துபாயில் ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்: அடேங்கப்பா இத்தனை கோடியா?

துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஜான் என்பவருக்கு லாட்டரி சீட்டில் 21.21 கோடி ரூபாய் விழுந்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்.
கேரளாவை சேர்நத் ஜான் வர்கீஸ் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் துபாயில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 3ம் திகதி அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். லாட்டரி குலுக்கலில், இவருக்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.21.21 கோடி.
கோடிக்கணக்கான பணம் கிடைத்துள்ளது பெரிய அதிர்ஷ்டம், இதனை என்னால் நம்ப முடியவில்லை.
பரிசு பணத்தில் முதலில் ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டும். என் குழந்தைகளின் கல்விக்கு பணத்தை முதலீடு செய்ய இருக்கிறேன். அதில் ஒரு பகுதியை கொண்டு சிலருக்கு உதவ இருக்கிறேன் எனறு கூறியுள்ளார்.