500 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறிய நடிகை

தோனி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் திஷா பதானி. இவர் தற்போது டைகர் ஷ்ஃபுராவுடன் ஜோடி சேர்ந்து பாகி-2 படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரைக்க வந்தது.
மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள சங்கமித்ரா படத்திலும் நாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.
நான் நடிப்பு பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து நடிக்க ஆசைப்பட்டு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வெறும் 500 ரூபாயுடன் மும்பைக்கு தனியாக வந்தேன்.