”கட்டாக்காலி மாடுகளுக்காக பண்ணையமைக்கும் புங்குடுதீவு உலகமையத்தின் நோக்கம் என்ன??

ஆசிரியர் - Editor II

புங்கையூரில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை பூண்டோடு புங்கையூரிலிருந்து காணாமல் போகடிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் “புங்குடுதீவு உலக மையம்” என்ற அமைப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

புங்குடுதீவில் சுதந்திரமாக திரியும் ஓரே ஜீவன்கள் இந்தக்கட்டாகாலி மாடுகள்தான்.

மனித நடமாட்டமே குறைந்திருந்த புங்குடுதீவில் யாருடைய தொல்லையுமில்லாமல், யாருக்கும் தொல்லை கொடுக்காமல் பெருகி பெருத்து, சுதந்திரமாக சுற்றித் திரியும் இந்த ஜீவராசிகளை பார்க்க ஆயிரம் கண்வேண்டும்.

புங்குடுதீவு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபொழுது, கட்டாக்காலி மாடுகளில் அவர்கள் கைவைக்கவில்லை.

அதுதவிர புங்குடுதீவிலிருந்து எந்தவொரு பொருட்களையும் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இராணுவ சாவடிகளை கடந்து மக்கள் செல்லவேண்டியிருந்ததால் ஊள்ளுர் மக்களும் சரி, வெளியிலிருந்து வந்துசென்ற மக்களும் சரி ஊரிலிருந்து விறகைகூட களவாடிக்கொண்டு செல்லமுடியாத நிலையிருந்தது.

நல்லாட்சி அரசாங்கம் வந்து, கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தவுடன், எவரினுடைய கட்டுப்பாடும் ஊரில் இல்லாததால், புங்குடுதீவில் கவனிப்பாரற்று கிடந்த மனைகளில் இருந்த சகலபொருட்களும், ஆளாளுக்கு ஏற்றமாதரி படிப்படியாக சூறையாடப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டன.

எல்லா முடிந்து கட்டாகாலி மாடுகளிலும் கண் வைத்துவிட்டார்கள்.

கட்டாக்காலி மாடுகளை கடத்தி, இறைச்சிக்காக வெட்டி முஸ்லிம்
வியாபாரிகளுக்கு நல்வ விலையில் விற்று பெரும் தொகையான வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரு குறுக்கு வழியினை ஊரில் உள்ள ஒரு சிலர் தொழிலாக செய்ய தொடங்கிவிட்டார்கள்.

இது சம்பந்தமாக ஊர்மக்களும், மதகுரு ஒருவரும் எடுத்த முயற்சியால் இப்பிரச்சனை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டதன் விளைவு…

ஒரு சிலர் செய்யும் இத்தொழிலை தடுக்கபோகிறோம் என்றபோர்வையில்… ‘’புங்குடுதீவ உலக மையம்’’ என்ற அமைப்பானது, அரசியல்வாதிகள், பிரதேச செயலார்கள், காவல்துறையினர்களின் அனுசரணையுடன் ‘மாட்டுப்பண்ணை்’ அமைத்து புங்குடுதீவில் உள்ள அனைத்து மாடுகளையும் பிடித்து அதற்குள் அடைத்து, தாங்கள் நினைத்தமாதிரி விற்று பணமாக்கி தங்களுக்குள் பங்கிட்டு கொள்ளும் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார்கள்.

‘’புங்குடுதீவ உலக மையம்’’ என்ற அமைப்பின் குறிக்கோள் இதுதான்.

1. பண்ணை அமைப்பதாக காட்டி புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களிடம் பணத்தை கறத்தல்

2.பண்ணைகளில் பிடித்துக் கட்டப்படும் மாடுகளை பகுதிபகுதியாக விற்று பணத்தை தங்களிடையே (அரசியல்வாதிகள், பிரதேச செயலார்கள், காவல்துறையினர்கள், உலக மையத்தினர்கள்) பங்கிட்டு எடுத்துக்கொள்ளுதல்.

புங்குடுதீவு உலக மையத்தால் பணம் கறக்கும் நடவடிக்கைக்காக பேஸ்புக்கில் விட்டப்பட்ட கோரிக்கை கீழே….

1. பொன்னாந்தோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட காணியில், தற்போது இரு பக்க வேலிகளே அடைக்கப்பட்டுள்ளன. மறு இருபக்கங்களிற்கு முள்கம்பிகளையும், சீமெந்து தூண்களையும், தென்னைமட்டை/பனைமட்டை பயன்படுத்தி வேலி அமைத்தல். அதற்கான செலவாக 100000 இலங்கை ரூபாய் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

வளாகத்தை சுற்றி 8 கமராக்கள் (CCTV ) பூட்டப்படும். அதற்கான செலவாக ரூபாய் 70000 ஆயிரம்.
அந்த வளாகத்தில் வீடும், மின்சாரவசதியும் உள்ளதால்; அங்கு தங்கியிருப்பதற்கு உலக மைய அங்கத்தவர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதால். அங்கு கழிவறை ஒன்று அமைக்க ஏற்படும் செலவு.

