இறந்துபோன பெற்றோருக்கு பிறந்த ஆண் குழந்தை

சீனாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் இறந்து போன தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சீனாவை சேர்ந்த குறித்த தம்பதியர் செயற்கை கருத்தரித்தல் (In vitro fertilisation) முறைப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து, தங்களது கருமுட்டைகளை சீனாவில் உள்ள Nanjing என்ற மருத்துவமனையின் உதவியுடன் பாதுகாத்து வந்துள்ளனர்.
ஒரு திரவ நைட்ரஜன் தொட்டியில் கருமுட்டைகள் பாதுகாக்கப்பட்டன. இதற்கிடையில், 2013 ஆம் ஆண்டில் நடந்த விபத்து ஒன்றில் தம்பதியினர் இறந்துவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, விபத்தில் இறந்துபோன குறித்த நபரின் தாய், சட்டப்படி மருத்துவமனையில் உதவியோடு கருமுட்டைகளை வாங்கியள்ளார்.
வாடகை தாய் உதவியோடு பேரப்பிள்ளையை பெற்றெடுக்க முடிவு செய்த பாட்டி, ஆசிய நாடான Laos நாட்டில் ஒரு பெண்ணை தெரிவு செய்துள்ளார்.
ஆனால் விமானத்தின் மூலம் நைட்ரஜன் திரவத்துக்குள் வைக்கப்பட்டிருந்த கருமுட்டைகளை எடுத்துசெல்வதற்கு அனுமதி கிடையாது என்பதால், கார் மூலம் கருமுட்டைகள் எடுத்துச்செல்லப்பட்டன.
பின்னர், வாடகையின் தாயின் உதவியோடு கடந்த 2017 ஆம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.