​ஆப்பிழுத்த தமிழரசுக்கட்சி ?

ஆசிரியர் - Editor II

விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரைஎழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கைவிட்டால் அதுதோல்வி. முன்னெடுத்தாலும் அதுதோல்விதான். நம்பிக்கையில்லாததீர்மானத்தில் அவர்கள் வென்றாலும் அதுதோல்விதான். தோற்றாலும் அதுதோல்விதான். இதைச்சற்றுவிரிவாகப் பார்க்கலாம்.

இப்போதுள்ள எண்ணிக்கை நிலவரங்களின்படி முதலமைச்சருக்கு எதிரானஅணியானது அரசுதரப்புமற்றும் தமிழ்த்தேசியநிலைப்பாட்டுக்கு எதிரானதரப்புக்களோடு கூட்டுச் சேர்ந்தால் மட்டுமே விக்கினேஸ்வரனைக் கவிழ்க்கலாம் என்றுதோன்றுகிறது. அங்கே ஒரு கொள்கைப் பிரச்சினைவரும். முதல்வரைக் கவிழ்ப்பதற்காக கொள்கை எதிரிகளோடு கூட்டுச் சேர்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கவேண்டியிருக்கும். அதுவும் நீதியைநிலைநாட்டுவதற்காக கட்சிக்குகட்டுப்படமறுத்தார் என்ற ஒரு குற்றச்சாட்டின் பேரிலேயே அவரைக் கவிழ்க்கவேண்டியிருக்கும். இவ்வாறு கொள்கையைக் கைவிட்டு கூட்டுச் சேர்ந்தாலும் அது ஒரு சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கும். எனவேகொள்கை ரீதியாகப் பார்த்தால் அதுஒருசறுக்கல்தான். தோல்விதான். அதாவது வென்றாலும் அது ஒரு தோல்விதான்.

அதேசமயம் வாக்கெடுப்பில் விக்கினேஸ்வரன் பெரும்பான்மையை நிரூபித்தால் அதுவும் தோல்விதான்.அதன் பின் விக்கினேஸ்வரன் மாகாணசபைக்குள் பலமடைந்துவிடுவார். அவரைக் கவிழ்க்க முயன்றவர்கள்எந்தமுகத்தோடு மாகாணசபைக்குப் போவது?அங்கேவிக்கினேஸ்வரனோடு எந்தஅடிப்படையில் சேர்ந்தியங்குவது? இப்படிப் பார்த்தால் இப்போதுள்ள வடமாகாணசபையானது அதன் கூட்டுணர்வை இனிமேல் திரும்பப் பெறவேமுடியாது.

ஆனால் விக்கினேஸ்வரனைப் பொறுத்தவரை இப்போதுள்ள நெருக்கடிகளைஅவர் வெற்றிகொண்டாலும் அதுவெற்றிதான். அதில் அவர் தோற்றாலும் வெற்றிதான்.

வாக்கெடுப்புநடக்கவில்லையென்றால் அதுவும் அவருக்குவெற்றி. வாக்கெடுப்புநடந்துஅதில் அவர்வென்றால்அவருடைய நீதிக்கும்,கொள்கைக்கும்கிடைத்த வெற்றியாகவும்,அங்கீகாரமாகவும் அது அமையும். ஓர் அக்கினிப் பரீட்சையிலிருந்து மீண்டெழுவதாக அது அமையும். தோற்பாராக இருந்தால் ஒன்றில் அவர் ஒரு நீதிபதியாக அரசியலைவிட்டு ஒதுங்கக்கூடும். அல்லது சீண்டப்பட்டவராக ஒரு குத்துச்சண்டை வீரனைப்போல அடுத்த சுற்றுமோதலுக்கு தயாராகக்கூடும். அவர் தனது இளமைக்காலத்தில் ஒருகுத்துச்சண்டைவீரனாக இருந்தார் என்பதை இங்குசுட்டிக் காட்டலாம்.

