தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி- பதவியேற்பு விழா தொடங்கியது

ஆசிரியர் - Tamilan

தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்தியாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

தமிழகத்தின் புதிய அமைச்சர்களுக்கான பட்டியலை ஆளுநரிடம் ஒப்படைத்த பிறகு, பதவி பிரமாணம் செய்துக்கொள்ள வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி உள்பட 26 அமைச்சர்களும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறுவதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மாலை 4.10 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் இது 3-வது அரசு பதவியேற்பு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு: எடப்பாடி பழனிச்சாமி- ஆளுநர் சந்திப்பு

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும் தருவாய் தற்போது உருவாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை என்ற செய்தி வந்தவுடனே கூவத்தூரில் அவர் முன்னிலையில் அதிமுகவின் எம்.எல்.ஏக்களால் சட்டசபை குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டார்.

இதன் பின்னர் இருமுறை ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இன்றும் ஆளுநரை சந்திக்க மூன்றாவது முறையாக தற்போது ஆளுநர் மாளிக்கைக்கு சென்றுள்ளார்.

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் ஆட்சி அமைக்க கூறிவிட்டால் இன்று மாலையே தமிழகத்தின் முதல்வராக அவர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதையடுத்து கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸ் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவு அளிக்காது என இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…