மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள ஜேர்மன் மாணவி

ஆசிரியர் - Editor II

ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து மீட்கப்பட்ட ஜேர்மன் மாணவி தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சி ஒன்றில் 16 வயதேயான Linda Wenzel ஈராக்கிய ராணுவ வீரர்களால் மறைவிடத்தில் இருந்து தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார்.

அவரது இடது தொடைப்பகுதியில் ஆழமான குண்டு காயம் ஏற்பட்டிருப்பதால் அதன் வலி தாங்க முடியாமல் அந்த இளம்பெண் கதறுகிறார்.

ஐ.எஸ் படைகளுடன் இணைந்த பின்னர் தனது பெயரை மரியம் என மாற்றிக்கொண்ட லிண்டா, ஈராக்கிய ராணுவத்தால் கடந்த யூலை மாதம் மீட்கப்பட்ட பின்னர், தற்போது அங்குள்ள சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மிக விரைவில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் எனவும் ஈராக்கிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் ஜேர்மன் அரசு முயற்சித்தால் லிண்டா Wenzel மரண தண்டனையில் இருந்து தப்பலாம் எனவும் தங்களது நாட்டுக்கு அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது ஈராக்கிய அரசு ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகமே என்ற போதிலும், ஜேர்மன் அரசின் முயற்சிக்கு கண்டிப்பாக பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இணையம் வழியாக ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட Linda Wenzel கடந்த ஆண்டு துருக்கி வழியாக ஈராக்கில் நுழைந்துள்ளார்.

பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய அவர் செச்சினியா நாட்டவரான ஐ.எஸ் பயங்கரவாதியை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அந்த நபர் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக மொசூல் நகரத்தில் வைத்து Linda Wenzel உடன் தொடர்பு கொண்ட ஜேர்மனி ஊடகத்திடம் தாம் நாடு திரும்ப ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரவக்காட்டில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் : அஸ்வர்

​புத்தளம் அரவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகள் கொட்டுவதனை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமானமேலும் படிக்க...

21st, Aug 2017, 09:40 AM
ஆண்டு தோறும் 200 க்கு மேற்பட்ட யானைகள் இலங்கையில் இறப்பதாக தகவல்

​இலங்கையில் யானை - மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள்மேலும் படிக்க...

21st, Aug 2017, 09:37 AM
இலங்கையில் முதலீடு செய்ய தயங்கும் அமெரிக்கர்கள்

​இலங்கையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் அரசாங்க நிர்வாக சீரின்மை காரணமாக அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருவதாக தகவல்கள் மேலும் படிக்க...

21st, Aug 2017, 09:30 AM
உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

​கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துமேலும் படிக்க...

21st, Aug 2017, 09:24 AM
​மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் : இரா.சம்பந்தன்

​மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து பல்வேறு விதமாகவும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் படிக்க...

21st, Aug 2017, 09:22 AM
ரெட்மி நோட் 5A செல்ஃபி பிளாஷ் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும்

 Photo​சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் இந்த இரண்டு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:54 PM
புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா: ஐந்து புதிய அம்சங்கள்

 Photo​ஹூன்டாய் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை வெர்னா மாடல் கார் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்பட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:41 PM
காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

 Photo​காரில் பயணம் செய்யும் முன் வாகனம் சீராக இயங்குவதை சரிபார்த்தாலும், சில சமயங்களில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் போகலாம். அவ்வாறான சமயங்களில் பாதுகாப்பாக தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:35 PM
புளூ வேல் போட்டியாக பின்க் வேல் சேலன்ஜ்

 Photo​இணைய வாசிகளை தற்கொலைக்கு தூண்டும் புளூ வேல் கேம் பலரது உயிரை பறித்த நிலையில், பின்க் வேல் சேலன்ஜ் எனும் புதிய கேம் வெளியிடப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டு டெவலப்பர் உருவாக்கியுள்ள பின்க் வேல் சார்ந்த முழு தகவல்களை பார்ப்போம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:34 PM
மேலும் செய்திகள்…
டெங்கு காய்ச்சலை விரட்ட இதுல 3 இலைகள் போதும்

 Photo​வீட்டில் இருந்தபடியே இயற்கையான வழியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க துளிரான கொய்யா இலைகள் இருந்தாலே போதும். மேலும் படிக்க...

20th, Aug 2017, 05:04 PM
உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’

 Photo​விரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ‘கலோரி’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:56 PM
பிரசவத்தின் போது மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை

​பிரசவத்தின்போது ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய ரத்தக்கசிவின் காரணமாகத்தான் அதிகமான பெண்கள் மேலும் படிக்க...

20th, Aug 2017, 01:44 PM
ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை

 Photoவாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது. மேலும் படிக்க...

20th, Aug 2017, 12:04 PM
மேலும் செய்திகள்…