மாம் – திரைவிமர்சனம்

ஆசிரியர் - Editor II

டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் ஸ்ரீதேவி. அத்னான் சித்திக் ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இதில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் சாஜல் அலி. சாஜலும் ஸ்ரீதேவி வேலை பார்க்கும் பள்ளியிலேயே படிக்கிறாள். ஸ்ரீதேவிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனினும் சாஜல் அலியை, தன் மகளாக பார்க்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள சாஜல் அலி மறுக்கிறாள். மாறாக ஸ்ரீதேவியை மேம் என்றே அழைக்கிறாள்.

இவ்வாறாக நாட்கள் மெல்ல கடந்து செல்ல, தன்னுடன் படிக்கும் தோழியின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாஜல் அலி செல்கிறாள். இந்நேரம் பார்த்து வேலை விஷயமாக அத்னான் சித்திக் வெளியூர் சென்று விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் சாஜல் வராததால் ஸ்ரீதேவி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க, சாஜல் அங்கு இல்லை. சாஜலுடன் படிக்கும் சக மாணவன், அவனது நண்பர்கள் இணைந்து சாஜலை கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விடுகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் வருகிறார். அவரது பிரயாசையின் பேரில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றாவாளிகள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

தன்னை இந்த நிலைமைக்கு ஆழ்த்தியவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லையே என்று சாஜல் மனக் கஷ்டத்தில் குமுறுகிறாள். மகளின் இந்த நிலைமையை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ரீதேவி, குற்றவாளிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதன்படி துப்பறிவாளரான அக்ஷய் கண்ணாவின் உதவியுடன், குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார்? எந்த மாதிரியான அவர்களுக்கு தண்டனை வழங்கினார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? சாஜல் அலி, ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. பள்ளியில் ஆசிரியராகவும், வீட்டில் அம்மா, மனைவி என ஒரு குடும்ப பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழிவாங்குவதிலும், அதற்கான முடிவுகளை எடுப்பதிலும் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

பாகிஸ்தானின் பிரபல நடிகரான அத்னான் சித்திக் ஒரு தந்தையாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் ஓட்டத்திற்கே அச்சாணியான சாஜல் அலி, ஸ்ரீதேவியை எதிர்க்கும் மகளாகவும், தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் மனம் குறுகி கஷ்டப்படுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தானச் சேர்ந்த இவரை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது.

நவாசுதீன் சித்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக, தான் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்கிறார். அதேநேரத்தில் குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அவர் எடுக்கும் முயற்சியும் சிறப்பாக உள்ளது. அக்ஷய் கண்ணா படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து சென்றாலும், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக அவரது வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில், பெண்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையாது. எந்த நேரத்திலும் பெண்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சந்தர்பங்கள் உருவாகலாம். இவ்வாறு பெண்களுக்கு இளைக்கப்படும் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. மேலும் அத்தகைய நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குற்றச் செயலுக்கு ஆளாக்கப்பட்டால், அந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும். அந்த பெண்ணின் குடும்பத்தார் எந்தளவுக்கு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தின் மூலமாக விளக்கியிருக்கும் ரவி உதயவாரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் படத்தை பார்க்க, ஒரு ஆவணப்படத்தை பார்த்த அனுபவமே இருக்கிறது. அந்தளவுக்கு படத்தின் திரைக்கதை மெல்ல செல்கிறது. மற்றபடி படம் ஒரு நல்ல செய்தியை எடுத்துரைக்கிறது.

இவ்வாறாக மெதுவாக நகரும் திரைக்கதையை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பார்க்கும் போது, பொறுமையாக பார்க்க முடிகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் `மாம்’ பொறுமையானவள்.

வாக்களிக்கும் உரிமை தாமதமாகாத வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள அனுமதி

​18 வயது பூர்த்தியான இளைஞர்களுக்கு தாமதமின்றி வாக்களிக்கும் உரிமையை வழங்க ஏதுவாக, துணை வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேலும் படிக்க...

