அப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும்

ஆசிரியர் - Tamilan

-மயூரப்பிரியன்-

" ஒரு மென்பொருள் பொறியியலானாக வர வேண்டும் என்பதே எனது இலக்கு." , "எனது இலக்கு ஒரு வைத்தியர் ஆவது. " என்கின்றார்கள் அரசியல் கைதியாக இருந்து ஆயுதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில் காலத்தை கழிக்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்.

கண்டி நெடுஞ்சாலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகினால் செல்லும் குன்றும் குழியுமான மண் வீதி ஊடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்றால் மருதநகர் எனும் அழகிய ஊர் உள்ளது.

மருதமர நிழல்களும் வாய்க்கால் தண்ணீரும் அந்த ஊருக்கு அழகினை மட்டும் கொடுக்கவில்லை. பசுமையையும் குளிர்மையையும் கொடுக்கின்றது. ஊருக்கு செல்லும் வழியில் தனியே இயற்கை பசுமையை மாத்திரம் காணவில்லை.

பச்சை உடுப்புக்களுடனும் பச்சை நிற வர்ண பூச்சுக்கள் பூசிய மதில்கள் , வீடுகள் என காணப்பட்டன. அவை இராணுவ முகாம்களாக இருந்து பின்னர் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது என்பது புலனாகிறது. இருந்த போதிலும் இன்னும் சில வீடுகளை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளார்கள்.

அந்த வீதி ஊடாக சென்று, மருதநகர் பிள்ளையார் கோவிலடியில் " அந்த அரசியல் கைதியின் மனைவி வீடு எங்கே ?" என கேட்டால் " யார் அந்த தைக்கிற பிள்ளையின் வீடா?" என வீட்டினை அடையாளம் காட்டினார்கள்.

"நல்ல பிள்ளை அநியாயமாக போட்டுது .. அந்தா அந்த சந்தியில் அந்த பிள்ளையின் பனர் தான் கட்டி இருக்கு அந்த பாதையால் போங்கோ " என பாதை காட்டி விட்டார்கள்.

குன்றும் குழியுமாக தார் என்றால் என்ன என்றே தெரியாத வீதியாக அந்த வீதி சென்றது. அந்த வீதியால் மருதநகர் D 4 பகுதியில் அமைந்துள்ளது உயிரிழந்த யோகராணியின் வீடு.

அந்த வீட்டில் ஒரு சில உறவினர்கள் மாத்திரமே நின்றனர். அது வரையில் அந்த வீட்டில் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணியும் அவரகளது பிள்ளைகளும், யோகராணியின் தாயுமே வசித்து வந்துள்ளனர். யோகராணியின் ஆண் சகோதர்கள் சிலவேளைகளில் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.

யோகராணி கிளிநொச்சியில் இருந்த 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்பவரை திருமணம் முடித்தார்.

அவர்களின் இல்லற வாழ்க்கை இரண்டு வருட கால பகுதியே மிகுந்த சந்தோஷத்துடன் கழிந்தன. மூத்த மகன் கனிரதன் பிறந்தான். இரண்டாவது மகளான சங்கீதா பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வேலை விடயமாக சென்ற ஆனந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு பிலியந்தலை பகுதியில் கடந்த 20

07ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் ஆனந்தசுதாகரனின் பங்களிப்பு உள்ளதாக பொலிசாரால் கொழும்பில் வைத்து ஆனந்தசுதாகரன் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணைகளை அடுத்து பஸ் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றால் ஆனந்தசுதாகரன் குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.

கணவன் சிறையில் இருக்கும் போது யோகராணியே தனது இரு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். ஒரு பெண்ணாக தனது குடும்ப சுமையை தனியே தாங்கினார்.

வீட்டில் இருந்து ஆடைகள் தைத்து கொடுப்பதன் ஊடாகவும் வீட்டில் வளர்த்த ஆடு மற்றும் 4 கோழிகள் ஊடாக வரும் வருமானத்தையும் வைத்து தனது தாயாருடன் இருந்து இரு பிள்ளைகளையும் படிப்பித்தார்.

