சிம்புவுக்கு இருக்கறது கூட ரஜினி, கமலுக்கு இல்லை

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கமும் அறவழி போராட்டம் நடத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தது.
இதனையடுத்து அதே தினத்தில் சிம்பு செய்தியாளர்களை சந்தித்து அரசியல்வாதிகளால் தான் பிரச்சனை, அவர்கள் இல்லமால் இரு மாநில மக்களும் பேசி இதில் தீர்வு காண வேண்டும். கர்நாடக மக்களும் தாய்மார்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என கூறியிருந்தார்.
சிம்புவின் இந்த பேச்சுக்கு கர்நாடக மக்களிடமும் தமிழக மக்களிடமும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த வேலையில் கன்னட நடிகரான ஆனந்த் ராக், நான் தமிழகர்களுக்கு எதிரானவன் இல்லை, தமிழகர்கள் நல்லவர்கள், மென்மையானவர்கள்.
சிம்பு காவிரி விவகாரம் பற்றி பேசியிருந்தது சரியானது, சிம்புவிடம் இருக்கும் முதிர்ச்சி கூட ரஜினி, கமலிடம் இல்லை. இருவருமே பழைய அரசியல் கட்சிகளின் பாணியை பின்பற்றுகிறார்கள். அது எனக்கு அதிர்ச்சியளித்தது.
கூட்டாட்சி நாடான இந்தியாவில் ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு அவசியம், தமிழகத்துக்கு அது தெரியவில்லை, நாம் தான் சொல்லி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.