இனப்பிளவால் நாடு சீர்குலையும் : சபாநாயகர் கரு ஜயசூரிய
இனம் என்ற ரீதியில் பிளவுபட்டிருக்கும் நாடு ஒன்று சீர்குலைந்துவிடும் . இவ்வாறான நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்றும் உலகில் அபிவிருத்தி கண்ட அனைத்து நாடுகளும் அவ்வாறான அபிவிருத்தி நிலையை அடைந்தமை நாடுகளுக்கிடையே உள்ள இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பயன்படுத்தியே என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
எமது மத்தியிலுள்ள தேசிய பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வேண்டும் . இலங்கையில் மத மற்றும் தேசிய நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக செயற்படும் பாராளுமன்றக்குழுவினால் ஏற்பாடு செய்திருந்த சர்வமதக்கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் இடம்பெறும் சர்வமத சர்வகட்சியின் இந்த கலந்துரையாடல் வரலாற்று பயணத்திற்கும் நாட்டின் சுபீட்சத்திற்கும் வித்திடும் ஒன்றாக அமைய வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார் .
கடந்த மாதத்தில் அம்பாறையிலும் அதனைத்தொடர்ந்து கண்டியிலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்வத்தினால் நாட்டுக்கும் எமது பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோன்று உலகின் மிகவும் கௌரவத்தை பெற்றிருந்த எமது நாட்டின் நற்பெயருக்கும் இதனால் பெரும் களங்கம் ஏற்பட்டது என்று சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்படுவது முக்கியமாகும் என்றும் வலியுறுத்தினார்.
ஒழுக்கத்தை மதிக்கும் நாட்டை உருவாக்குதல் :ஒழுக்கத்தை கொண்ட வீடு நகரம் கிராமம் பிரதேசம் போன்றவற்றினால் நாடு வளர்ச்சியடையும் அவ்வாறு இல்லாத பட்டசத்தில் சீர்குலைவு ஏற்படும்.
உரிய நேரத்தில் உரியபணிகளை மேற்கொள்ள தவறுவோர்கள் இலங்கை மக்கள் என்ற ரீதியில் இது பின்னடைவாகும்.
எம்மால் உரியநேரத்தில் உரிய பணியை மேற்கொள்ளாமை ஒரு குறைபாடாகும். இந்த குறைபாட்டை நாம் விரைவாக நீக்கிகொள்ளவேண்டும்.
இந்த எடுத்துக்காட்டை கவனத்தில்கொள்ளாவிட்டால் பின்னடைவோம் என்றும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.