கிராமப்புற வாழ்க்கையே ஆரோக்கியத்துக்கு சிறந்தது

ஆசிரியர் - Tamilan

போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சாலையோரங்களின் அருகேவாழ்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மூளை நோயால் விளையும் மனநல பாதிப்பு உருவாவதற்கான ஆபத்து அதிகரிப்பதாக கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்த செய்தியை அடுத்து, தூய்மையான, போக்குவரத்துநெரிசல் இல்லாத கிராமப்புறங்களில் வாழ்வது குறித்த எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா? அப்படியென்றால், நீங்கள் தனியாக இல்லை, பலருக்கும் இதே எண்ணம் தோன்றியது என்பது உண்மை.

கிராமப்புறத்தில் உள்ள பசுமை

ஆனால் உண்மை நிலை என்ன? நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமத்தில் வாழ்வது நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா?

டிமென்ஷியா ஏற்படுவதற்கான காரணங்களைப் போன்றே, இது ஒரு எளிமையான கேள்வி அல்ல, மேலும் இதற்கு தெளிவான பதில்களும் இல்லை.

மேலோட்டமாகப் பார்த்தால், கிராமப்புறத்துக்கு தப்பி ஓடுவது சிறந்த வழி என்று தோன்றும்.

ஐக்கிய ராஜ்யத்தை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், அங்குள்ள மக்கள் தொகையில், கால் பகுதிக்கும் குறைவானவர்களே கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

அங்குக் காற்று தூய்மையானதாகவும், போக்குவரத்துக்கு நெரிசல் குறைவானதாகவும், காற்று மாசு குறைவானதாகவும் உள்ளது. பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், இதய நோய், சுவாச நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் காற்று மாசு கிராமப்புறத்தில் ஒரு விஷயமாக இல்லை.

அங்கு திறந்த வெளி இருப்பதால், வெளியே செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. நடைப் பயிற்சி மேற்கொள்ள நீண்ட பாதைகள், பசுமையான சுற்றுச்சூழல் என்றெல்லாம் கனவு கண்டது நினைவுக்கு வருகிறதா?

நீண்ட கால வாழ்க்கை

''காற்று மாசு பிரச்சனை என்றால், கிராமப்புறத்தில் வாழ்வதுதான் உங்களுக்குச் சிறப்பானது, '' என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உள்ள பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இதய நோய் துறை பேராசிரியர் டேவிட் நியூபி.

பரபரப்பான சாலைகளில் இருந்து தொலைவில் வசிப்பதால், அந்த வாழ்க்கை உங்களுக்கு, நெரிசலான சாலைப் போக்குவரத்தில் வெளியாகும் சிறிய துகள்கள் மற்றும் வாயுக்கள் மூலம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்.

பேருந்துகள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நெரிசலான போக்குவரத்து ஆகியவை மாசடைந்த சுற்றுச்சூழலால் ஏற்படும் ஆபத்துகளை அதிகப்படுத்தும் என்றாலும், உங்களது ஆரோக்கியத்தை கெடுக்கும் ஆபத்தான நிலையைக் குறைக்க நீங்கள் வெகு தூரம் சொல்லவேண்டியது இல்லை என்கிறார் நியூபி.

முக்கிய சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் நீங்கள் வாசித்தால் அது மோசமான ஒன்று. ஒரு பூங்கா போன்ற பசுமை நிறைந்த பகுதிக்கு அருகே நகர்வது நல்லது,'' என்றார் அவர்.

''கிராமப்புறத்தில் வாழ்வது குறிப்பிடத்தக்க அளவு கூடுதல் ஆரோக்கியமானது,'' என்கிறார், பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார துறை பேராசிரியர் ராய் ஹாரிசன்.

காற்றில் உள்ள மாசுபாடுதான் , பிரிட்டன் முழுவதும் உள்ள மக்களின் சராசரியான வாழ்நாளில், அவர்கள் ஆறு மாதங்களை இழக்க காரணம் என்றும் பெரும்பாலும் நகர்ப் பகுதிகளில் வாழ்வதுதான் அதற்கு வழிவகுக்கிறது என்றும் கூறுகிறார் அவர்.

நகர்ப் பகுதிகளோடு ஒப்பிடும் போது,பெரும்பாலான தொலைதூர கிராமப்புறங்களில், பாதி அளவு தான் காற்று மாசுபாடு உள்ளது. நகரப் பகுதிகளை காட்டிலும், ஊரக பகுதிகளில்தான் சுகாதார நிலை சாதகமானதாகவும் உள்ளது என பிரிட்டிஷ் அரசாங்க அறிக்கை காட்டுகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரப்பகுதி

குழப்பமான சித்திரம்

ஐக்கிய ராஜ்யத்தில் கிராமப்புறங்களில், சராசரி ஆயுட்காலம் அதிகமாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாகவும், அகால மரணங்களை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள் மூலம் நீங்கள் இழக்கும் வாழ்நாள் குறைவு என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால் இது முழுக் கதையையும் சொல்லவில்லை. கிராமம் மற்றும் நகரத்திலும் வறுமை நிலையில் வாழ்வதில் பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.

