சதியைப் பற்றிப் பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித யோக்கியமும் கிடையாது -- சுரேஸ் தெரிவிப்பு

ஆசிரியர் - Sellakumar

சதியைச் செய்பவரே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. சதியைப் பற்றிப் பேசுவதற்கு; சுமந்திரனுக்கு எந்தவித யோக்கியமும் கிடையாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்து மிக நீண்ட நாட்களின் பின்னர் தான் சபைகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபைகள் அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு கட்சிகளோ எவையும் எங்களுடன் பேச்சுவார்த்தை எதனையும் நடத்தவில்லை. வடக்கு கிழக்கு முழுவதும் எங்களுக்கு ஆசனங்கள் இருக்கின்றன.

அவ்வாறிருக்கையில் சபைகளை அமைப்பதற்கு பல பேருக்கு எங்களது ஆதரவுகள் தேவையாகவும் இருந்தன. ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் பேசி சபைகளை அமைப்பது தொடர்பாக எங்களுடன் பேசியிருக்கவும் இல்லை. அவ்வாறு பேசுவதற்கு தயாராகவும் அவர்கள் இல்லை. நாங்கள் ஏறத்தாழ ஒன்றரை மாதத்திற்கு முன்னர் இது குறித்த கட்சியின் செயலாளர் கூட்டமைப்பு உட்பட எவரும் எங்களுடன் பேச வேண்டுமானால் அவ்வாறு பேசுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால் அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு யாரும் முன்வரவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் ஒரு பொதுவானதொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். அதன் பிரகாரமே யாழ் மாவட்டத்திலும் கிளிநொச்சியிலும் யாருக்கும் ஆதரவு இல்லாத நடுநிலையை வகித்திருந்தோம். இறுதியாக நடைபெற்ற வவுனியா நகர சபையில் நடந்த தேர்தலில் முக்கியமாக முஸ்லிம் தரப்பினர்கள் அல்லது ஆளுந்தரப்பினர்கள் வந்துவிடுவார்கள் என்ற காரணத்தினால் சிவில் சமூகத்தினால் எங்களுக்கு பல வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வளவு நடந்தும் கூட கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசுக்கட்சியினர் அல்லது கூட்டமைப்பு என்ற பெயரில் இருக்கக் கூடியவர்கள் எம்முடன் இதுபற்றி கலந்தாலோசிக்கவில்லை. ஆனால் என்னுடன் சிவாஐிலிங்கம் பேசியிருந்தார். ஆனால் கூட்டமைப்பு சார்பாக அவரது பேச்சுக்கள் இருந்ததாக நான் நம்பவில்லை. ஏனெனில் அவருடைய கருத்து ரெலோவின் கருத்து என்று மாவை சேனாதிராசாவும் ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த வகையில் வவுனியா கூட்டத்திலும் கூட நாங்கள் நடுநிலை வகிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் அங்கு நிலைமைகளைப் பார்க்கின்ற போது தமிழரசுக் கட்சியினர் தோல்வியடைந்து அரச ஆளும்கட்சியினரே வெல்லக் கூடிய சூழலும் அங்கிருந்ததை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவ்வாறான சூழலில் நாங்கள் 3 பேர் தான் இருந்தாலும் கூட போட்டியிட வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நிர்ப்பந்தம் எமக்கு சிவில் சமூகத்தாலும் பொது மக்களாலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நாங்கள் போட்டி போட்டோம். எமது கொள்கையின் பிரகாரம் நாங்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடியாது. அதே போன்று வேறு எவருக்கும் வாக்களிக்க முடியாது. அந்த வகையில் போட்டி போட்டதில் நாம் நியமித்த வேட்பாளர் ஏதோவொரு வகையில் வெற்றி பெற்றிருக்கின்றார். ஆகவே இது எந்தவிதமான சதியும் அல்ல.

இதற்கு மேலதிகமாக சதியைப்பற்றி பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவிதமான யோக்கியமும் கிடையாது. அவர் பாராளுமன்றுக்கு போனதில் இருந்து இன்று பல்வேறுபட்ட பிரதேசசபைகளை உருவாக்குவதில் பெரும் சதிகளை அவர் நடத்தியிருக்கின்றார். இங்கே சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபை உட்பட பல சபைகளில் பெரும்பான்மை இல்லாத போதும் கூட ஏனையோரின் ஆதரவைப் பெற்று அங்கே ஆட்சியமைத்திருக்கின்றார்.

ஆகவே அவ்வாறான சூழ் நிலையில் சதியைச் செய்பவரே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவது எந்தவிதமான அர்த்தமும் இல்லாத விடயம். அது மாத்திரமல்லாமல் எல்லா இடங்களிலும் தாங்கள் ஆட்சியமைக்க விரும்புவதும் அவ்வாறு தாங்கள் ஆட்சியமைக்கா விட்டால் அது சதி என்று முத்திரை குத்துவதும் அது சதி செய்பவர்களின் இயல்பாக இருக்கலாமே தவிர இதில் வேறு எந்தவிதமான விடயமும் அல்ல.

ஆகவே வவுனியா நகர சபை என்பது தமிழ் மக்களின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டுமென்ற காரணத்திற்காக நாங்கள் மிக சிறுபான்மையாக இருந்த போதிலும் வேறு வழியில்லாமல் நாங்கள் அதில் போட்டியிட்டு ஆண்டவன் சித்தமாக நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் எதிர்பார்க்கவில்லை.  வெற்றி பெற்றிருப்பதால் வவுனியா நகர தமிழ் மக்களுக்கு இயன்றவரை நல்லதொரு ஆட்சியைக் கொடுக்க முடியுமென்று எதிர்பார்க்கின்றோம் என்றார்..

-எஸ்.நிதர்ஷன்-

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…