பிரித்தானியாவில் நச்சுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முன்னாள் உளவாளி மகள் வீடு திரும்பினார்
பிரித்தானியாவில் நச்சுத் தாக்குதலால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் உளவாளியின் மகள் யூலியா கோமாவில் இருந்து மீண்டு பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1990களில் ரஷ்ய ராணுவப் படையில் உளவுப் பிரிவில் பணியாற்றியவர் செர்கெய் க்ரிஸ்பால், பிரிட்டனின் எம்ஐ6-லும் இணைந்து பிரிட்டனுக்கு ரஷ்ய ராணுவ ரகசியங்களை அளித்து வந்திருக்கிறார்.
இதை கண்டுபிடித்த ரஷ்ய ராணுவம் 2004ஆம் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
உளவாளிகள் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் க்ரிஸ்பால் பிரிட்டனில் வந்த நிலையில், அவரும் அவரது மகளும் கடந்த மாதம் 4ஆம் திகதி நச்சு வாயுவால் தாக்கப்பட்டனர்.
We congratulate Yulia Skripal on her recovery. Yet we need urgent proof that what is being done to her is done on her own free will.
— Russian Embassy, UK (@RussianEmbassy) April 10, 2018
இருவரும் கோமாவில் இருந்த நிலையில் தற்போது யூலியா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என பிரித்தானியா குற்றம்சாட்டிய நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்கள் நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
இந்தக் குற்றசாட்டை மறுக்கும் ரஷ்யாவுக்கும் மற்ற நாட்டுகளுக்குமான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.