ரூ.86 ஆயிரம் கொடுத்தது ஒரு வாழைப்பழம் வாங்கிய பெண்
இங்கிலாந்தில் வாழைப்பழம் ஒன்றின் விலை £930.11 (86,897.27 ரூபாய்) என்ற ரசீதை பார்த்த தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.
நாட்டிங்காமில் வசித்து வந்த பார்பி கார்டன் என்ற பெண்மணி, Asda என்ற சூப்பர் மார்க்கெட்டில் ஒன்லைன் மூலம் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
அதில், பொருட்களுக்கான பணத்தை கிரிடிட் கார்டு மூலம் செலுத்தியுள்ளார். பொருட்கள் மற்றும் ரசீது வீட்டுக்கு வந்தவுடன், வாழைப்பழத்தின் விலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஏனெனில், பழத்தின் விலையாக £930.11 போடப்பட்டிருந்தது. எனது கிரிடிட் கார்டில் மோசடி நடந்துவிட்டதோ என அச்சத்தில், மார்க்கெட்டை தொடர்பு கொண்டபோது, கணனியில் ஏற்பட்ட கோளாறு என்றும் வாழைப்பழத்திற்கான உரிய விலை மட்டுமே எடுத்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளனர்.
எங்கள் கடையின் வாழைப்பழம் மிகவும் சுவையாக இருக்கும், அதே நேரத்தில் எங்கள் கணனியில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொண்டோம். இந்த தவறினை எங்களுக்கு சுட்டிகாட்டிய பார்பிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிமேல், இப்படி ஒரு தவறு நடக்காது என சூப்பர்மார்க்கெட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.