பிரித்தானியாவில் காரில் கடத்தி கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி நபர்: குடும்பத்தினர் கண்ணீர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் பிரித்தானியாவில் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆறாவது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவில் Belgrave சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் Ramniklal Jogiya. 74 வயதான இவர் கடந்த வாரம் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்புகையில், மர்மநபர்கள் சிலர் அவரை காரில் கடத்தி கொண்டு சென்றனர்.
இதனால் அவரது குடும்பத்தார் இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் Ramniklal Jogiya கடந்த வாரம் Leicester பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை அறிந்த பொலிசார், கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட போது, சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து 6-வது நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 28-ஆம் திகதி ஆஜராகும் படி கூறியுள்ளார். அதுவரை இவர்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் Ramniklal Jogiya-வின் குடும்பத்தினர், அவர் ஒரு அன்பானவர், மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும், அண்ணனுக்கு அண்ணனாகவும், தாத்தாவுக்கு தாத்தாகவும், பொறுப்பான குடும்ப மனிதானகாவும் வாழ்ந்து வந்த அவரை சில நபர்கள் கொலை செய்துள்ளனர்.
அது குறித்து தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்வதாக கூறி கண்ணீர் வடித்துள்ளனர்.
மேலும் அங்கிருக்கும் சிசிடிவி கேமாரவை பார்த்த போது, அவர் கடையை பூட்டி விட்டு வெளியில் செல்வது மட்டுமே இருக்கிறது. அதன் பின் என்ன நடந்தது என்பது குறித்து தெரியாமல் உள்ளதால், அவரின் குடும்பத்தினர் இந்த கோரிக்கையை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.