தோளில் ஏறி தலையில் குந்தும் தென்னிலங்கை அரசியல் கட்சி : சாடுகிறார் சரா எம்.பி.

ஆசிரியர் - Editor
தோளில் ஏறி தலையில் குந்தும் தென்னிலங்கை அரசியல் கட்சி :   சாடுகிறார் சரா எம்.பி.

தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் ஆதரவைக் கோரிப் பெற்றுக்கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறமொதுக்கிவிட்டு, வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்ற முனையும் ஊடுருவல் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளைச் சிங்கள மயப்படுத்தும் நயவஞ்சக ஆக்கிரமிப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே நாம் கருதுகிறோம். வவுனியா நகரசபை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் நடந்துகொண்ட முறையைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி வவுனியா நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதிலும் அவை ஆட்சியமைப்பதற்குப் போதுமானவையாக இருக்கவில்லை. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், வவுனியாவிலும் ஆதரவு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஐ.தே.கவின் ஆட்டிப்படைக்கும் நோக்கம்

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி தங்களைவிடக் குறைந்த ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கி, ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் அவர்களை அமர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது பெயரளவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை அதிகாரத்தில் கொண்டு அவர்களைத் தங்கள் பெரும்பான்மை மூலம் ஆட்டிப்படைக்கும் உள்நோக்கம் கொண்டதென்றே நாம் நம்புகிறோம்.

கடந்த காலத்தில் வரவு - செலவுத் திட்டம், தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை கூட்டு அரசுக்கு உறுதியாக வழங்கியிருந்தது. இந்த ஆதரவானது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வழங்கப்பட்டதல்ல. இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பின் மூலம் சில சாதகமான வாய்ப்புக்களை உருவாக்க முடியுமென்ற அடிப்படையில் கூட்டு அரசின் உறுதிதன்மையை சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டதாகும். அதே நோக்கத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களில் அரசுக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்பதை நாம் மறுக்கவில்லை.

பலனை அனுபவிக்கிறோம்

அதன் காரணமாக கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி. மட்டுமின்றி ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை வெற்றிகொள்ள முடிந்தது.

அந்த வகையில் வவுனியா நகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற போதிலும் ஆட்சியமைக்குமளவுக்கு அதிகாரத்தைப் பெறமுடியவில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகக் கடமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு. ஆனால் அவர்களோ பலவீனமான தமிழர் விடுதலைக் கூட்டணியை அதிகாரத்தில் அமர்த்தியதன் மூலம் நகரசபையின் ஆதிக்கத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குடியேற்றங்கள்

தமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல்வேறு சட்டபூர்வமான, சட்டபூர்வமற்ற சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது, அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அந்த அதிகாரத்தைப் பாவித்து மேலும் குடியேற்றங்களை விரிவாக்குவது இந்த வழிமுறைகள் மூலம் அந்தப் பிரதேசங்களை முழுமையாகச் சிங்களமயப்படுத்துவது என்பது இலங்கையின் ஆட்சியாளர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வரும் நயவஞ்சகமான தந்திரோபாயமாகும்.

அந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே ஐக்கிய தேசியக் கட்சி, வவுனியா நகர சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தள்ளது. இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பியினர் ஆகியோரும் துணைபோகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பலமாக இருந்தே ஆதரவு பெற்றோம்

அப்படியானால் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனையோரின் ஆதரவைப் பெறவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.

நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றோம். வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றோம். இதில் ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்றமை தொடர்பாக எமக்குள் கருத்து முரண்பாடு உண்டு என்பதைச் சகலரும் அறிவார்கள். ஆனால் எவரின் ஆதரவைப் பெற்றபோதும் நாம் பலமான நிலையில் இருந்து கொண்டு எவரும் எம்மை வழி நடத்தமுடியாத நிலையிலேயே இருந்து கொண்டே அதிகாரங்களைக் கைப்பற்றினோம் என்பதே முக்கியமான விடயம்.

கந்தளாய், சேருவில, அம்பாறை, மணலாறு போன்ற பல பகுதிகள் மேற்கண்ட வழிமுறைகள் மூலம் சிங்கள மயப்படத்தப்பட்டன. மேலும் சிங்களமயம் விரிவாக்கப்படுகின்றது என்பதை நாம் மறந்துவிட முடியாது. வவுனியா வடக்கின் நுழைவாயிலான வவுனியா மாவட்டத்தின் பிரதான நகரமாகும். இது சிங்களமயப்படுத்தப்படுவது எவ்வளவு பேராபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

வவுனியா மக்கள் சிங்களமயமாக்கலுக்கு எதிராக விழிப்புடன் செயற்பட்டு வரக்கூடிய பேராபத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே சிங்கள அரசியல் அதிகாரிகள், சில சிங்களக் குடியேற்றங்கள், எல்லைக் கிராம ஆக்கிரமிப்புக்கள், இராணுவமுகாம்கள், பௌத்த விகாரைகள் என்பன மூலம் சிங்களமயப்படுத்தலுக்கான அத்திபாரம் அமைக்கப்பட்டது. நகரசபை மூலம் அவற்றை மேலும் முன்னெடுக்கும் ஆபத்து உண்டு.

தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் பேதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இந்த விடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம் - என்றுள்ளது. 

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…