மரகத நாணயம்

ஆசிரியர் - Editor II

நடிகர்ஆதி

நடிகை        நிக்கி கல்ராணி

இயக்குனர்சரவன் எ ஆர் கே

இசை                      திபு நின்னான் தாமஸ்

ஓளிப்பதிவு           ஷங்கர் பி வி

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு எதிரிகளிடம் போரிட்டு வெற்றியும் அடைகிறார்.

மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.

இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள். இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.

இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான். மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை. இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.

ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.

நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள். ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.

ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான். கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.

மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.

கடனால் தப்பிச் சென்றார் மஹிந்த

நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க முடியாமல், கடனை திருப்பி செலுத்த பணம் இல்லாமல் கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் படிக்க...

17th, Oct 2017, 09:05 AM
மோசடி செய்த பெண் கணக்காளர்

பேராதனை பட்டப்படிப்பு அறிவியல் நிறுவனத்தின் தலைமை பெண் கணக்காளர் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

17th, Oct 2017, 09:03 AM
வித்தியா கொலையாளிகளில் 4 பேருக்கு சிறை மாற்றம்

 Photoமாணவி வித்தியா கொலையாளிகள் ஏழு பேரையும் பிரிந்து பல சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

17th, Oct 2017, 09:00 AM
பாதிரியர் மீது தாக்குதல்

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

17th, Oct 2017, 08:57 AM
அரசாங்கத்திற்கு எதிராக நாமல்

தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

17th, Oct 2017, 08:55 AM
" மெர்சல் " ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை தரவில்லை என்றால் தீக்குளிப்போம்

 Photoஅரியலூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் தங்களுக்கு ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை தரவில்லை என்றால் படம் வெளியாகும் தியேட்டர் முன்பு தீக்குளிப்போம் என மிரட்டல் மேலும் படிக்க...

17th, Oct 2017, 09:13 AM
கள்ளக்காதல் தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகன்

 Photoகள்ளக்காதல் தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகனை பொலிசார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க...

17th, Oct 2017, 09:07 AM
வித்தியா கொலையாளிகளில் 4 பேருக்கு சிறை மாற்றம்

 Photoமாணவி வித்தியா கொலையாளிகள் ஏழு பேரையும் பிரிந்து பல சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

17th, Oct 2017, 09:00 AM
வரலாற்றில் இன்று : 17.10.2017

 Photoஅக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

17th, Oct 2017, 08:35 AM
மேலும் செய்திகள்…
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா?

 Photoஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:25 AM
பொண்ணுங்க கிட்ட பசங்க எதிர்ப்பாக்குற அழகு என்னன்னு தெரியுமா…!

 Photo​இயல்பாகவே, ஆண்கள் பெண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும், பெண்கள் ஆண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும் தான் இருக்க ஆசைப்படுவார்கள். பொதுவாகவே பெண்களிடம் ஆண்கள் ஹாலிவுட் அளவில் பளபளப்பான, வழுவழுப்பான அழகை எல்லாம் எதிர்பார்பதில்லை. மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:14 AM
மேலும் செய்திகள்…
மிகப்பெரிய கோப்புக்களை பாதுகாப்பாக அனுப்ப இதோ ஒரு அட்டகாசமான வசதி

 Videoமின்னஞ்சல் உட்பட ஏனைய சமூக வலைத்தள அப்பிளிக்கேஷன் ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட கொள்ளளவுடைய கோப்புக்களை மாத்திரமே அனுப்ப முடியும்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:13 PM
எதிர்காலத்தில் பேஸ்புக்தான் உலகம்

 Videoஇணைய உருவாக்கத்தினால் உலகமே உள்ளங் கையில் என்று ஆகிவிட்டது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:08 PM
90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் புதிய திட்டம்

 Photo​ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக வோடபோன் நிறுவனத்தின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 90 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 11:53 AM
குறைந்த விலையில் Civic Type R

 Photoஹொண்டா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் Civic Type R எனும் கவர்ச்சிகரமான காரை அறிமுகம் செய்திருந்தது.மேலும் படிக்க...

14th, Oct 2017, 01:14 PM
மேலும் செய்திகள்…
மெர்சலுக்கு 12A சென்சார் சான்றிதழ்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி ரிலீசாக வெளிவர உள்ளது. படம் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் வெற்றிகரமாக வெளிவர உள்ளது.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:34 PM
தீபாவளிக்கு ரசிகர்களை மெர்சலாக்க போகும் ஓவியா

 Photoகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்து சென்றவர் ஓவியா. இவர் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:31 PM
மணிரத்தினம் படத்தில் ஆரவ்

 Photoபிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ் தன்னை மிக சிறந்த நடிகர்கஞ் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார்.மேலும் படிக்க...

16th, Oct 2017, 01:23 PM
மேலும் செய்திகள்…