அசுஸ் சென்போன் ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அசத்தல் அறிமுகம்

ஆசிரியர் - Editor

அசுஸ் நிறுவனத்தின் புதிய சென்போன் கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை பற்றி இங்கு பார்ப்போம்.

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் கோ சீரிஸ்-இல் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசுஸ் சென்போன் கோ 5.0 எல்டிஇ (ZB500KL) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் வர்த்தகர்களிடமும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அசுஸ் சென்போன் கோ 5.0 எல்டிஇ (ZB500KL) மாடல் முன்னதாக வெளியான சென்போன் கோ 5.0 எல்டிஇ (T500) மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் 7999 ரூபாய்க்கு வெளியிடப்பட்டது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை அசுஸ் சென்போன் கோ 5.0 எல்டிஇ (ZB500KL) 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட TFT டிஸ்ப்ளே, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் 4.0 மற்றும் வாழக்கமான கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் 2600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…