அவர் ஏற்கெனவேஒருநீதிபதியாகத்தான் ஓய்வுபெற்றார். அதுசட்டத்துறையில். இப்பொழுதுஅரசியலிலும் ஒருநீதிபதியாக. அதாவது,எனக்குநீதிஎன்றுபட்டஒன்றைநிலைநாட்டியதற்காகத்தோற்கடிக்கப்பட்டேன் என்றதிருப்தியோடு. அரசியலைவிட்டுஒதுங்கலாம். அப்படிப்பார்த்தால் அதுவும் அவருக்குவெற்றிதான். மாசற்றஅரசியலைநோக்கிஓர் உயிருள்ளமுன்னுதாரணத்தைசெய்துகாட்டியவர் என்றபெருமைஅவரைச் சேரும்.ஒருநீதிபதியாகவேவந்தேன். ஒருநீதிபதியாகவேபோகிறேன் என்று கூறிவிட்டுப் போய்விடலாம்.

அல்லதுதனதுநீதிக்காகதன்னைதோற்கடித்தவர்களைமற்றொருசுற்றில் தோற்கடிப்பதுஎன்றுவைராக்கியம் பூண்டுஒருமாற்றுஅணிக்குஅவர் தலைமைதாங்கமுன்வரக்கூடும். பொதுவாககுத்துச்சண்டைவீரர்களின் இயல்பும் அதுதான்.தமிழ் டயஸ்பொறாவில் உள்ளமுக்கியமானஓர் அரசியல் ஆய்வாளரானவேல் தர்மாதனதுதளத்தில் சிலநாட்களுக்குமுன் குத்துச்சண்டைதொடர்பில் பிரசுரித்திருந்தஒருமேற்கோளைஇங்குசுட்டிக் காட்டலாம். “வாழ்க்கையானதுகுத்துச்சண்டையையொத்தஒருவிளையாட்டுத்தான். நீங்கள் கீழேவிழும் பொழுதுதோல்விஅறிவிக்கப்படுவதில்லை. நீங்கள் மீண்டெழுவதைநிராகரிக்கும் போதேஅதுதோல்வியாகஅறிவிக்கப்படுகின்றது.”விக்கினேஸ்வரனும் கவிழ்க்கப்படும் பொழுதுஒருகுத்துச்சண்டைவீரனைப்போலதுள்ளிஎழுவாரா?அதாவதுஅக்கினிப் பரீட்சையில் உருக்கிபுடமிடப்பட்டவராகமேலெழுவாரா?

