போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது
போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 22 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கேரள கஞ்சா, சட்டவிரோத சிகரட்டுக்கள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகள் என வைத்திருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று (17) மதியம் 2 மணிமுதல் இரவு எட்டு மணிவரை வாகனங்களை சோதனை செய்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (18) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.