வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வும், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தின் கன்னி அமர்வும் இன்று காலை புத்தூரில் அமைந்துள்ள வலி. கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
வரவேற்பு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவர் எஸ். லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச சபை வாயிலிலிருந்து உறுப்பினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மதகுருமாரது ஆசியுரைகளுடன், பால் காய்ச்சி கொண்டாடப்பட்டது.வலி. கிழக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு சபையின் தவிசாளர் தி. நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது.
செய்தியாளர் : தீபன்
Tamilan24