அவருக்குஆதரவாககடையடைப்பையும்,ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்குபடுத்தும் ஒருசந்திப்பைதமிழ் மக்கள் பேரவைவியாழக்கிழமைஏற்பாடுசெய்திருந்தது. அதில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியானதுவிக்கினேஸ்வரன் மாற்றுஅணிக்குதலைமைதாங்கவேண்டும் என்பதைஅழுத்திக் கூறியிருந்தது. நல்லூரில் தொடங்கிஅவரதுவசிப்பிடத்தைநோக்கிச் சென்றஆர்ப்பாட்டத்திலும் மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களும் ஈ.பி.ஆர்.எல்,எப்பைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டார்கள். அவர்களைத் தவிரபடித்தநடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் அதில் பங்குபற்றியிருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உரையாற்றியவிக்கினேஸ்வரன் நம்பிக்கைதொனிக்கப் பேசினார். பின்வாங்கப் போவதில்லைஎன்பதனைகுறிப்பால் உணர்த்தும் விதத்தில் அவருடையபேச்சுஅமைந்திருந்தது.அதற்குமுதல் நாள் அவரைச் சந்தித்தமக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித்தலைவர்களோடும் அவர் தன்னம்பிக்கையோடுகதைத்திருக்கிறார். அச்சந்திப்புக்களில் ஒருமாற்றுஅணியைஉருவாக்கத் தேவையானஒருமனோநிலைஅவரிடம் முன்பைவிடஅதிகமாகக் காணப்படுவதுஅவதானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒருமாற்று அணியை அவராக உருவாக்கத்தக்க ஒரு வாழ்க்கை ஓழுக்கம் அவருக்கில்லை. ஒருகட்சியை அல்லது அமைப்பைக் கட்டியெழுப்பத் தக்க ஓர் ஆளுமை அவரல்ல. ஆனால் ஏனையவர்கள் ஒருகட்சியைக் கட்டியெழுப்பிவிட்டு அழைத்தால் அவர் தனக்குரிய ஆசனத்தில் போய்அமர்வார். மாகாணசபைக்குள்ளும் அவர் அப்படித்தான் அழைத்துவரப்பட்டார். தமிழ் மக்கள் பேரவைக்குள்ளும் அவர் அப்படித்தான் அழைத்துவரப்பட்டார். ஒருமாற்றுஅணிபொறுத்தும் அப்படித்தான் நடக்கக்கூடும். அதாவதுதமிழரசுக்கட்சியானதுவிக்கினேஸ்வரனைஅவருடையமுகத்தில் குத்தியதன் மூலம் சீண்டிவிட்டிருக்கிறது. சிலசமயம் அவர் ஒருமாற்றுஅணியைக் குறித்துசிந்திப்பதற்குதமிழரசுக்கட்சியேகாரணமாகவும் அமையலாம்.அவருக்கும்,சம்பந்தருக்குமிடையேவர்க்ககுணாம்சங்களைப் பொறுத்தவரைஒற்றுமைகளேஅதிகம் என்றுயாழ்ப்பாணத்தில் உள்ளஒருமூத்தஊடகவியலாளர் கூறுவார். விக்கினேஸ்வரன் சம்பந்தரின் மீதுஅதிகம் மதிப்பைக் கொண்டிருக்கிறார். அவர் தானாகசம்பந்தரைஉடைத்துக் கொண்டுவெளியேவரமாட்டார் என்றேபொதுவாகநம்பப்படுகிறது. ஆனால் நம்பிக்கைவாக்கெடுப்பின் மூலம் தமிழரசுக்கட்சியானதுஅவரைவெளியே தூக்கிவீசுமாக இருந்தால் அவர் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்?

ஒருநீதிபதியாக இருந்தவரைஅரசியல்வாதியாக்கியஅதேதமிழரசுக்கட்சியேஅவரை இப்பொழுதுஒருதலைவராகவும் செதுக்கிவருகிறதா? மாகாணசபையில் தனது முடிவை வாசித்தறிவித்தபொழுதுஅவர் பேசியவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அதுதெரியவரும். ஒருநீதிபதியாகத்தான் அவர் தீர்ப்பைவழங்கினார். ஆனால் மக்கள் கருத்தைஎல்லாவற்றையும் விடமேலானதாகஉயர்த்திக் காட்டுகிறார். அமைச்சர்கள் குற்றம் இழைத்தார்களோ இல்லையோமக்கள் அப்படிக் கருதுவதனால் அதற்குபொறுப்புஏற்கவேண்டும் என்றதொனிப்படஅவர் உரையாற்றினார். அமைச்சர்களின் தன்னிலைவிளக்கம் குறித்தும் மக்கள் என்னகருதுகிறார்கள் என்பதேமுக்கியம் என்றதொனிப்படஅவர் உரையாற்றினார். தன்னைமக்களேஒருமுதலமைச்சராகத் தெரிந்தெடுத்தார்கள் என்றும் அந்தஉரையின் இறுதியில் கூறுகிறார். வியாழக்கிழமையும்,வெள்ளிக்கிழமையும்நடந்தஆர்ப்பாட்டங்களில்பொழுதும் மக்களின் ஆதரவைக் கண்டுஅவர் மனமுருகினார். எனதுபாதைசரிஎன்பதைமக்கள் நிரூபித்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் அவரை“மக்கள் முதல்வர்”என்றுவிழித்தார்கள்.மாகாணசபைக்குள் கடந்த இரண்டரைஆண்டுகளாகஅதிகபட்சம் நீதிபதியாகவும் குறைந்தளவேதலைவராகவும்நிர்வாகியாகவும்செயற்பட்டஒருவரைதமிழரசுக்கட்சியானதுகவிழ்க்கமுற்பட்டுஒப்பீட்டளவில் முன்னரைவிடக் கூடுதலானஅளவுஒருதலைவராகமாற்றிவருகிறதா?

