குண்டாக இருந்த சீரியல் நடிகை மஞ்சரியா இது?
சின்னத்திரையில் கோலங்கள், அண்ணாமலை, உறவுகள் ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சரி. தற்போது சிங்கப்பூரில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிங்கப்பூரிலும் சீரியல்களில் நடித்து வருகிறேன், தமிழில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன், ஆனால் வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார். முன்பு குண்டாக இருந்த நான் தற்போது உடல் எடையை குறைத்துள்ளேன். ஹேர்கட் செய்து கொண்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். இவருடைய தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.