சீன முதலீடு இல்லையேல் வரி அறவீட்டை அதிகரிக்க நேரிடும்

ஆசிரியர் - Tamilan
சீன முதலீடு இல்லையேல் வரி அறவீட்டை அதிகரிக்க நேரிடும்

ஹம்பாந்தோட்டையில் சீன நிறுவனம் முதலீடு செய்யவில்லை என்றால், தேவையான பணத்தை திரட்ட வரி அறவிடும் வீதத்தை அதிகரிக்க நேரிடும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சீன நிறுவனம் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்திற்காக 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கிறது.

இது கைவிட்டு போனால், அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை நாட்டு மக்களிடம் இருந்து சம்பாதிக்க நேரிடும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது ஒரு தொழிற்சாலையை கூட ஆரம்பிக்க முடியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆரம்பித்து வைத்த 300 ஆடைத் தொழிற்சாலைகளில் 150 தொழிற்சாலைகளை மகிந்த ஆட்சிக்காலத்தில் மூடப்பட்டன.

கடும் கடன் சுமையில் மூழ்கியிருக்கும் இலங்கையை அதில் இருந்து மீட்க வேண்டுமாயின் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம், அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.

எனினும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே கூட்டு எதிர்க்கட்சி ஈடுபட்டுள்ளது எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கண்டிக்கான இந்திய துணைத் தூதுவர் ராதா வெங்கடராமனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

 Photoஇலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 02:36 PM
உலகிலேயே அதிவேக கின்னஸ் சாதனை படைத்த பொலிஸ் கார்!

​டுபாய் பொலிஸாரால் பயன்படுத்தும் “புகாட்டி வேரன்” கார் உலகிலேயே அதிவேக பொலிஸ் கார் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மணிக்கு 407 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் இந்த கார் 60 மைல் வேகத்தை 0.25 விநாடிகளில் கடந்துவிடும்.மேலும் படிக்க...

26th, Mar 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
ஆண்டனியை தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுக்கும் மற்றொரு எடிட்டர்

 Photo​எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:38 AM
மேலும் செய்திகள்…