ஒருபழுத்தஅரசியல்வாதியானசம்பந்தருக்கு இது தெரிகிறது. அவருக்குமூன்றுபிரச்சினைகள் உண்டு. முதலாவதுதனக்குநிகராகஅல்லதுதன்னைவிடமேலாகதனதுகட்சிக்குள்ளேயேஒருதலைமைமேலெழுவதைஎப்படிச் சமாளிப்பது? இரண்டாவதுநம்பிக்கைவாக்கெடுப்பின் மூலம் ஒருபலமானஎதிரிஉருவாகக் கூடும் என்றஒருகணிப்பு. மூன்றாவதுவிக்கினேஸ்வரனைக் கவிழ்ப்பதற்காககொள்கைஎதிரிகளைச் சரணடைவதன் மூலம்தமிழரசுக் கட்சியானதுசுயசிதைவைஅடைந்துவிடுமோஎன்றஅச்சம்.

இப்போதுள்ளதமிழ்க்கட்சிகளில் மூத்தஅனுபவத்தால் பழுத்தஒரேகட்சிதமிழரசுக்கட்சிதான். பலதசாப்தகாலபாரம்பரியத்தையும்,ஒப்பீட்டளவில் பலமானஒருகட்சிக்கட்டமைப்பையும்அதுகொண்டிருக்கிறது. இப்போதுள்ளதமிழ்க்கட்சிகளில் ஒப்பீட்டளவில் பலமானகட்சிக்கட்டமைப்பைக் கொண்டிருப்பதுதமிழரசுக்கட்சியும்,ஈ.பி.ஆர்.எல்.எப்பும் தான். அதிலும் தமிழரசுக்கட்சியானது மூத்தஅனுபவஸ்தர்களையும்,தொடர்ச்சியறாப் பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறது. ஆனால் விக்கினேஸ்வரனின் விடயத்தில் அக்கட்சியானதுகொள்கையைப் பற்றிசிந்தித்ததோ இல்லையோஆகக் குறைந்தபட்சம் கட்சியின் எதிர்காலம் என்றநோக்குநிலையிலிருந்து கூட சிந்திக்கவில்லையென்றேதோன்றுகிறது. இது சிலசமயம் அக்கட்சியைபிளவுபடுத்தக்கூடும். உடனடிக்கில்லையென்றாலும் எதிர்காலத்தில் அதற்கானவாய்ப்புக்கள் அதிகமாகத் தெரிகின்றன.

தமிழரசுக்கட்சிக்குள்ளிருந்தும் ஓர் அணிவெளியேறி ஏனைய கட்சிகளோடு இணைந்துஒருமாற்றுஅணியைஉருவாக்குமாக இருந்தால் அதற்குவிக்கினேஸ்வரன் தலைமைதாங்குவாராக இருந்தால் அதுஈழத்தமிழ் அரசியலில் ஒருபுதியஓட்டத்தைஉருவாக்கக்கூடும்.

வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும்நடந்தஆர்ப்பாட்டங்கள் நன்குஒழுங்கமைக்கப்பட்டவைஅல்ல. அவசரகதியில் ஏற்பாடுசெய்யப்பட்டவைஅவை. வியாழக்கிழமைநடந்த ஆர்;ப்பாட்டங்கள் முழுக்கமுழுக்கசமூகவலைத்தளங்களால் சிலமணித்தியாலங்களுக்குள் ஒழுங்கமைக்கப்பட்டவைதான். அவற்றில் முந்நூறுக்கும் குறையாதவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். வெள்ளிக்கிழமைநடந்தஆர்ப்பாட்டமும் ஓர் அவசரஏற்பாடுதான். அதில் ஆயிரத்திற்கும் குறையாதவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இவ்விருஆர்ப்பாட்டங்களிலும்தமிழரசுக்கட்சிக்குஎதிரானவர்கள் மட்டும்தான் பங்குபற்றினார்கள் என்பதல்ல. தமிழரசுக்கட்சிஆதரவாளர்கள் சிலரையும் அங்கேகாணமுடிந்தது. நீதிவழங்கியதற்காகவிக்கினேஸ்வரனைஅகற்றியதுதொடர்பில் அவர்களுக்கும் கட்சியோடுஉடன்பாடில்லைப்போலும்.

வெள்ளிக்கிழமைநடந்தஆர்ப்பாட்டத்தில் நல்லூரிலிருந்துகோவில் வீதிவழியாகவிக்கினேஸ்வரனின் வசிப்பிடத்தைநோக்கிமெதுவாகச் சென்றுகொண்டிருந்தபொழுதுஒரு மூத்தபுலமையாளர்என்னோடுசேர்ந்துநடந்துவந்தார். அவர் தமிழரசுக்கட்சியின் மூத்தஉறுப்பினர்களில் ஒருவர். ஒருதேர்தல் தொகுதிக்குகட்சிஅமைப்பாளராகவும் இருந்தவர்.அவர் வேடிக்கையாகஎன்னிடம் சொன்னார். “இந்தஊர்வலத்தில் என்னைக் கண்டால் எனதுகட்சிக்காரர்கள் சிலநேரம் என்னைஅடித்துநொறுக்கக்கூடும். அப்படியாரும் தாக்கினால் அதன் பின் அடுத்ததேர்தலில் நான் போட்டியிடுவேனாக இருந்தால் அதுஎனக்குஅதிகரித்தவெற்றிவாய்ப்புக்களைப் பெற்றுத் தருமா? ”என்று.அவர் அதைப் பகிடியாகத்தான் சொன்னார். ஆனால் அந்தப் பகிடிக்குள்ளும் சமகாலஅரசியலைஉணர்த்தும் ஒருசெய்திமறைந்திருக்கிறதா?

உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் வெளிவிவகார அமைச்சர்

 Photo​வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் திலக் மாரப்பன இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 07:08 PM
தமிழரசுக் கட்சியிடம் கையேந்துமா ரெலோ?

 Photo​வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகப் போவதில்லை என்று மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் அறிவித்ததைத் தொடர்ந்து அவரைப் பதவியை விட்டுத் தூக்குவதற்காக தமிழரசுக் கட்சியிடம் ரெலோ கையேந்தப் போகிறதா மேலும் படிக்க...

18th, Aug 2017, 07:00 PM
வடக்கில் புலி என பொய் பிரச்சாரம்

 Photo​வடக்கு சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளைக் காரணங்காட்டி எதற்கெடுத்தாலும் புலிகள் மீளத் தோற்றம் பெறுகின்றனர் எனப் பொய்ப் பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விசனம் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 06:58 PM
மேன்முறையீடு இருக்குமாயின் தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பிரதேச செயலாளர் வேண்டுகோள்

 Photo​புதிய சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதற்காக தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய பயனாளிகளின் பெயர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 06:55 PM
தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி: விமல் குற்றச்சாட்டு

​இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 06:45 PM
உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் வெளிவிவகார அமைச்சர்

 Photo​வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் திலக் மாரப்பன இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 07:08 PM
வடக்கில் புலி என பொய் பிரச்சாரம்

