கடுமையாக உழைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சாந்தனு

ஆசிரியர் - Editor

கடுமையாக உழைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் என்று வளர்ந்த வரும் நடிகர்களில் ஒருவரான சாந்தனு தெரிவித்துள்ளார். அவர் அளித்த முழு பேட்டியை கீழே பார்ப்போம்.சாந்தனு, சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் ‘முப்பரிமாணம்’. இதில் தம்பிராமையா, லொள்ளு சபா சாமிநாதன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஷமலாலயா கிரியேஷன் தயாரித்துள்ள இதை அதிரூபன் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மார்ச் 3-ந் தேதி வெளியிடுகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தனு பேசும் போது...

“எனக்கு என்னுடைய அப்பா, அம்மா, என் சகோதரி, என் மனைவி எல்லோரும் ஆதரவாக இருக்கிறார்கள். நான் எதிர்பார்க்கும் ஒரு நல்ல வெற்றியை பெற விரும்புகிறேன்.

ஒரு விழாவில் விஷால் பேசும் போது, ‘சாந்தனு ஜெயிச்சா இந்த பட உலகே ஜெயிச்ச மாதிரி என்றார். அந்த அளவுக்கு எனக்கு பொறுமையும், திறமையும் இருக்கிறது’ என்றார். எல்லோருடைய வாழ்த்துக்களும் எனக்கு இருக்கிறது.

‘முப்பரிமாணம்’ படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். இப்போது மட்டுமல்ல, இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் நான் கடுமையான உழைப்பை கொடுப்பேன். நான் இதுவரை நடித்த படங்களில் ஆழமான கதை, கருத்து உள்ள படம் இது. எனவே, இந்த படம் நிச்சயம் எனக்கு திருப்பத்தை தரும்.

இனி எந்த மாதிரி பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இந்த படத்தின் இயக்குனர் அதிரூபன் என்னிடம், நீங்க ஹீரோ இல்லை. ஒரு குணசித்திர நடிகர் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றார். அது போல் தான் இதில் நடித்திருக்கிறேன். இதன் டீசரை பார்த்து ரஜினி பாராட்டினார். இனி எல்லா படங்களிலும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இன்று ரசிகர்களின் ரசிப்பு தன்மை மாறி விட்டது. அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டு பையனாக நடிகர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவே விரும்புகிறேன்” என்றார்.

சிருஷ்டி டாங்கே பேசும் போது, “இந்த படத்தில் இயக்குனர் என்னிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்த்தார். அதற்காக கடுமையாக உழைக்க வைத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.

இலங்கைச் செய்திகள்

மேலும் செய்திகள்…
ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்னவாகும்?

 Photo​ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் விரைவில் நிறைவுற இருக்கும் நிலையில் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் உங்களின் ஜியோ இணைப்பு என்னவாகும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 10:02 AM
அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு!

 Photoபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:58 AM
புதிய வர்ணத்தில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus

 Photo​ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:54 PM
வீடியோ எடிட் செய்வதற்கான புதிய ஆப்பிளிக்கேஷன்

​ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய 9.7 அங்குல ஐபேட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க...

24th, Mar 2017, 03:53 PM
மேலும் செய்திகள்…

சினிமா செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

 Photo​ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.மேலும் படிக்க...

25th, Mar 2017, 09:41 AM
மேலும் செய்திகள்…