நடுவானிலிருந்து 200 பேருடன் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்
200 இராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அல்ஜீரியாவில் Iliushin Il-76 என்ற இராணுவ விமானம் 200 இராணுவ வீரர்களுடன் இன்று காலை உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் Boufarik விமானநிலையத்திற்கு அருகில் உள்ள Boufarik-Blida தேசி நெடுஞ்சாலை அருகில் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், விபத்து நடந்த பகுதிக்கு 14 ஆம்புலன்சுகள், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானம் தரையிரங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 105 பேர் இறந்துள்ளது உறுதிசெய்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.