ஒரு நகரத்தில் வாழ்பவரைக் காட்டிலும், கிராமப்புறத்தில் வாழும் ஒரு நபர் நீண்ட நாள் வாழ முடியும் என்று கருதப்படுகிறது. பசுமை நிறைந்த ஒரு புறநகர் பகுதியில் வளர்ந்த ஒரு நபரோடு ஒப்பிட்டால், நகர்ப் புறத்தில் வறுமையில் வாழும் ஒரு நபரின் வாழ் நாள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு தான்.

பிரிட்டனின், தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 2010 ல் வெளியான அறிக்கையின்படி, வறுமையைக் கணக்கில் கொண்டால், கிராமப்புறத்தில் சராசரி வாழும் காலம் அதிகமாகவும், அதே நேரத்தில், அதிக செல்வம் படைத்த நகர்ப்புறங்களில் உள்ளவர்களின் வாழ்நாள் அதைக் காட்டிலும் மிக அதிகமானதாகவும் உள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்பகுதி

பசுமை மற்றும் இனிமையான வாழ்க்கை?

பசுமை மற்றும் அமைதி நிறைந்த கிராமப்புற வாழ்க்கையை இனிமையானது என்று வெகு எளிதில் சொல்லி விடலாம். இது உண்மையாக இருந்தாலும், கிராமப்புற வாழ்க்கை என்பதும் பிரச்சனைகளோடுதான் இருக்கிறது.

சராசரியாக கிராமப்புறத்தில் வயது மூத்தவர்கள்தான் வாழ்கிறார்கள் என்ற நிலையில், அங்கு மக்களுக்கு வயதாகும் போது, தனித்து வாழ்வது என்பது ஒரு பிரச்சனையாகலாம்.

வயதான, உடல் நலம் குன்றியவர்களுக்கு, மருத்துவ வசதிகள் குறைந்த மற்றும் சரியான பொது போக்குவரத்து இல்லாத நிலையில், கிராமப்புறங்களில் வாழ்வது பெரிய சவால் தான்.

வேலைக்குச் செல்லும் இள வயதினர், வீட்டில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் நிறைய இடம் உள்ளது என்ற எதிர்ப்பார்ப்புகளால் கவரப்பட்டு, கிராமப்புற வாழ்வைத் தேர்ந்தெடுத்தால், பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.

அவர்கள், வெளியில் போக வேண்டும் என்பதற்காக, காரில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக வெளியில் செல்ல காரில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக அதிக அளவில் காற்றை மாசுபடுத்துகின்றனர். அவர்கள் மிகக் குறைந்த உடற்பயிற்சி தான் செய்கிறார்கள்.

தனிப்பட்ட தேர்வு

கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்கள் வேலைக்கு செல்வது மற்றும் கடைகளுக்கு செல்வது போன்ற விஷயங்களுக்காக, அதிகமாக நடக்கின்றனர். ஆனால் இதனால் அவர்கள் உடல் நலத்துக்கு பெரிய பலன் ஏதும் கிடைத்த விடுவதில்லை என்பதை ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது என்கிறார் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதார துறை பேராசிரியராக உள்ள ஆண்டி ஜோன்ஸ் .

''நகர்ப்புறங்களில் பல நடவடிக்கைகள், விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் வறுமையில் உள்ள மக்கள் பலரால் அவை எல்லாவற்றையும் அனுபவித்துவிட முடிவதில்லை. இறுதியாக, உங்களது வேலை, உங்களது நிதி ஆதாரம், சுகாதாரம், வாழ்க்கை முறை ஆகிய பல அம்சங்களைக் கொண்டுதான் நீங்கள் எங்கு வாழவேண்டும் என்று நீங்கள் தேர்வு செய்ய முடியும்,'' என்கிறார் ஜோன்ஸ் . நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் நிதி ஆதாரம் இல்லாமல் வசித்தால் அது கிராமமாக இருந்தாலும் , நகரத்தின் மையமாக இருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்தான் வாழ வேண்டியிருக்கும் ‘’, என்கிறார் ஜோன்ஸ்.