அவர்களின் மூத்த மகனான ஆனந்தசுதாகரன் கனிதரன் கிளிநொச்சி கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 07ஆம் கல்வி கற்று வருகின்றார். இரண்டாவது மகளான ஆனந்தசுதாகரன் சங்கீதா தரம் 05 கல்வி கற்று வருகின்றார். இந்த வருடம் புலமை பரிசு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற வேண்டும் என முயற்சியுடன் கற்று வருகின்றார்.

தனது இரு பிள்ளைகளையும் யோகராணி காலையில் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று பாடசாலையில் இறக்கி விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து மதிய சாப்பாடு செய்வதுடன் வீட்டில் இருந்த வாறே தையல் வேலைகளிலும் ஈடுபடுவார்.

அவர்களுக்கான வீட்டு திட்டம் கிடைக்க பெற்று வீட்டினை கட்டும் போது யோகராணி இந்த புது வீட்டில் நான் எனது கணவர் பிள்ளைகள் என சந்தோஷமான புது வாழ்க்கையை வாழுவோம் என பலத்த எதிர்ப்பார்ப்புடன் தான் வீட்டினை கட்டி முடித்தார்.

ஆனால் அவரின் எதிர்பார்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி தகர்ந்தது. ஆனந்தசுதகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்து.

அன்றுடன் யோகராணியின் எதிர்ப்பார்ப்புகள் தகர்ந்ததுடன் சிறுவயதில் இருந்தே ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவர் , கணவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை அடுத்து தனது உடல் நலத்தில் அக்கறை கொள்ளாது உணவை தவிர்த்து யோசனைகளில் மூழ்கி போனார்.

சில வேளைகளில் உணவை தட்டில் போட்டு கதிரையில் இருந்து சிறிது உணவை உண்ட பின்னர், உணவு தட்டுடன் வெற்றுசுவரை நோக்கி ஆழ்ந்த யோசனையில் இருப்பார். அவரின் தாயார் வந்து கேட்ட பின்னரே யோசனையில் இருந்து மீள வருவார்.

இவ்வாறு உடல் நலத்தில் அக்கறை கொள்ளது ஆழ்ந்த யோசனைகளில் உணவை தவிர்த்து இருந்தமையால் நோயின் தீவிர தாக்கத்திற்கு இலக்கானார். அந்நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

புதிதாக கட்டிய வீட்டில் கணவர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ ஆசைபட்ட யோகராணியின் உடல் அந்த புது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தவே கணவரை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

தந்தை கைது செய்யப்படும் போது மூத்த மகன் கனிதரன் ஒரு வயது குழந்தை இரண்டாவது பிள்ளையான சங்கீதா தாயின் வயிற்றில் எட்டுமாத சிசுவாக இருந்தார்.

வீட்டுக்கு வந்த தந்தையை மகன் கண்ட போதிலும் தந்தையுடன் சேர்ந்து இருக்கவோ , அவருடன் கதைக்கவோ முடியாத நிலையில் மூத்த மகன் கனிதரன் தாயின் இறுதி நிகழ்வில் ஈடுபட்டு இருந்தான்.

மகள் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பிறந்தததில் இருந்தே தந்தையின் அரவணைப்பை அனுபவிக்காத சங்கீதா அன்று முதல் முதலாக தனது பத்து வயதில் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

மகள் பிறந்ததில் இருந்தே அவளை தூக்கி அரவவனைக்க முடியாத நிலையில் இருந்த தந்தையும் அன்றைய தினமே மகளை தூக்கி மடியில் இருந்தி வைத்திருந்தார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன பேசுவது என தெரியாத நிலையில் பார்வையாலே சில நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள்.

