சூடுபிடிக்கும் ஜியோ 4ஜி: ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களை முந்தியது

ஆசிரியர் - Editor

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளின் வேகம் அதிகரித்து உள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள டிராய் அறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இந்தியாவின் அதிவேக இண்டர்நெட் வசதியை வழங்கி வருகிறது. இந்த தகவல் டிசம்பர் 2016, வரையிலான தகவல்களை சார்ந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் அக்டோபர் மாதவாக்கில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வேகம் இந்தியாவின் மிக குறைந்த இண்டர்நெட் வேகம் கொண்ட சேவையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. டிராயின் மைஸ்பீடு இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. மைஸ்பீடு இணையத்தளம் வழங்கும் தகவல்கள் ஒவ்வொருத்தர் பயன்படுத்தும் சேவைகளை விட நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் வேகத்தை சரிபார்க்க மைஸ்பீடு (Myspeed) தளத்திற்கு சென்று நெட்வொர்க் பகுதியில் ஜியோ தேர்வு செய்து தொழில்நுட்ப பிரிவில் 4ஜி என தேர்வு செய்தால் ஜியோவின் 4ஜி வேகத்தை அறிந்து கொள்ள முடியும். இதே போல் மற்ற நிறுவனங்களின் வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் இந்தியாவில் அதிவேக 4ஜி இண்டர்நெட் வழங்கும் நிறுவனத்தை அறிந்து கொள்ள முடியும்.

அப்லோடு வேகத்தை பொருத்த வரை டெலிநார் நிறுவனம் நொடிக்கு 2.8 எம்பி என்ற வேகத்தில் முன்னிலை வகிக்கிறது, ஜியோ அப்லோடு வேகம் நொடிக்கு 2.6 எம்பியாக உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் புத்தாண்டு சலுகைகளை அறிவித்து தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வாய்ஸ்கால், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளை மார்ச் 31, 2017 வரை இலவசமாக வழங்குகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வந்த அறிமுக சலுகையை தொடர்ந்து புத்தாண்டு சலுகை வழங்கப்படுகிறது.

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…