22nd, Nov 2017, 03:51 PM
இன்று மாலை இலங்கை வான்பரப்பில் தெரியும் அதிசயம்

​நாசாவின் சர்வதேச விண்வெளிமையத்தை இன்று இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 03:50 PM
சாய்ந்தமருது அபிலாஷை நிறைவேற சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்

​சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும் என சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:58 PM
ஆவா குழுவின் உளவாளி வௌ்ளை வேனில் சென்ற பொலிஸாரால் கைது

​ஆவா குழுவின் உளவாளி என்று கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:50 PM
இன்று மாலை இலங்கை வான்பரப்பில் தெரியும் அதிசயம்

​நாசாவின் சர்வதேச விண்வெளிமையத்தை இன்று இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 03:50 PM
​சுன்னாகத் தண்ணீரில் கழிவு எண்ணெய் கலப்பு? அவதிப்படும் மக்கள்

 Photoயாழ்.சுன்னாகப் பிரதேசங்களில் உள்ள கிணற்றுத் தண்ணீரில்கழிவு எண்ணெய்கலந்திருக்கிறதாஎன்பது தொடர்பில் ஒன்றுக்கொன்று முரனான அறிக்கையால் மக்கள் மேலும் படிக்க...

22nd, Nov 2017, 12:49 PM
சிறுவனை துஷ்பிரயோகம் செய்துவிட்டு ரூ.20யும் வழங்கியவர் கைது

 Photo​சபுகஸ்தலாவ பகுதியில், பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் 37 வயதான ஒருவர், சிறுவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:43 PM
சீன இராணுவ அதிகாரிகள் இலங்கை விஜயம்

 Photoசீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 01:23 PM
எழுச்சி பெறும் மாவீரர் நாள்

 Photo2005 ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்திலும் 2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு கிழக்கு முழுவதிலும் நேற்று முதல் மீண்டும் மாவீரர் வாரம் பகிரங்கமாக ஆரம்பமாகியுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 01:21 PM
மேலும் செய்திகள்…
யாழ்ப்பாணத்தில் சுனாமியா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 Photoயாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 02:07 PM
இன்று பிற்பகல் மழை பெய்யலாம்!

 Photo​இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர், மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை அடுத்து மைக்ரோசொப்ட்டின் அதிரடி நடவடிக்கை

 Photoமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் அப்பிளிக்கேஷனை சீனாவின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:04 PM
புதிய நிறத்தில் விற்பனையாகும் சியோமி Mi A1 - Lankasri News

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான Mi A1-ன் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:02 PM
வியாழன் கிரகத்தில் பயங்கர புயல்

 Photoபூமியில் மட்டுமன்றி ஏனைய கிரகங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் உண்டாகின்றமை பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

21st, Nov 2017, 02:54 PM
2018ல் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்

பூமி சுற்றும் வேகமானது குறைந்து வருவதை அவதானித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையில் குறைவு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

21st, Nov 2017, 02:52 PM
மேலும் செய்திகள்…
இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள்

தல அஜித் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். ஆனால் அஜித் இந்த இடத்தை பிடிக்க மிக அதிகமான சோதனைகள் தாண்டி வந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 03:45 PM
அறம் படம் குறித்து ரகசிய தகவல்களை கசிய விட்ட ஒளிப்பதிவாளர்

எந்த ஒரு தரமான கதையையும் மேலும் மெருகேத்தி அதன் தீவிரத்தை கூட்டுவதற்கு அக்கதையை படமாக்கும் விதமும் , உபயோகப்படுத்தப்படும் ஒளிப்பதிவு நுட்பங்களும் முக்கியமான பங்கு வகிக்கும். மேலும் படிக்க...

22nd, Nov 2017, 03:44 PM
அஜித்தையும் மிரட்டிய அன்பு செழியன் - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இயக்குனர்

 Photo​தல அஜித் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருகிறார், இவர் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தவர் தல அஜித். இவரை பிரபல பைனான்சியரான அன்பு செழியன்மேலும் படிக்க...

22nd, Nov 2017, 03:42 PM
பிரியா பவானி ஷங்கருக்கு இப்படியொரு நிலையா?

சின்னத்திரையில் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் மூலம் ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார், இதனையடுத்து இவர் இந்த சீரியலில் இருந்து விலகி கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 03:41 PM
மேலும் செய்திகள்…