கணவனுக்காக மனைவி வடிவமைத்த நினைவிடத்தைப் பற்றி தெரியுமா ?

ஆசிரியர் - Editor II

மனைவிக்காக கணவன் கட்டிய தாஜ்மகாலை மட்டுமே புகழ்ந்து வரும் நம்மில் பலருக்கும், தன் கணவனுக்காக பெண் ஒருத்தி வடிவமைத்த நினைவிடத்தைப் பற்றி தெரியவில்லை. அது குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்த நினைவிடம் ‘ராணி கி வாவ்’ படிக்கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் கலைப் பொக்கிஷமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் இந்த இடம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. கலைப் பார்வையில் பிரமிப்பாகவும், ஆன்மிகப் பார்வையில் பக்தி மனம் கமழும் வகையிலும் இந்த அதிசய கிணறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

காதலியின் நினைவுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை போல, சோலங்கி வம்சத்து அரசனான பீமதேவரின் நினைவாக அவருடைய மனைவி உதயமதி 1050–ல் இந்தப் படிக்கிணறை கட்டினார். கணவனின் நினைவுக்காக மனைவி கட்டிய இந்த கிணற்றில் பல சுவாரசியமான கதைகள் புதைந்திருக்கின்றன. அதை அறிந்து கொள்வோம்..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வட இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் படிக்கிணறுகளை கட்டினர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் அதிகளவிலான படிக்கிணறுகள் கட்டப்பட்டன. பருவமழைக் காலங்களில் பெறப்படும் மழைநீரை சேகரிக்கவும், வாணிபத்துக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தங்குவதற்காகவும் இதுபோன்ற கிணறும் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

அப்படி கிணறுகள் அதிகமாக உருவாக்கப்பட்ட காலக்கட்டத்தில் தான் உதய மதி, கணவரின் நினைவாக இந்தக் கோவில் கிணற்றையும் உருவாக்கி உள்ளார். இது கிணறு வடிவில் அமைந்திருக்கும் நினைவு கோவில். கணவனுக்காக உதயமதி தொடங்கிய இந்த கிணறு ஆலயத்தின் பணி, அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் கரன்தேவ் காலத்தில்தான் முடிவடைந்தது.

8 அடி ஆழத்தில் படி இறங்கிச்செல்லும் வகையில் இந்தக் கட்டுமானம் ஆரம்பிக்கிறது. இந்த நினைவுக் கோவிலை தரைமட்டத்தில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் வகையில் அமைத்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது ஆழம் என்பது நம் மனதிற்குள் இறங்கும் உணர்வை அளிக்கிறது. அதனால் கணவனின் நினைவுகளை ஆழ்மனதிற்கு இறங்கிப் பார்க்கும் வகையில், இந்த இடத்தை அவரது மனைவி வடிவமைத்திருக்கிறார். இதன் படிகள் பல நிலைகளாக இறங்கிச் செல்கின்றன. ஒவ்வொரு நிலையும் பெரும் அரண்மனை போலத் தூண்களும், மாடிகளும் உப்பரிகைகளுமாகக் கட்டப்பட்டுள்ளன.

திரும்பும் திசைகளில் எல்லாம், பார்க்கும் சுவர்களில், தூண்களில் எல்லாம் இறைவனின் சிற்பங்களே காட்சியளிக்கின்றன. பெரும்பாலும் விஷ்ணுவின் வடிவங்களே ஆலயத்தை நிறைத்தபடி இருக்கின்றன. அத்துடன் கிருஷ்ண லீலை காட்சிகளும் அதிகமாக செதுக்கப்பட்டுள்ளது. கணவனின் நினைவாக கட்டிய இடத்தில் ராமனின் சிலைகளும் உள்ளன. பெரும்பாலும் வைணவச் சிற்பங்கள் நிறைந்திருந்தாலும் மகிஷாசுரமர்த்தனி, துர்க்கை போன்ற தெய்வங்களின் சிலைகளும் காணப்படுகின்றன. குறிப்பாக இங்குள்ள மகிஷாசுரமர்த்தனி சிலையை சிற்பங்களில் ஒரு பெரும் படைப்பு என்றே சொல்லவேண்டும். ‘மகிஷம்’ நாக்குத் தள்ளிய நிலையில் தரையில் சரிந் திருக்க, தாய்மை நிறைந்த முகத்துடன் அதை வதம் செய்கிறாள் தேவி.