மனைவியின் இறுதி நிகழ்வில் வெறும் மூன்று மணி நேரமே ஆனந்தசுதாகரனால் கலந்து கொள்ள முடிந்தது. யோகராணியின் இறுதி கிரியைகள் முடிவடைந்து உடல் தகனத்திற்காக உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது , அவரது மூத்த மகன் சுடுகாடு நோக்கி தாயின் பூதவுடலுடன் சென்று விட , தந்தையை அழைத்து வந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீள தந்தையை சிறைக்கு அழைத்து செல்ல முயன்ற போது ,பத்து வருட காலமாக தந்தையின் அரவணைப்பு இல்லாது வாழ்ந்த சங்கீதாவும் தந்தையுடன் சிறைக்கு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார்.

" நான் விரைவில் வெளியே வருவேன். நீங்க நல்லா படியுங்க அண்ணாவுடன் இருங்க" என ஆறுதல் வார்த்தை கூறி தந்தை சிறைச்சாலை நோக்கி சென்றார்.

அன்றில் இருந்து தந்தையின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறாள் சங்கீதா. தந்தையை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி , ஜனாதிபதியின் மகள் ஆகியோருக்கு கடிதமும் எழுதினார்கள். அந்த பிஞ்சுகள் இரண்டும். அந்த பிஞ்சுகள் இரண்டும் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் கோரிக்கையும் விடுத்தள்ளன.

பிஞ்சுக்களின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அப்பாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அந்த பிஞ்சுகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

தற்போது அவர்களின் வேண்டுதல் எல்லாம் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.. ஜனாதிபதி கொடுத்த நம்பிக்கையில் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.

மூத்த மகன் கனிதரன் தான் ஒரு மென்பொருள் பொறியியலாளனாக வர வேண்டும் என்பதே இலக்கு என நம்பிக்கையுடன் கூறுகிறான். இளைய மகள் சங்கீதா தான் ஒரு வைத்தியராக வேண்டும் என்பதே தனது இலக்கு என்கிறாள்.

" அம்மா இருக்கும் வரை அவா தான் எங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டே ஸ்கூலில விடுவா , இரவில பாடம் சொல்லிக்கொடுப்பா , இப்ப அம்மா இல்லை. நாங்கள் அம்மாம்மாவுடன் தான் இருக்கிறோம். அவாக்கு ஏலாது இப்ப எங்களை ஸ்கூலில கொண்டே விட யாரும் இல்லை. இரவில பாடம் சொல்லிக்கொடுக்கவும் யாரும் இல்லை. எங்கட அப்பாவை விட்டால் அவரோட நாங்கள் ஸ்கூலுக்கு போவோம். இரவில பாடம் சொல்லிக்கொடுப்பார். எங்களுக்கு எங்கட அப்பாவை விட்டா நாங்க நல்லா படிப்போம் என்கிறார்கள்" கனியும் சகீயும்.

"அவள் இருக்கும் வரையில் ஏதோ தைச்சு கொடுத்து உழைச்சு பிள்ளைகளை பார்த்தால் இப்ப எனக்கும் ஏலாது என்னென்று இந்த பிஞ்சுகளை ஆளாக்க போறேனோ தெரியா ..இப்ப இரவில திடீர் திடீரென மூத்தவன் எழும்பி தாயின் ஞாபகத்தில அழுவான். அவன் அழுகிறதை பார்த்து இவளும் அழ தொடங்கிடுவாள். இரண்டு பேரையும் சமாதானபடுத்த என்னால் முடியாது உள்ளது. பிள்ளைகளில் தகப்பனை விட்டா அவர் தன் பிள்ளைகளை பார்ப்பார். " என கண்ணீருடன் கூறுகிறார் யோகராணியின் தாய்.

அந்த பிஞ்சுகள் தமது இலக்கினை அடைய , அந்த பிஞ்சுகளின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கப்படுமா ?? மலரவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டில் அந்த பிஞ்சுகள் தந்தையுடன் சேருவார்களா ? ஜனாதிபதி அதற்கு வழிசமைத்து கொடுப்பாரா ?

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…