1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முத்தம்மா சுந்தரம்பிள்ளை

தாய் மடியில் : 27, Apr 1935 — இறைவன் அடியில் : 11, Jun 2017வெளியீட்ட நாள் : 12, Jun 2017
பிறந்த இடம் - யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் - கனடா
திதி : 11 யூன் 2017

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்தம்மா சுந்தரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை

அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை

ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!

ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!

இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர

ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு
ஒளி தந்த தாயே நீ மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!

எங்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டி நின்ற தாயே!

உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் நினைவுகளுடன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்குடும்பத்தினர்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.

உங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

info@tamilan24.com