இத்தகைய சிறப்புகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் இந்த கிணறை அவ்வளவு சுலபத்தில் தேடிப்பிடித்து விட முடியாது. நெருங்கிச்செல்லும் வரை இந்தக் கட்டுமானத்தின் அளவும், அழகும் நம் கண்ணுக்குப்படாது. ஏனெனில் சோலங்கி அரசை கைப்பற்றிய அலாவுதீன் கில்ஜி என்பவர், குஜராத்தில் இருந்த எல்லாக் கோட்டைகளையும், கோவில்களையும் இடித்து அழித்தார். அதில் ராணி கி வாவ் கிணறு கோவிலும் ஒன்று. இதை இடிக்க பெரிதாக மெனக்கெடவில்லை. அருகில் இருந்த கட்டிடங்களையும், மதில் சுவர்களையும் இடித்து கிணறை மூடிவிட்டார். 1958 வரை மண் மூடிக்கிடந்த இந்த பொக்கிஷக் கிணறை, 1972–ல் அகழ்வாராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வந்தனர். 1984–ல் இருந்து அது பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.

இதில் சேதமாகி தப்பிய கலை பொக்கிஷங்களும், இந்து மத சிலைகளும் தான் இன்று சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இந்த கிணற்றில் இருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு சுரங்கவழியும் உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு, படான் பகுதிக்கு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை அந்த சுரங்கவழி பாதை நீள்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா? அல்லது யுத்த காலத்தில் தப்பிச்செல்லும் வழியா? என்று அறியப்படவில்லை. இப்படி பல சந்தேகங்களை கிளப்பியிருக்கும் இதுவே இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழிப்பாதையாக குறிப்பிடப்படுகிறது. படிகளாக இறங்கிச்செல்லும் இந்த நிலத்தடி மாளிகை ஒரு ஆழமான கிணற்றில் சென்று முடிகிறது. பாதிக்குமேல் செல்ல இன்று அனுமதி இல்லை. அதனால் கண்ணில் படும் காட்சி வரை பார்த்துவிட்டு மேலே வரவேண்டியது தான். இந்த நினைவு கிணற்றின் அடியில் இருக்கும் தண்ணீரை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் தெரியும் வகையில் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.

முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்

 Photoநேற்றைய தினம் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மேலும் படிக்க...

23rd, Feb 2018, 11:16 AM
தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

​தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:36 AM
ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

கல்குடா - கும்புறுமூலைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:25 AM
ரயிலில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழப்பு

கந்தளாய் பிரதேசத்தில் மாத்திரம் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:13 AM
வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம்

 Photoமாதுரு ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:06 AM
முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்

 Photoநேற்றைய தினம் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மேலும் படிக்க...

23rd, Feb 2018, 11:16 AM
வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம்

 Photoமாதுரு ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 09:06 AM
நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது

​பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 08:49 AM
வரலாற்றில் இன்று : 23.02.2018

 Photo​பெப்ரவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 08:41 AM
மேலும் செய்திகள்…
பிலிப்பைன்சில் ஏற்பட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் பிப்.17, 2006

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்பேர்னார்ட் நகரில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாண்டனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:11 PM
வீடு - மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்

​வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து வெவ்வேறு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:00 PM
இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது

 Photo​களனிவெளி புகையிரத பாதையில் இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 01:30 PM
மேலும் செய்திகள்…
இந்தியாவில் இனி 13 இலக்க செல்போன் எண்கள்: மத்திய அரசு முடிவு

10 இலக்க செல்போன் எண்களுக்கு மாற்றாக 13 இலக்க செல்போன் எண்களை வழங்க தயாராகுமாறு இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத்தொடர்புமேலும் படிக்க...

22nd, Feb 2018, 02:55 PM
விண்வெளி வீரர்களுக்கான புதுவித உடையை உருவாக்கும் நாசா

 Photoசர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பூமிக்கு வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் உபகோள்களில் தரையிறங்கும்போது விண்வெளி வீரர்கள் விசேட உடை அணிவது வழக்கமாகும்மேலும் படிக்க...

22nd, Feb 2018, 02:52 PM
அதிகூடிய சேமிப்பு வசதிகொண்ட SSD கார்ட்டினை அறிமுகம் செய்யும் சாம்சுங்

 Photoஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சுங் நிறுவனம் கணினி உதிரிப்பாகங்களையும் வடிவமைத்து வருகின்றது.மேலும் படிக்க...

21st, Feb 2018, 01:24 PM
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

 Photoஅடுத்த தலைமுறைக்குரிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 12:00 PM
மேலும் செய்திகள்…
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது சூர்யா-36 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:26 AM
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர்

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து நேற்று முதல் முழு நேர அரசியலில் குதித்துள்ளார், அதே சமயம் தன் கை வசமுள்ள விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார். மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:21 AM
கண்ணையே மாற்றி கொண்ட DD - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளியாக இருந்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:13 AM
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள்

 Photoஉலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதற்கு கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் முக்கிய காரணமாக இருந்தது.மேலும் படிக்க...

23rd, Feb 2018, 10:08 AM
மேலும் செய்திகள்…