 Photo​வடக்கு சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளைக் காரணங்காட்டி எதற்கெடுத்தாலும் புலிகள் மீளத் தோற்றம் பெறுகின்றனர் எனப் பொய்ப் பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன விசனம் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 06:58 PM
புதிய கடற்படை தளபதியான தமிழர் குறித்து ஜனாதிபதியின் பதிவு

 Photo​இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்பளித்துள்ளார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 06:42 PM
விரைவில் அமைக்கப்படவுள்ள வன்னி பல்கலைக்கழகம்

 Photo​யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வன்னி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 04:43 PM
பிணைமுறி இலாபத்தில் மற்றொரு நிறுவனத்திற்கும் பங்கு வழங்கப்பட்டுள்ளது

 Photo​பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊடாக பர்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் உழைத்த இலாபத்தில் இருந்து பங்கொன்று மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தெரிய வந்துள்ளது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 04:39 PM
மேலும் செய்திகள்…
கும்பராசி : உங்கள் குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ

 Photo​அலட்டிக் கொள்ளாமலும் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்ளாமலும் வாழக்கூடிய சூட்சமம் தெரிந்த கும்பராசிமேலும் படிக்க...

18th, Aug 2017, 02:32 PM
ஹிந்து - யூத பெண்களிடையே முதல் மதக் கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணம்

 Photo​ பிரிட்டனில் ஹிந்து மற்றும் யூத மதத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் முதல் முறையாக மத கலப்பு ஓரினச்சேர்க்கை திருமணத்தை செய்து கொண்டனர். மேலும் படிக்க...

18th, Aug 2017, 12:06 PM
முதுமையை வென்ற விளையாட்டு வீரர்கள்

 Photoஉலகின் மிக சிறந்த தடகள வீரர்கள் லண்டனில் கொண்டாடப்படும் வேளையில், அவர்களுடைய பழைய சகாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியை முடித்துவிட்டு ஊர் திரும்புகின்றனர் என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆனால், இந்த இருதரப்பினரும் தங்களது வயது என்ற விஷயத்தில் மட்டும் முற்றிலும் எதிரெதிராக இருந்தாலும், விளையாட்டின் மீதான ஈடுபாடு, மகிழ்ச்சி மற்றும் மன உறுதி ஆகியவற்றில் ஒருதரப்பினருக்கு மற்றொருவர் சளைத்தவர்களல்ல.மேலும் படிக்க...

17th, Aug 2017, 06:34 PM
மேலும் செய்திகள்…
பூமியில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி?

 Photo​பூமியில் தோன்றிய முதல் விலங்கு தோன்றியது எப்படி என்ற மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:22 AM
Nokia 8 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான வீடியோ மற்றும் சிறப்பம்சங்கள்

 Photo​நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவ்வருடத்தில் தொடர்ச்சியாக சில அன்ரோயிட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:19 AM
சாம்சுங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சரிவு

 Photo​சாம்சுங் நிறுவனம் அண்மையில் எதிர்பாராத விளைவாக பாரிய சரிவு ஒன்றினை எதிர்நோக்கியிருந்தது.மேலும் படிக்க...

18th, Aug 2017, 11:17 AM
புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Asus

 Photo​கணினி வடிவமைப்பிற்கு பெயர் பெற்ற நிறுவனமான Asus ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்து வருகின்றது.மேலும் படிக்க...

17th, Aug 2017, 12:53 PM
மேலும் செய்திகள்…
விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் கஜோல், அமலாபால், விவேக் மற்றும் பலர் நடித்து வெளியான VIP-2 படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. மேலும் படிக்க...

18th, Aug 2017, 03:18 PM
மாற்றத்தை நிகழ்த்திய விவேகம்

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் படிக்க...

18th, Aug 2017, 03:16 PM
மேலும் செய்திகள்…