பாடசாலைகளின் விடுமுறை காலத்தில் மாற்றம்

 Photo​முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டாம் தவணைக்கான வழங்கப்பட இருந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:27 PM
இந்திய கிரிக்கெட் அணிக்கு தம்புள்ளவில் கோலாகல வரவேற்பு

 Photo​இலங்கை அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதற்காக தம்புள்ளை சென்றுள்ள இந்திய அணிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கபட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:24 PM
அன்று நடந்த சம்பவம் தொடர்பில் உண்மையை வெளியிட்ட முன்னாள் போராளிகள்

 Photo​இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட தமது சக இராணுவச் சிப்பாய்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூபியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
அகில இலங்கை தமிழ்த்தின போட்டி: முதலாமிடம் பெற்ற மாணவனை கௌரவிக்கு நிகழ்வு

 Photo​வவுனியா - அகில இலங்கை தமிழ்த்தின போட்டியில் முதலாமிடம் பெற்று செட்டிகுளம் மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவணை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:02 PM
இலங்கை அதிநவீன கார் அறிமுகம்!

 Photo​இலங்கை சந்தையில் BMW வாகனத்தின் புதிய ரக கார் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:57 AM
பாடசாலைகளின் விடுமுறை காலத்தில் மாற்றம்

 Photo​முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டாம் தவணைக்கான வழங்கப்பட இருந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:27 PM
ஹிந்து - யூத பெண்களிடையே முதல் மதக் கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணம்

 Photo​ பிரிட்டனில் ஹிந்து மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் முதல் முறையாக மத கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணத்தை செய்து கொண்டனர். மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
அன்று நடந்த சம்பவம் தொடர்பில் உண்மையை வெளியிட்ட முன்னாள் போராளிகள்

 Photo​இந்திய இராணுவ அதிகாரிகள் குழு கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட தமது சக இராணுவச் சிப்பாய்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூபியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
மேலும் செய்திகள்…
ஹிந்து - யூத பெண்களிடையே முதல் மதக் கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணம்

 Photo​ பிரிட்டனில் ஹிந்து மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் முதல் முறையாக மத கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணத்தை செய்து கொண்டனர். மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள்

 Photoஉலகின் மிக சிறந்த தடகள வீரர்கள் லண்டனில் கொண்டாடப்படும் வேளையில், அவர்களுடைய பழைய சகாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால், இந்த இருதரப்பினரும் தங்களது வயது என்ற விஷயத்தில் மட்டும் முற்றிலும் எதிரெதிராக இருந்தாலும், விளையாட்டின் மீதான ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றில் ஒருதரப்பினருக்கு மற்றொருவர் சளைத்தவர்களல்ல.மேலும் படிக்க...

17th, Aug 2017, 06:34 PM
யாழில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டது

 Photoஇன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளில் 9 கைகள் அகற்றப்பட்டது .மேலும் படிக்க...

16th, Aug 2017, 01:43 PM
மேலும் செய்திகள்…
பூமியில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி?

 Photo​பூமியில் தோன்றிய முதல் விலங்கு தோன்றியது எப்படி என்ற மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:22 AM
Nokia 8 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான வீடியோ மற்றும் சிறப்பம்சங்கள்

 Photo​நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவ்வருடத்தில் தொடர்ச்சியாக சில அன்ரோயிட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:19 AM
சாம்சுங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சரிவு

 Photo​சாம்சுங் நிறுவனம் அண்மையில் எதிர்பாராத விளைவாக பாரிய சரிவு ஒன்றினை எதிர்நோக்கியிருந்தது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:17 AM
புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Asus

 Photo​கணினி வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமான Asus ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.மேலும் படிக்க...

17th, Aug 2017, 12:53 PM
மேலும் செய்திகள்…
காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுவதுஇந்த காரணங்களால் தான் தெரியுமா?

 Photo​காலையில் எழுந்ததும் ஆசையாக துணைக்கு முத்தம் கொடுக்க அருகில் செல்லவே பலருக்கு சங்கடமாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Aug 2017, 07:02 PM
நீரிழிவு நோயாளர்களே தயவு செய்து மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க ஆபத்து!!

 Photo​சர்க்கரை நோயானது அவ்வளவு கொடியதல்ல, நீங்கள் உங்களது உடல் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை.. சர்க்கரை நோயாளிகள் சில அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது மிகச்சிறந்தது. மேலும் படிக்க...

17th, Aug 2017, 07:00 PM
மேலும் செய்திகள்…
பிரபல தொலைக்காட்சிக்கு ஏமாற்றத்தை கொடுத்த மெர்சல் படக்குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்திற்காக தளபதி ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:30 AM
பிக் பாஸ் குடும்பத்தை ஏமாற்றிய ஹரிஷ் கல்யாண்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேற்றம் அந்த நிகழ்ச்சியில் மிக பெரிய சறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் புது வரவுகளாக ஒரு சிலரை உள்ளே அனுப்பியுள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 10:03 AM
மேலும் செய்திகள்…