ஐபோன்களுக்கு தள்ளுபடி

ஆசிரியர் - Editor

இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து ஐபோன்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து ஆப்பிள் ஃபெஸ்ட் (Apple Fest) எனும் விற்பனை திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றன. இந்த விற்பனையில் பல்வேறு ஐபோன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 7 விலையில் 5000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 6:

ஐபோன் 7 32GB, 128GB மற்றும் 256GB விலை முறையே ரூ.55,000, ரூ.65,000 மற்றும் ரூ.75,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் 23,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் உச்சகட்ட தள்ளுபடியினை பெற ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கிறது. இந்த சலுகை நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் சார்ந்து மாறுபடுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுடன் கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6s எக்சேஞ்ச் சலுகை:

ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, எனினும் ஐபோன் 6s ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி பெற முடியும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எக்சேஞ்ச் செய்யலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஐபோன் 6 ரூ.7,990 மட்டுமே:

ஐபோன் 6 16GB ஸ்பேஸ் கிரே நிறம் கொண்ட மாடல் வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடியும் பிளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.24,000 வரை தள்ளுபடியும் பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையில் அதிக தள்ளுபடி பெற ஐபோன் 6s பிளஸ் தகுதியுடையதாக உள்ளது. முழுமையான எக்சேஞ்ச் சலுகையில் தள்ளுபடி பெறும் போது ஐபோன் 6 போனினை ரூ.7,990 என்ற விலையில் வாங்க முடியும்.

ஐபோன் 5s ரூ.4,999 மட்டுமே:

ஆப்பிள் ஐபோன் 5s 16GB ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் 5s ஸ்மார்ட்போனினை ரூ.4,999 விலையில் வாங்க முடியும். ஐபோன்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் வழங்கும் தள்ளுபடியும் சீரிஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கிடைக்கிறது.

அக்சஸரீகளுக்கு தள்ளுபடி:

ஆப்பிள் நிறுவனத்தின் அக்சஸரீகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், ஆப்பிள் கீபோர்டு மற்றும் மைஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு 25 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…