மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் குற்றச்சாட்டு

ஆசிரியர் - Editor II
மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காகவும் தனது அந்த விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காகவும் கூட்டமைப்பினருக்கு தொடர்ந்தும் வக்காலத்து வாங்கும் ஐயூப் அஸ்மின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்பிலும் கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் வெளியிட்டுவரும் தேவையற்ற, மலினமான கருத்துக்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் வன்னி மாவட்ட ஐ.தே.க முன்னணி அமைப்பாளருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையே மாகாண சபை தேர்தல் காலத்தில் இடம்பெற்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஐயூப் அஸ்மினுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்கியது. கூட்டமைப்பின் போனஸில் வழங்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர் பதவியை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் மீறி தொடர்ந்தும் வலுக்கட்டாயமாக நிலைப்படுத்தி வைத்திருக்கும் ஐயூப் அஸ்மின், தனது நேர்மையான அரசியல் நடவடிக்கை தொடர்பில் தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு கொடுத்த சத்தியத்தையும் வாக்குறுதியையும் மீறி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற இஸ்லாமிய நெறிமுறைக்குப் புறம்பாக போனஸ் ஆசனத்தின் மூலம் அரசியல் செய்து வரும் ஐயூப் அஸ்மின், மக்களாணை பெற்று அரும்பணியாற்றி வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீனை விமர்சிப்பதற்கோ குற்றம் காணுவதற்கோ எந்தவிதமான அருகதையும் அற்றவர்.

வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூஜா தூக்கி வரும் அஸ்மின் அவ்வாறான நடவடிக்கை தான் சார்ந்த சமூகத்தை மீண்டும் கொத்தடிமைகளாக்கும் திட்டங்களுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீனும் துணை போக வேண்டும் என்று நினைகின்றாரா? அதிகார பகிர்வு, தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றில் மக்கள் காங்கிரசுக்கு ஒரு தெளிவான பார்வை உண்டு. அக்கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் இது தொடர்பில் நடாத்திய அரசியல் போராட்டங்களின் பிரதிபலிப்புக்கள் இடைக்கால அறிக்கையில் தெளிவாக பதியப்பட்டுள்ளன.

மாகாண சபை எல்லைப்பிரிப்பு உள்ளுராட்சி தேர்கல் முறை குறைபாடுகள் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் அஸ்மின், மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் இந்த சீர் திருத்தங்களுக்கு கர்த்தாவாக இருந்து பாராளுமன்றத்தில் மலையக மற்றும் முஸ்லிம் தலைவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்த போது மௌனமாக இருந்து சட்ட மூலத்துக்கு ஆதரவாக கையை உயர்த்திய தனது புதிய எசமானர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது சுட்டு விரலை நீட்ட மறுப்பதேன்?.

வடக்கு மக்களின் காணிகளை சிங்கள அரசு கொள்ளையடித்ததாக அபயக்குரல் எழுப்பும் அஸ்மின், தான் சார்ந்த சமூகத்தின் பரம்பரைக் காணிகளை இனவாதிகள் அபகரித்த போதும் மீள் குடியேற்றத்துக்கு தடையாக இன்னும் செயற்படும் போதும் வாளாவிருப்பதேன்?

முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தொடர்ந்தும் தடையாக இருந்து வரும் வட மாகாண சபைக்காக பரிந்து பேசும் அஸ்மின், முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை முன்னெடுக்க ஏதாவது முயற்சித்துள்ளாரா? தனது பதவியைப் பயன்படுத்தி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த ஏதாவது உதவிகள் செய்திருந்தால் அவர் அதனை வெளிப்படுத்த வேண்டும். போனஸ் ஆசனத்தின் மூலம் பதவியை பெற்றுள்ள அஸ்மின் மக்களாணை, அரசியல் அங்கீகாரம் என்ற சொற்பதங்களுக்கெல்லாம் தூரமானவர்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு துன்பங்கள் ஏற்படும் போதெல்லாம் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காது தேர்தல் காலங்களில் மட்டும் இந்த பிரதேசங்களுக்கு வந்து “ஜால்ரா” போடுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள். அந்த கட்சிகளுக்காக அற்ப பதவிகளுக்காக ஆசைப்பட்டு அஸ்மின் இப்போது “ஜால்ரா” போடுகின்றார்.

மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துன்பங்களுக்கு கைகொடுத்து துயர்களை நீக்கி வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் தலைமையை ஏற்று தமிழ் மக்கள் மாந்தை கிழக்கிலும் மாந்தை மேற்கிலும் தெளிவான ஆணையை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. மக்கள் காங்கிரஸ் அந்த சபைகளை கைப்பற்றி தமிழ் பெருமகன்கள் இருவரை ஆட்சி பீடத்தில் ஏற்றியுள்ளது. இதன் மூலம் அந்த பிரதேச மக்களுக்கு தொடர்ந்தும் விடிவைப் பெற்றுக் கொடுக்க மக்கள் காங்கிரஸ் திடசங்கற்பம் கொண்டுள்ளது. இதனை அஸ்மின் இனியாவது தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.; இவ்வாறு றிப்கான் பதியுதீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : பாறுக் ஷிஹான்

Tamilan 24

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:54 AM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
யுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா?

மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 04:01 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...

22nd, Apr 2018, 08:53 AM
மைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு

யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...

21st, Apr 2018, 06:22 PM
இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:33 PM
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது

​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:31 PM
மேலும் செய்திகள்…
கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை!

​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 03:32 PM
கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964

​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926

​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:22 PM
பெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை

​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:17 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
மேலும் செய்திகள்…
ஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்

​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
விசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்

​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:21 PM
ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:20 PM
தளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா

 VideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...

19th, Apr 2018, 02:36 PM
மேலும் செய்திகள்…
கோடையில் கண்களைக் காத்திட...

​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:18 PM
யோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்

​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:16 PM
எவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்?

​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...

21st, Apr 2018, 12:15 PM
நெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்

 Photo​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? மேலும் படிக்க...

20th, Apr 2018, 11:46 AM
மேலும் செய்திகள்…
காஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:29 AM
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:28 AM
பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது?- தேவயானி வேதனை

​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

21st, Apr 2018, 11:27 AM
மேலும் செய்திகள்…