மாடுகள், கோழிகள் என வளர்க்க இருப்பதால் தண்ணீர் தொட்டி அமைப்பது அவசியம். அதை அமைப்பதற்கான செலவு.

ரக்ரர் & தண்ணீர் பவுசர் கொள்வனவு செய்வது. இது இரண்டிற்கும் ரூபாய் 12 இலட்சம் செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இது பெருந்தொகை என்பதால் இரண்டு இலட்சம் முன்தொகையாக செலுத்தி மிகுதியை தவணை முறையில் மாதாந்தம் கட்டுவது. ( இது பற்றி அனுபவமுள்ளவர்கள் உலக மையத்தினரை தொடர்பு கொள்ளவும்)

எமது தேவைகள் இல்லாதபோது , தனியாருக்காக இந்த ரக்ரர் & தண்ணி பவுசர்கள் பாவிக்கப்பட்டு, அதிலிருந்து வரும் வருமானத்தில் மாதாந்த தவணை முறை கட்டணத்திற்கு பணம் செலவிடப்பட்டு, மிகுதி வாகன செலவினத்திற்காக ஒதுக்கப்படும்.

5.மாடுகளுக்கு தேவையான உணவுகளை நாங்களே உருவாக்கவுள்ளோம். இதற்கு புதிய ஒளி எமற்கு உதவியாக விளங்கும். எவ்வாறெனில்; மழைகாலத்தால் மண்ணில் ஏற்படும் ஈரப்பதனை கொண்டு, சீமைக் கிலுவை, முருக்குமரம், இப்பிலிப்பை என மழைவெள்ளம் தேங்காத பிரதேசத்தில் நடவுள்ளோம். அதைவிட குறிப்பிட்ட எமது பிரதேசத்தில் ஓங்கி வளரக்கூடிய புற்கள் நாட்டப்படும். ( ஏற்கனவே இந்த முறையை கையாண்டு வெற்றி கண்டுள்ளார் எம்மூர் பெண்மணி ஒருவர்)

6.இரவு , பகலிற்கான காவலாளிகள்.

மாதம் ஒருமுறை மிருக வைத்தியரை அழைத்து ஆலோசனை பெறுதல் .

உங்கள் ஆலோசனைகளும், உதவிகளும் இங்கே எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை, மக்கள் விருப்புடனும் தமது மாடுகளை எமது பண்ணையில் கொண்டுவந்து விடலாம்.உரியமுறையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு பொறுப்பேற்கப்படும். மாடுகளை உரிமையாளர் கிழமைநாட்களில் பார்வையிடலாம்.

நோக்கம் ஒன்றுதான் –
அது
எம்மண்ணினதும், எம்மக்களினதும் வளர்ச்சிதான்.

குறிப்பு: உலக மைய கால்நடைகள் காப்பகத்திற்கு பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை சேர்ந்த திKaliyugan Nallathambyamby அவர்கள் ரூபாய் ஒரு இலட்சத்தை உலக மைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்ற நற்செய்தியையும் மக்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். அவருக்கு புங்குடுதீவு மக்கள் சார்பாக எமது நன்றிகள்.

கடைசியில் புங்குடுதீவில் உள்ள ஒட்டுமொத்த மாடுகளையும் இல்லாமல் செய்வதற்கான செயலே உலகமையத்தால் செயல்படுத்தப்படும் இந்த பண்ணை அமைக்கும் செயலாகும்.

நமது கேள்வி………………….

1. ஊரில் எவ்வளவோ வேலைகள் செய்யவேண்டிய இருக்கும்போது ‘உலகமையம்’ கட்டாக்காலி மாடுகள்மேல் கண்வைத்ததன் நோக்கம் என்ன??

♦ ஏன்எனில் மாட்டை நல்லவிலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் என்பதுதான்.

2. புங்குடுதீவில் கட்டாக்காலியாக திரியும் மாடுகள் இந்தனை ஆண்டுகளாக யாருக்காவது தொந்தரவாக இருந்தனவா?? கட்டாக்காலி மாடுகள் மனிதர்களுக்கோ அல்லது வேறு ஜீவராசிகளுக்கோ எதாவது துன்பம் விளைவிக்குதா??

3. இத்தனை ஆண்டுகளாக மாடுகளுக்கு நீங்களா தண்ணிவைத்து, தீனிபோட்டு வளர்த்தீர்கள்??

4. அவைகள் தாங்களாக இனம்பெருக்கி, தாங்களாக இரைதேடி, தாங்களாக வளர்ந்த ஜீவராசிகளை, நீங்கள் ஏன் பிடித்து கட்டிவைத்து, அடைத்து, துன்புறுத்தி தண்ணிவைத்து, தீனிபோட்டு வளர்க்கவேண்டும்.? என்ன தேவை??

