பண்டிகை – திரைவிமர்சனம்

ஆசிரியர் - Editor II

சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கிருஷ்ணாவை, அவரது உறவினர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். தொடக்கத்தில் அங்கு அடிதடியில் ஈடுபடும் கிருஷ்ணா, பெரியவனாக ஆன பின்னர் அடிதடிகளை விட்டுவிட்டு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணாவின் நண்பரான பிளாக் பாண்டியும் அதே ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கயல் ஆனந்தியை பார்க்கும் கிருஷ்ணாவுக்கு அவள் மீது காதல் வருகிறது. அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணா ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

இதுஒருபுறம் இருக்க வீடியோ கேம்ஸ் கடை வைத்திருக்கும் சரவணன் சூதாட்டத்தில் அதீத ஈடுபாடுடன் இருக்கிறார். அந்த ஈடுபாட்டின் காரணமாக மதுசூதனன் நடத்தும் கிரிக்கெட் சூதாட்ட குழுவில் இணைந்து சூதாடி வருகிறார். மேலும் சூதாட்டத்தின் மூலம் தனது வீடு மற்றும் சொத்து அனைத்தையும் இழந்து விடுகிறார். இதனால் அவரது மனைவியும், அவரை விட்டுச் செல்கிறார். இதையடுத்து விட்டதை பிடிக்க சரவணன் தொடர்ந்து முயற்சி செய்து வரும் வேளையில், கிருஷ்ணாவை சந்திக்கிறார். அதுவும் கிருஷ்ணா ஒருவரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்யும் போது அவரை சந்திக்கிறார்.

இதையடுத்து கிருஷ்ணாவிடம் இங்கு செய்யும் சண்டையை தன்னுடன் வந்து ஒரு இடத்தில் சண்டை செய்தால் இருவருக்கும் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். முதலில் சரவணனின் அழைப்பை ஏற்காத கிருஷ்ணா, தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் தேவைப்படுவதால், அந்த சண்டையில் பங்கேற்க ஒத்துக் கொள்கிறார்.

சூதாட்டத்தில் ஈடுபடுவோர், அதில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக மதுசூதனன் தெரு சண்டை (STREET FIGHT) ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சண்டை போடுபவர்களை வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்த சண்டை நடத்தப்படுகிறது.

முதலில் பங்கேற்ற சிறிய சிறிய சண்டைகளில் கிருஷ்ணா வெற்றி பெற்றதை அடுத்து, பெரிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் கிருஷ்ணா தோல்வியடைவார் என்று பெட் கட்டுகின்றனர். ஆனால் அந்த போட்டியிலும் கிருஷ்ணா வெற்றி பெற்றதால், அருள்தாஸிடம் கடன் வாங்கும், சரவணன் தான் கட்டிய பணத்தை இழந்து விட, தனக்கு தரவேண்டிய பணம் வரவில்லையென்றால் சரவணணை கொன்றுவிடுவதாக அருள்தாஸ் மிரட்டுகிறார்.

இந்நிலையில், மதுசூதனனிடம் வேலை பார்க்கும் நிதின் சத்யா, சூதாட்டம் என்ற பெயரில், மதுசூதனன் அனைவரையும் ஏமாற்றி வருவதாகக் கூறுகிறார். சரவணனன் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழக்கவில்லை என்றும், ஏமாற்றப்பட்டார் என்பதையும் சொன்னவுடன், சரவணன் தான் இழந்த பணத்தை அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று நினைக்கிறார். இதையடுத்து நிதின் சத்யா பணம் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று கூற, அந்த பணத்தை எடுப்பதற்கு தான் திட்டம் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.

முதலில் இந்த திட்டத்திற்கு சரவணன் ஒப்புதல் தெரிவித்தாலும், கிருஷ்ணா மறுப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்களது நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு துணைபோகிறார். பின்பு திட்டமிட்டபடி மதுசூதனனிடம் இருந்து பணத்தை திருடினார்களா? மதுசூதனன் இவர்களை என்ன செய்தார்? மதுசூதனனடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? கிருஷ்ணா, ஆனந்தியின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கிருஷ்ணா, இப்படத்தின் மூலமும் அதனை நிரூபித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை வராத தெரு சண்டையை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கிருஷ்ணா அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு இளைஞனாக சண்டையில் தனது கோபத்தை காட்டுவதிலும், கயல் ஆனந்தியிடம் தனது காதலை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கயல் ஆனந்தி மற்ற படங்களைப் போல இந்த படத்திலும் தனது நடிப்பின் மூலம் வரவேற்பை பெற்றிருக்கிறார். திரையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சரவணன் படம் முழுக்க வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கே அச்சாணியாக விளங்குகிறது. சூதாட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் போதும், அதில் தனது சொத்துக்களை இழந்து பின்னர், அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் சரவணின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறார். ஒரு சூதாட்டக்காரராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது.

வஞ்சகம், வேஷம் என சூதாட்டத் தளபதியாக மதுசூதனின் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் குறித்து பேசவைக்கும் அருள்தாஸ், இந்த படத்திலும் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். காமெடியில் பிளாக் பாண்டி படம் முழுக்க வந்தாலும், அவரது காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. குறைவான காட்சியில் வந்தாலும், கருணாஸ் அனைவரையும் எதிர்பாராத சிரிப்புக்கு ஆளாக்குகிறார். நிதின் சத்யா, அர்ஜய், சண்முகராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஸ்ட்ரீட் சண்டையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஃபெரோஸ். குறிப்பாக இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும்படியாக படத்தை இயக்கி இருப்பது படத்திற்கு பலம். சூதாட்டம், சண்டை, காதல் என அனைத்தையும் ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அதற்கேற்றாற் போல், திரைக்கதையை அமைத்திருப்பது படத்தை ரசித்து பார்க்கும் படி இருக்கிறது.

