நாயகியாகிறார் ‘கில்லி’யில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபர்

‘கில்லி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த ஜெனிபர் தற்போது சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘கில்லி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜெனிபர். இவர் அந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். அதில் விஜய்யுடன் அவர் செய்த கலாட்டா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
பின்னர் ஜெனிபர், தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். படங்களிலும் சிறிய பாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘கில்லி’ படத்தில் சிறுமியாக இருக்கும்போதே நடிப்பில் அசத்தினார். விரைவில் அவர் தமிழ் படத்திலும் நாயகி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.