15 வயது சிறுமியுடன் உறவு கொள்ள பிரித்தானியாவுக்கு சென்ற அமெரிக்க இளைஞர்
15 வயது சிறுமியுடன் உறவு வைத்து கொள்ள அமெரிக்கவிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்றதாக இளைஞர் ஒப்பு கொண்டுள்ள நிலையில் அவருக்கு விரைவில் தண்டனை வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் கலிப்போர்னியாவை சேர்ந்தவர் டெரிக் லொரின்சோ (29).
டெரிக்குக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு 23 வயது இருக்கும் போது இணையம் மூலம் பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியை சந்திக்க முடிவு செய்த டெரிக் கடந்த 2011 செப்டம்பர் மற்றும் 2012 ஜனவரி மாதங்களில் இரு முறை பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை சந்தித்து அவருடன் உறவு கொண்டதுடன், அதை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
மீண்டும் அமெரிக்காவுக்கு வந்த பின்னர் சிறுமியின் வெளிப்படையான புகைப்படங்களை அனுப்ப வற்புறுத்தியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி பிரித்தானியா பொலிசில் புகார் அளித்த நிலையில் அமெரிக்கா பொலிசாரிடம் அவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அமெரிக்க பொலிசார் டெரிக்கை கைது செய்தார்கள்.
அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தனது குற்றங்களை டெரிக் ஒப்பு கொண்டுள்ளார்.
பிரித்தானியா சட்டப்படி 16 வயதுக்கு குறைவான சிறுமியை ஆசைக்கு இணங்க கோருவது தவறு என தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
இதோடு இன்னொரு சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து டெரினுக்கான தண்டனை விபரத்தை நீதிமன்றம் மே 7-ஆம் திகதி வழங்கவுள்ளது.
7-லிருந்து 10 ஆண்டுகள் வரை டெரினுக்கு சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறையிலிருந்து டெரின் விடுதலையான பின்னர் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.