மஹிந்த அணியோடு சுதந்திரக்கட்சி சங்கமிக்காது !

ஆசிரியர் - Jaffna

தேசிய அரசிலிருந்து வெளியேறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியில் இணையமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்காக சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா உட்பட 18 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜோன் செனவிரதன, அரசில் இருக்கும் வரை சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த முடியாது. எனவே தான் அதிலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்வதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது.

தேசிய அரசின் ஒப்பந்தம் டிசம்பரில் முடிவதால் அதுவரை பொறுமை காக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இது பற்றி பரிசீலனை செய்துவருகின்றோம் என கூறினார்.

எனினும், டிசம்பர் மாதம் வரை பொறுத்திருக்க முடியாது. பிரதமர் பதவியை ஜனாதிபதி சு.க. உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இல்லையேல் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரிடம் வினவியபோது,

ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தியபோது, இரண்டு பேர் மாத்திரமே அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

அதுவும் சுயாதீனமாக இயங்கப் போவதாகவே அவர்கள் குறிப்பிட்டனர். மாறாக, சுதந்திர கட்சியில் இருந்து செல்பவர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியுடன் இணைய மாட்டார்கள்.

எது எப்படியிருந்த போதிலும் தேசிய அரசுடனான உறவு தொடர்பில் எந்தவொரு நபரும் தனிமுடிவை எடுக்க முடியாது. இந்த விடயத்தில் கூட்டு பொறுப்பு இருக்கின்றது.

மத்திய குழுவின் ஊடாகத்தான் தீர்மானமெடுக்க வேண்டும். இதற்காக மத்தியகுழுக் கூட்டம் கூடவுள்ளது என கூறியுனார்.

மேலும், ஒருதொகுதி சு.க. உறுப்பினர்கள் தேசிய அரசை விட்டு விலகினாலும் ஏனைய சு.க. உறுப்பினர்கள் தேசிய அரசில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பார்கள் என அறிய முடிகின்றது.

கடலில் குளிக்கச் சென்றவர்களில் இருவரைக் காணவில்லை

முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற இளைஞர்களில் இருவரை காணவில்லை என தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 03:21 PM
தாஜுதீன் கொலை விவகாரம்; ஆனந்த சமரசேகரவுக்கு பிணை

​இன்று நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 03:02 PM
தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் கைது

ஐந்து கிலோவுக்கும் அதிக நிறையுடைய தங்க ஆபரணங்களை கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:12 PM
46 மில்லியன் செலவில் கட்டுநாயக்கவிற்கு எரிபொருள் குழாய் : அர்ஜீன ரணதுங்க

​46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்காவிற்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:10 PM
புலிகள் மோசமான குற்றவாளிகள் : பொன்சேகா

இறுதி யுத்தத்தின் போது ஆயுதங்களுடன் சரணடைந்த 12,000 விடுதலைப்புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துமேலும் படிக்க...

19th, Oct 2017, 01:06 PM
பாகுபலியையும் ஓரம் கட்ட தொடங்கிய மெர்சல்

 Photoஉலகமெங்கும் நேற்று தீபாவளி முதல் மெர்சல் புயல் ஓயாமல் அடித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது, தளபதி ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறது.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:16 PM
ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காட்டினால் பேய்கள் சக்தி பெறும் : செ. கஜேந்திரன்

 Photo​ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காட்டினால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை பிடிப்பார். பேய்கள் சக்தி பெறும் என கூறும் கதைகள் தமிழ் மக்களை மடையர்களாக்க கூறும் பேய் கதைகள்.மேலும் படிக்க...

19th, Oct 2017, 12:30 PM
மேலும் செய்திகள்…
உலக தமிழர்களுக்கு Tamilan24 இன் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 Photo​இன்று இருள் நீக்கி, ஒளி தரும் தீபத் திருநாளை உலக வாழ் இந்துக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 10:43 AM
கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!

 Photoகடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:11 PM
அப்துல் கலாம் பிறந்த தினம் (அக். 15- 1931)

 Photo​அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:09 PM
சீரடி சாய்பாபா மறைந்த தினம் (அக். 15- 1918)

 Photo​சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். மேலும் படிக்க...

15th, Oct 2017, 12:02 PM
மேலும் செய்திகள்…
பாவனைக்கு அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்

 Videoதுபாய் நாட்டில் அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டு பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:20 PM
வாட்ஸ் அப்பிலும் Live Location

 Photoவாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது, வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதுப்புது தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:18 PM
தொலைபேசியை தாக்கும் வைரஸ் தொடர்பில் தகவல்

கையடக்கத் தொலைபேசிகளை தாக்கக்கூடிய புதிய வைரஸ் (ரென்ஸம் வேயார்) ஒன்று தற்போது வேகமாக பரவி வருவதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

19th, Oct 2017, 01:17 PM
ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

கிட்டார் இசை பிரியர்களுக்காகவே வந்துள்ளது Fret Zealot. மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகளை வைத்து கிட்டார் வாசிப்பதை கற்றுக் கொள்ளலாம்.மேலும் படிக்க...

18th, Oct 2017, 01:25 PM
மேலும் செய்திகள்…
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியாகியது, படம் தரப்பிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன.மேலும் படிக்க...

19th, Oct 2017, 02:19 PM
மேலும் செய்திகள்…