7 நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் தந்த கனடா பிரதமர்

ஆசிரியர் - Tamilan
7 நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் தந்த கனடா பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு சந்தித்து இரு நாட்டுகளின் உறவு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப்பை பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சில தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, டிரம்ப் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மெக்சிகோவை விட கனடா மற்றும் அமெரிக்கா இடையே இருக்கும் வர்த்தக உறவு குறித்து கவலை கொள்வதாக கூறியுள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாட்டு அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.

அப்போது, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று கனடா பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…