ஆர்.எச்.விக்ரமின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. அர்வியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சியில் விளையாடியிருக்கிறார்.

மொத்தத்தில் `பண்டிகை’ கொண்டாட்டம்.

பிரதான வீதியில் நெல் உலரவைக்கும் விவசாயிகள்

புளியங்குளம்,நெடுங்கேணி, முல்லைத்தீவு போன்ற பிரதான வீதிகளில் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை உலரவிடுவதன் காரணத்தினால் மேலும் படிக்க...

20th, Feb 2018, 04:10 PM
தமிழின் தேவையை எடுத்துரைத்த சுமந்திரன்! சபையை ஒத்திவைத்தார் கரு

ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கை சிங்களத்தில் மட்டுமே உள்ள காரணத்தினால் சபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 04:03 PM
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுவிட்டு வாருங்கள்: ஸ்ரீ.சு.கவுக்கு அழைப்பு

 Videoதற்போது நாட்டில் நிதி நெருக்கடி நிலை உருவாகியுள்ளதால் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்வதில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...

20th, Feb 2018, 03:45 PM
பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இடைநிறுத்தம்

​பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 03:03 PM
பொது இடத்தில் கஞ்சா புகைத்த மூவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொது இடமொன்றில் கஞ்சா புகைத்த சந்தேகநபர்கள் மூவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...

20th, Feb 2018, 02:30 PM
பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இடைநிறுத்தம்

​பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 03:03 PM
வடக்கில் கடும் அரசியல் நெருக்கடி! தீவிரமடையும் கட்சி தாவல்கள்?

 Photoநடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தென்னிலங்கையில் மட்டுமல்லாது, வடக்கிலும் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 12:59 PM
கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை : சீ. யோகேஸ்வரன்

​தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் இதற்குச் சாதகமான பதிலை மேலும் படிக்க...

20th, Feb 2018, 09:08 AM
இப்போது இருக்கின்ற இந்த தேசிய அரசு ஒரு உறுதிப்பாடான நிலைக்கு வந்தால் தான் இந்த நாட்டிற்கு விடிவு : கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்

 Photo​இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான துவேசத்தை வீசித்தான் தெற்கு பிரதேசங்களில் இவ்வாறான முடிவுகள் மேலும் படிக்க...

20th, Feb 2018, 08:59 AM
வரலாற்றில் இன்று : 20.02.2018

​பெப்ரவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளனமேலும் படிக்க...

20th, Feb 2018, 08:49 AM
மேலும் செய்திகள்…
பிலிப்பைன்சில் ஏற்பட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் பிப்.17, 2006

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்பேர்னார்ட் நகரில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாண்டனர். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:11 PM
வீடு - மனையின் பத்திரங்களை பதிவு செய்ய அவசியமான சான்றுகள்

​வீடு அல்லது மனைகளை குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு விற்பனை செய்யப்படும்போது அதற்கான உரிமை மாற்றம் குறித்து வெவ்வேறு சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியதாக இருக்கும். மேலும் படிக்க...

17th, Feb 2018, 03:00 PM
இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது

 Photo​களனிவெளி புகையிரத பாதையில் இன்றும், நாளையும் எந்தவிதமான புகையிரத சேவையும் இடம்பெறாது என்று புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

17th, Feb 2018, 01:30 PM
மேலும் செய்திகள்…
LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

 Photoஅடுத்த தலைமுறைக்குரிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை LG நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.மேலும் படிக்க...

20th, Feb 2018, 12:00 PM
முக்கிய வசதி ஒன்றினை அதிரடியாக நீக்கியது கூகுள்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் தகவல்கள் உட்பட வீடியோ, படங்கள் என்பவற்றினை தேடும் வசதியினையும் தருகின்றமை தெரிந்ததே.மேலும் படிக்க...

20th, Feb 2018, 11:57 AM
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்த ரோபோவிற்கு ஓய்வு

 Photoவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்கு ரோபோ ஒன்றினை நாசா நிறுவனம் அனுப்பிவைத்திருந்தது.மேலும் படிக்க...

19th, Feb 2018, 12:44 PM
வாட்ஸ் ஆப் பணப்பரிமாற்றம் தொடர்பில் புதிய பீட்டா சோதனை

 Photoபிரபல்யமான மெசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் ஆனது கடந்த வாரம் இந்தியாவில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.மேலும் படிக்க...

19th, Feb 2018, 12:42 PM
மேலும் செய்திகள்…
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி?

தமிழ் சினிமாவில் நித்யா மேனன் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெப்பம் முதல் மெர்சல் படம் வரை இவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படிக்க...

20th, Feb 2018, 03:38 PM
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருந்த கோலி சோடா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய் மில்டன்.மேலும் படிக்க...

20th, Feb 2018, 03:34 PM
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்

திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.மேலும் படிக்க...

20th, Feb 2018, 02:19 PM
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரால் கொண்டாடப்படும் நடிகர்கள் என்றால் அது அஜித் விஜய். இவர்களது படங்களை ரசிகர்கள் எப்போதுமே திருவிழா போல கொண்டாடுவார்கள் என்பது அனைவருமே அறிந்த ஒன்று.மேலும் படிக்க...

20th, Feb 2018, 10:03 AM
மேலும் செய்திகள்…