4. சுதந்திரமாக உலாவித்திரியும் எம் ஊர் மாடுகளை சொந்தமாக்க உலகமையத்துக்கு என்ன உரிமையிருக்கிறது??

தடியொடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்களாகிவிட்டார்கள்.

ஊருக்கு ஆயிரம் அமைப்புகள் தொடங்கி உலகமெல்லாம் பரந்து வாழும் புங்கையூர் மக்களிடம் பணம் கறக்கும் வேலைகள் தான் இவைகள்,….

ஊர் மக்களின் வேண்டுகோள் இதுதான்…

1. புங்குடுதீவில் சுதந்திரமாக சுற்றித்திரியும் மாடுகளில் யாரும் கைவைக்ககூடாது. (அவைகள் புங்குடுதீவின் பொதுச்சொத்துகள்)

2. மாடுகளுக்கு ஆங்காங்கே தண்ணீர் தொட்டியமைத்து, முடிந்தவரை தண்ணீர் வழங்கவேண்டும்.

3. மாடுகளை களவாக கடத்தி, இறைச்சியடிப்பவர்களை கண்காணிக்க இளைஞர் குழுவொன்றை அமைத்திடல் வேண்டும். குறிப்பாக இரவில் கண்காணிக்கவேண்டும்

4. காயம்பட்ட, நோய்வாய்பட்ட மாடுகளை கவனித்து சிகிச்சை அழிக்கவேண்டும்

முக்கிய குறிப்பு: புலம்பெயர் தமிழர்கள் எல்லாவற்றுக்கும் தேவையில்லாமல் பணத்தை வாரிவழங்கவேண்டாம். உங்களை உசுப்பேற்ற அவர் 20ஆயிரம் வழங்கினார், இவர் 30ஆயிரம் வழங்கினார் மற்றவர் ஒரு இலட்சம் வழங்கினார் என போலிக் கதைகள் எழுதுவார்கள். அவற்றை நம்பியும், பகட்டுக்காகவும் பணம் கொடுக்காதீாகள்.

வவுனியாவில் வீதியில் மது அருந்திய இளைஞர்கள் கைது

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய நால்வரை நேற்று நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:42 PM
காணிப் பிரச்சினையில் ஏற்பட்ட கைகலப்பு: ஒருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் காணிச்சண்டை காரணமாக நபர் ஒருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியவரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:34 PM
வவுனியா ஏ9 வீதியில் 1100 மரக்கன்றுகள்

தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனப்பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஏ9 வீதியில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:27 PM
ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

​2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:19 PM
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர்வெட்டு; விபரம் இதோ

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:18 PM
ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

​2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற மேலும் படிக்க...

24th, Nov 2017, 03:19 PM
10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் தீமூட்டி எரிப்பு

 Photo​யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் நேற்று (23) தீமூட்டி அழிக்கப்பட்டது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 12:19 PM
வரலாற்றில் இன்று : 24.11.2017

 Photo​நவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன.மேலும் படிக்க...

24th, Nov 2017, 10:38 AM
ரணில் - மோடி சந்திப்பு

 Photo​இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.மேலும் படிக்க...

23rd, Nov 2017, 03:25 PM
மேலும் செய்திகள்…
யாழ்ப்பாணத்தில் சுனாமியா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 Photoயாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 02:07 PM
இன்று பிற்பகல் மழை பெய்யலாம்!

 Photo​இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர், மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க...

19th, Nov 2017, 01:41 PM
மேலும் செய்திகள்…
வீண்விரயமாகும் நீரின் அளவை குறைக்க புதிய சாதனம் உருவாக்கம்

 Photoஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் வருகையின் பின்னர் மனித வாழ்வில் அனேகமான விடயங்கள் மிகவும் இலகுபடுத்தப்பட்டுவருகின்றனமேலும் படிக்க...

23rd, Nov 2017, 04:12 PM
கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்கக்கூடிய டயர்கள்: நாசாவின் அதிரடி

 Photoவிண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படும் விண்கலங்கள் வேற்றுக் கிரகங்களின் கரடு முரடான மேற்பரப்பில் பயணிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.மேலும் படிக்க...

23rd, Nov 2017, 04:10 PM
ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை அடுத்து மைக்ரோசொப்ட்டின் அதிரடி நடவடிக்கை

 Photoமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் அப்பிளிக்கேஷனை சீனாவின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:04 PM
புதிய நிறத்தில் விற்பனையாகும் சியோமி Mi A1 - Lankasri News

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான Mi A1-ன் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க...

22nd, Nov 2017, 02:02 PM
மேலும் செய்திகள்…
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் ராய் லட்சுமி. இவர் தற்போது ஜூலி-2 படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:40 PM
இன்று மாலை சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:39 PM
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன்

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:38 PM
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே அனைவரும் அறியும் வகையில் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு ரைசா, மேலும் படிக்க...

24th, Nov 2017, 02:37 PM
மேலும் செய்திகள்…