழுதிய கடிதத்தில் இருந்தது என்ன?

 Photo​அல்கொய்தா இயக்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் பின்லேடன் குறித்த ஆவணங்கள் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறையிடம் உள்ளன.மேலும் படிக்க...

21st, Jan 2017, 11:32 AM
மேலும் செய்திகள்…
யோனி பொருத்தம் என்பது என்ன?

​திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் யோனி பொருத்தம். இது தான் கணவன்- மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்குமா? இல்லையா? என்பதை கூறும் பொருத்தம் ஆகும்மேலும் படிக்க...

21st, Jan 2017, 09:39 AM
ஜல்லிக்கட்டை ஆதரித்து கந்தப்பு ஜெயந்தன் இசையில் ஜல்லிக்கட்டு பாடல்

 Photo  Videoஜல்லிக்கட்டை ஆதரித்து கந்தப்பு ஜெயந்தன் அண்ணாவின் இசையில் உருவான ஜல்லிக்கட்டு பாடல் வாழ்த்துக்கள் ஜெயரூபன் ,மனோஜ் ,பிரதா,ஜெயந்தன்மேலும் படிக்க...

20th, Jan 2017, 09:26 AM
பெண்கள் திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற வேண்டுமா?

 Photoபெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள். அதே நினைவில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள்.மேலும் படிக்க...

19th, Jan 2017, 01:23 PM
பெற்றோர்களே உங்கள் குழந்தையோடு விளையாடுங்க!!!!!

 Photoகுழந்தைகளுடனான விளையாட்டு உங்கள் மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.மேலும் படிக்க...

19th, Jan 2017, 12:30 PM
மேலும் செய்திகள்…
அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

​பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது.மேலும் படிக்க...

21st, Jan 2017, 10:22 AM
புதிதாக அறிமுகமாகும் Faraday Future FF91 காரின் விலை எவ்வளவு தெரியுமா?

 Photo​சீனாவினை தளமாகக் கொண்டு செயற்படும் Faraday நிறுவமானது Faraday Future FF91 புதிய கார் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கார் அறிமுகமாக முன்னரே சுமார் 64,000 வரையானவர்கள் முற்பதிவு செய்துள்ளார்கள்.மேலும் படிக்க...

21st, Jan 2017, 10:21 AM
சில நொடிகளில் விற்று தீர்ந்த ஸ்மார்ட்போன்கள்: அப்படி என்ன சிறப்பு?

 Photo​செல்போன் தயாரிப்பில் அதிக அனுபவம் பெற்ற நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா 6 மொடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் முதலில் ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 04:06 PM
வித்தியாசமான அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி G6 ஸ்மார்ட்போன்

 Photoஎல்ஜி நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் G6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை கொரிய இணையதளம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...

20th, Jan 2017, 09:17 AM
மேலும் செய்திகள்…
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா தயவு செய்து அலட்சியப்படுத்தாதீர்கள்..! - இவைதான் எயிட்ஸின் அறிகுறிகள்

 Photo​ HIV - Human immuno deficiency virus எனப்படுவது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் கிருமியாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் மேலும் படிக்க...

20th, Jan 2017, 03:17 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

மாட்டைச் சின்னமாக்கிய இளைஞர்கள்

 Photo​தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு கட்டு போராட்டத்துக்கு கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்தே ஆதரவு அளித்து வருகிறார்,மேலும் படிக்க...

21st, Jan 2017, 10:28 AM
லாரன்ஸால் திருந்திய சினிமா எதிரிகள்?

 Photo​லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் எத்தனையோ குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார்.மேலும் படிக்க...

21st, Jan 2017, 10:14 AM
நடிகர் சங்க போராட்டத்தை புறக்கணித்து மெரீனாவில் கலந்துகொண்ட விஜய்

 Photo​ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.மேலும் படிக்க...

21st, Jan 2017, 10:11 AM
கோகோ கோலா - பெப்சி தடை விதித்த திரையரங்கம்

​தமிழகமெங்கும் இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து வேலைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

21st, Jan 2017, 09:57 AM
மேலும் செய்திகள்…