86 துவிச்சக்கர வண்டிகளை திருடிய மூவர் கைது

ஆசிரியர் - Tamilan
86 துவிச்சக்கர வண்டிகளை திருடிய மூவர்  கைது

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவர்களிடம் இருந்து 86 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி திருட்டுக்கள் அதிகரித்திருந்தன.

குறிப்பாக யாழ். நகரின் பிரதான அலுவலகங்கள் வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கு செல்லும் பொதுமக்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை பிரதான வீதியின் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு செல்லும் போது திருடர்கள் திருடி சென்றிருந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் துவிச்சக்கரவண்டி திருடர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்படி ஊர்காவல்துறை பொலிஸாரால் 28 துவிச்சக்கர வண்டிகளும், யாழ். பொலிஸார் 58 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் மூவரை கைது செய்திருந்தனர்.இதன்படி கைது செய்யப்பட்ட மூவரும் துவிச்சக்கர வண்டிகளை திருடி சென்று அதனை பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதாகவும் விசாரனைகளினூடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.இதேவேளை கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பார்வையிட்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் சான்றுகளை காண்பித்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…