காதலர் தினத்தில் உண்மை காதல் கதை : காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனி

ஆசிரியர் - Tamilan

காவியங்களிலும் வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் தலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம். அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும் சிலருக்காகவே இந்த பதிவு. பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில் குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது.

மேலும் யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம் ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச் சென்றனர்.

images (4)

ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள் அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம் துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள் பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர்.

மாணவிகள் ஜெயா, லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார் மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார்.

images (3)

இதன் பிறகே இருவருக்கும் இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம் செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன் மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால், யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன் மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும் ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் தான் சோதியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோதியா. இதன் பிறகே இவர்களுக்கான பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.

இதன் பிறகு தனது கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும் தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும் வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத் தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள், போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின் பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும், ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில் ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார். தம் மக்களின் சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே தலைவர் பிரபாகரனும் மதிவதனியும்.

இலங்கைச் செய்திகள்

​விபத்து : தேரர் உட்பட 5 பேர் படுகாயம்

​கண்டி - கடுகன்னாவ பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் பேராசிரியர் கும்புறுகம்முவே வஜிர தேரர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் படிக்க...

24th, Feb 2017, 05:29 PM
மனைவியை தும்புத் தடியால் தாக்கிய கணவன்

​மனைவியை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு ஆயிரம் ரூபா அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து தம்புள்ளை நீதவான் பண்டார மேலும் படிக்க...

24th, Feb 2017, 04:43 PM
கேப்பாப்புலவுக்கு ஆதரவாக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

​முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மற்றும் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று கவனயீர்ப்புமேலும் படிக்க...

24th, Feb 2017, 04:31 PM
யாழில் இரவில் நடமாடும் பொலிஸ்

யாழ் குடாநாட்டில் தற்போது இரவு வேளைகளில் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் படிக்க...

24th, Feb 2017, 04:20 PM
யாழில் திடீரென நோய் தொற்று

​யாழ்.மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலை நோயாளர்களால் நிரம்பி வழிகிறது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 03:24 PM
" ஜெ " வாழ்வில் செய்த முக்கிய 7 தவறுகள்

 Photo​ஜெயலலிதாதமிழக அரசியல் அரங்கில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.மேலும் படிக்க...

24th, Feb 2017, 05:11 PM
இன்று இந்த மந்திரத்தை உச்சரியுங்கள் : நல்ல பலன் இன்றே கிடைக்கும்

​சிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும்.மேலும் படிக்க...

24th, Feb 2017, 04:58 PM
இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் பற்றி உலக தமிழரே உங்களுக்கு தெரியுமா?

 Photo  Videoஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 12:07 PM
மேலும் செய்திகள்…
இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் பற்றி உலக தமிழரே உங்களுக்கு தெரியுமா?

 Photo  Videoஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 12:07 PM
பாலியல் தொல்லை தருகிறார்களா : பெண்களே இதோ உங்களுக்கான தளம்

 Photo​“பகடிவதை” என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்களை முறையிடுவதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:22 PM
பெண்ணின் பிறந்த மாதத்தை கொண்டு அவளின் குணம் எப்படி ?

 Photo​ஒரு பெண்ணின் பிறந்த மாதத்தை வைத்து, அவர்களின் குணங்கள் எப்படி என்பதை பற்றிக் கூறிவிடலாம்.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 02:56 PM
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனை

 Photo​பிளஸ்-2 பொதுத்தேர்வு என்பது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு. கனவையும், லட்சியத்தையும் மனதில் தேக்கி கொண்டு இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கப் போகிறது.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 10:04 AM
மேலும் செய்திகள்…
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் - சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

 Photo​சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர். இதை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனமானது சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:55 AM
நோக்கியா விழா: நேரலையில் நீங்களும் பார்க்கலாம், எப்படினு பார்ப்போமா?

 Photo​உலக சந்தையில் மீண்டும் கால் பதிக்கும் நோக்கியா வரவு பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நோக்கியா அறிமுக விழாவினை இணைய வாசிகள் பார்த்து ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:54 AM
ரூ.251க்கு ஸ்மார்ட்போன்: மோசடி வழக்கில் ரிங்கிங் பெல்ஸ் தலைவர் கைது

 Photo​2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை வழங்குவதாக அறிவித்து உலக பிரபலமானது. இந்நிலையில் ரிங்கிங் பெல்ஸ் தலைவர் மோஹித் கோயல் மோசடி வழக்கில் கைது செய்யப்ப்டடுள்ளார்.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:52 AM
சிறந்த வலிநிவாரணியாகும் கடல் வாழ் நத்தையின் நஞ்சு

 Photo​உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளுக்கும் நிவாரணம் தரக்கூடிய வகையில் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் அமெரிக்காவில் Opioid எனப்படும் மாத்திரையும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.மேலும் படிக்க...

24th, Feb 2017, 10:41 AM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

 Photo​தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.மேலும் படிக்க...

24th, Feb 2017, 09:13 AM
நடிகை பாவனா கடத்தல்: முக்கிய குற்றவாளி சுனில் நீதிமன்றத்தில் சரண்

 Photoநடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். நடிகை பாவனா கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில் என்ற பல்சர் சுனில் தலைமறைவாக இருந்தார். அவர் இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைந்தார். பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 17-ந்தேதி இவர் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு கார் மூலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரை டிரைவர் மார்ட்டின் என்பவர் ஓட்டினார். பாவனாவின் காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அந்த கும்பலை சேர்ந்த பிரபல ரவுடி சுனில் உள்பட 5 பேர் காரில் ஏறி நடிகை பாவனாவிடம் பாலியல் கொடுமை செய்து அதை செல்போனிலும் படம்பிடித்தனர். நடிகை பாவனா டைரக்டர் லால் உதவியுடன் இதை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக டிரைவர் மார்ட்டினை கைது செய்தனர். மேலும் கோவையில் பதுங்கி இருந்த சுனிலின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சுனில் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், விஜேஷ் ஆகிய 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுனில் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:21 PM
பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை: திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு

 Photo​நடிகை பாவனா கடத்தலில் எனக்கு தொடர்பு இல்லை என்று நடிகர் திலீப்பை தொடர்ந்து சித்தார்த் பரதனும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:19 PM
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்

 Photo​விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தில் துணை இயக்குநராக நடிக்க உள்ளார். இப்படத்தின் முழுதகவலை கீழே பார்க்கலாம்.விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான `மாவீரன் கிட்டு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்' மற்றும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.மேலும் படிக்க...

23rd, Feb 2017, 05:17 PM
மேலும் செய்திகள்…