டிரம்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

ஆசிரியர் - Tamilan

டொனால்டு டிரம்பை எதிர்த்து ஜேர்மனி தலைநகர் பெர்லினில் 1200க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக ஆனவுடன் ஈரான், ஈராக், சிரியா, லிபியா உட்பட 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் வர தடை விதித்தார்.

மேலும் மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடுக்கும் நோக்கில் எல்லையில் பெரிய தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உலக புகழ்பெற்ற நினைவுச்சின்னமான Brandenburg Gate அருகில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போரட்டத்தில் ஜேர்மனி, அமெரிக்கா, சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் நாட்டை சேர்ந்த Mahsa Zamani என்னும் இளம்பெண் கூறுகையில், நான் கடந்த ஆறு வருடங்களாக ஜேர்மனியில் வாழ்கிறேன்.

இங்கு மருத்துவ படிப்பு படித்து வருகிறேன். தற்போது மருத்துவமனை பயிற்சிக்காக நான் அமெரிக்காவுக்கு வரும் 19ஆம் திகதி செல்ல வேண்டியுள்ளது.

டிரம்பின் கொள்கை என்னை பெரிதும் பாதித்துள்ளது. நிலைமை விரைவில் சீராகி நான் அமெரிக்காவுக்கு செல்வேன் என நம்புவதாக கூறியுள்ள Mahsa, என் வாழ்க்கையை அழிக்கும் உரிமையை டிரம்புக்கு தரமாட்டேன் எனவும் கோபமாக கூறியுள்ளார்.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…